Archive

Archive for the ‘DISTRICT-NEWS’ Category

டாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

21,May, 2019 Leave a comment

நாகையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்கும் கூடங்களில் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சீலிடப்படாத  தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக,  நாகை சார் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் திங்கள்கிழமை புதிய  பேருந்து நிலையம் , மருத்துவமனை சாலை, கடற்கரை சாலைகளில் உள்ள டாஸ்மாக்  மது குடிக்கும் கூடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மது குடிக்கும் கூடத்தில் காலி பாட்டில்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பணியாளர்களுக்கு  உணவுப் பாதுகாப்பு  சட்ட நடவடிக்கைககள் குறித்து அறிவுறுத்தப்பட்டன.

மாம்பழங்கள் பறிமுதல்

21,May, 2019 Leave a comment

https://foodsafetynews.files.wordpress.com/2019/05/ae3ec-1.jpg

Categories: Ariyalur, DISTRICT-NEWS

போலி டீத்தூள் ஆய்வு

21,May, 2019 Leave a comment

https://foodsafetynews.files.wordpress.com/2019/05/c0b92-3.jpg

அச்சடித்த காகிதங்களில் உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது

25,April, 2019 Leave a comment

https://foodsafetynews.files.wordpress.com/2019/04/40af4-5.jpg

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?- உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம்

25,April, 2019 Leave a comment

செயற்கை முறையில் பழுக்கவைக் கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதி யில் கருப்பகவுண்டர் வீதி, பெரிய கடை வீதி ஆகிய இடங்களிலுள்ள பழ குடோன்கள், சில்லறை விற்பனைக் கடைகளில், கார்பைடு கற்களைக் கொண்டு செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து, கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம் பிகை தலைமையிலான அலுவலர் கள் அடங்கிய குழுவினர், நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக விஜயலலிதாம் பிகை கூறும்போது, ‘மாம்பழ குடோன்கள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை சேமிப்புக் கிடங்குகள் உட்பட 32 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அங்கு அழுகிய நிலையில் இருந்த மாம்பழம் 220 கிலோ, ஆரஞ்சு 65 கிலோ, சாத்துக்குடி 32 கிலோ, மாதுளை 34 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், பழ வியாபார நிறுவனங் களுக்கான உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை முறையில் பழுக்கவைக் கப்பட்ட பழங்களை உட்கொண் டால் வயிற்று வலி, குடற்புண், தலைவலி, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் வெளிப்புறத் தோற்றம் சீராக காணப்படும். மாம்பழத்தை வெட்டிப் பார்க்கும்போது, உள்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உண்ணும் போது சுவையின்றி இருக்கலாம். மாம்பழத்தை அழுத்திப் பார்த்தால், அதன் தன்மை மிருதுவாக இல்லாமல் கடினமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

25,April, 2019 Leave a comment

https://foodsafetynews.files.wordpress.com/2019/04/1c04e-6.jpg

மரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.

22,March, 2019 Comments off

93c997b0-bf1f-4c62-8ef2-37f46ebaadc0c6c2e611-dfc4-48b0-8a4f-9b316490abbaஉலக நுகர்வோர் தினத்தையொட்டி உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராச்சி மையம் இணைந்து எங்கும், எதிலும் தரம் என்ற கோட்பாட்டின் படி உணவுக்கான உப்பில் அயோடின் அளவு குறித்து உப்பு உற்பத்தி செய்யும் இடத்தில் ஆய்வக பரிசோதனை செய்து அதன் மூலம் உப்பின் தரத்தை மேம்படுத்த உதவும் அலோசனை மற்றும் குறைபாடுகளை களைய நடவடிக்கையை மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்திரவின் படி விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் உப்பள பகுதியில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர் .இந்த ஆய்வின் போது மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தியாளர் களிடம் அயோடீன் அளவு மற்றும் தரம் குறித்து உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கேட்டறிந்து அயோடின் நுன்சத்து கலக்காமல் விற்பனை க்கு அனுப்பகூடாது எனவும்.FSSAI license எண் பொட்டலத்தில் அச்சிட்டு விற்பனை செய்ய அறிவுரை வழங்கினார்..விற்பனை க்கு தயாராக இருந்த உப்பு மூட்டைகளை அயோடின் பரிசோதித்து அது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலரக்கு் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலும்.உரிய நடவடிக்கை எடுக்க வழிகாட்டலும் வழங்கப்பட்டது. இவ் ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குணசேகரன்,பத்பநாபன் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் .திருநாவுக்கரசு விழுப்புரம் நுகர்வோர் சங்க துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

22,March, 2019 Comments off

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் குட்கா கடத்தலில் தொடர்புடைய பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

20,March, 2019 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2019/03/b0dde-1.jpg