Archive

Author Archive

மெரீனாவிற்கு போனா கால் மட்டும் நனைத்து விட்டு வாங்க! சாப்பிட்டா நேரா ஆஸ்பத்திரிதான்!!!

24,May, 2017 Leave a comment

மெரினா கடற்கரையில் உள்ள ஏராளமான உணவகங்களில் வெள்ளிக்கிழமை, உணவு பாதுகாப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய சோதனயில் சுமார் 140 கிலோ கெட்டுப் போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறைக்கு, மெரினா கடற்கரையில் விற்கப்படும் உணவு குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார் வந்ததை அடுத்து, அண்ணா சதுக்கம் முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள 300 உணவுக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

10 குழுவினர் அனைத்துக் கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பரிசோதித்த போது, கெட்டுப் போன மீன், காலாவதியான ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், அங்கீகாரமற்ற உணவுப் பொருட்கள், அழுகிய பழங்கள், பல முறைப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அகற்றினர்.

ஆனால், எந்த வியாபாரிக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
இவர்கள் யாருக்குமே உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இவர்களை எச்சரித்த விட்டுவிட்டோம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த ஆய்வில், 24 கிலோ கெட்டுப் போன மீன், 7 கிலோ காலாவதியான ஐஸ்க்ரீம், பிஸ்கட், 40 லிட்டர் காலாவதியான குளிர்பானம், மீண்டும் பயன்படுத்தப்பட்ட 31 லிட்டர் எண்ணெய், 4 கிலோ கலர்பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே 2014ம் ஆண்டு இதுபோன்றதொரு ஆய்வு நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு விற்பனையாகும் குடிநீரின் தரமும் கேள்விக்குறியாக இருப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதுபோன்ற உணவுகளை விற்கும் கடைகளில் இருக்கும் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டால் நடவடிக்கை எடுத்ததாக மாறிவிடுமா? இதுபோன்ற வியாபாரிகளை வெறும் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டால், இவர்கள் திருந்திவிடுவார்களா?

ஏன் இந்த உணவுக் கடைகளை மாநகராட்சி சீல் வைத்து மூட உத்தரவிடவில்லை. பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கும் செயலுக்கு மறைமுகமாக அரசு அதிகாரிகளும் ஆதரவு கொடுப்பதாகவே பொதுமக்கள் கூறுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் காலூன்றி இருப்பதும், கடைகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Categories: NEWS

தேனியில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

24,May, 2017 Leave a comment

தேனி;தேனி புது பஸ் ஸ்டாண்டில் தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய ஆய்வில் முத்திரையிடப்படாத 6 மின்னணு தராசுகள் மற்றும் 40 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி புது பஸ் ஸ்டாண்டில் பெட்டிக் கடைகள் மற்றும் ஓட்டல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. மதுரை, போடி, குமுளி, திண்டுக்கல் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் அதிகளவு கடைகள் நிறைந்துள்ளன. இவற்றில் குளிர்பானங்கள், தின்பண்டங்கள் பாலிதீன் பேக்கிங் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
போதை வஸ்துகள் அடங்கிய பாக்கெட்டுகளும் பயணிகளுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணா, ஆய்வாளர் பாண்டியராஜன், தொழிலாளர் நலத் துறை அலுவலர் ராஜ்குமார், தேனி உதவி ஆய்வாளர் பிச்சைக்கனி தலைமையில் இரு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் புது பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான குளிர்பானங்கள், தேதி குறிப்பிடாத உணவு தின்பண்டங்களின் பாக்கெட்டுகள், கெட்டுப்போன உணவு பொருட்கள் என 40 கிலோ காலாவதியான உணவு பொருட்களும், போதை வஸ்துகளும், பழக்கடைகள் மற்றும் சுவீட் கடைகளில் பயன்படுத்திய முத்திரையிடப்படாத மற்றும் எடை குறைவாக காண்பித்த 6 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காலாவதியான பொருட்கள் அருகில் உள்ள காலி இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ”கடந்த மாதம் மாவட்ட அளவில் வாரச்சந்தைகள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தராசுகள் குறித்து ஆய்வு செய்தோம். நுகர்வோரை ஏமாற்றும் வகையில் முத்திரையின்றியோ அல்லது எடை குறைவாகவோ வினியோகம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

Categories: DISTRICT-NEWS, Theni

செங்கல்பட்டு

24,May, 2017 Leave a comment

உளுந்தூர்பேட்டையில் மாம்பழங்கள் பறிமுதல்

24,May, 2017 Leave a comment

ULU MANGO RAID 23.05.17

Categories: DISTRICT-NEWS, Villupuram

உளுந்தூர்பேட்டையில் மாம்பழங்கள் பறிமுதல்

24,May, 2017 Leave a comment

ULU MANGO RAID 23.05.17

Categories: DISTRICT-NEWS, Villupuram

பிளாஸ்டிக் இலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

24,May, 2017 Leave a comment

Categories: DISTRICT-NEWS, Villupuram

முத்துபேட்டையில் காலாவதி திண்பண்டங்கள் அழிப்பு

24,May, 2017 Leave a comment

Dhinakaran - 22.05.2017 - Thiruvarur.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

நுகர்வோரை ஏமாற்றினால் பாரபட்சமின்றி நடவடிக்கை

19,May, 2017 Leave a comment

கோவை ;’நுகர்வோரை ஏமாற்றும் வணிக நிறுவனத்தினர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) அமுதா, நீலகிரி மாவட்டத்தில் மே, 10, 11ல் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திறனாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:சீசன் துவங்கியுள்ளதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர், நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் வியாபாரிகள் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
எடையளவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களில் அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். முறைகேடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நுகர்வோர் எளிதில் புகார் செய்ய, ‘TN–LMCTS’ என்ற ‘மொபைல் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கோவை மற்றும் குன்னுார் தொழிலாளர் இணை கமிஷனர்கள் மாரிமுத்து, தங்கவேல் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.இத்தகவல், தொழிலாளர்த்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories: NEWS

தயாரிப்பு தேதி இல்லாமல் பால் பாக்கெட் விற்பனை

19,May, 2017 Leave a comment