Archive

Archive for the ‘Chennai’ Category

ஆசிஃப் பிரியாணி’ கிளையில் நூல் பிடித்த அதிகாரிகள்.. ரெய்டில் சிக்கிய 2000 கிலோ அழுகிய இறைச்சி!

6,October, 2018 Comments off

நேற்று முன்தினம், ஆசிஃப் பிரியாணியின் கிண்டி தலைமை கிச்சனுக்குள் புகுந்த உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான டாக்டர் கதிரவன் அதிரடி ரெய்டு நடத்தி சீல் வைத்தார். ஜூ.வி வாசகர் ஒருவர் கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஆசிஃப் பிரியாணி கடையில் தரமற்ற மட்டன் பிரியாணி சப்ளை செய்ததைக் கண்டுபிடித்து தகவல் சொல்ல… கோயம்பேடு கிளைக்கு எங்கிருந்து பிரியாணி சப்ளை ஆகிறது என்பதை விசாரித்து கிண்டியில் உள்ள அந்த ஹோட்டலின் கிச்சனில் ரெய்டு நடத்த உத்தரவிட்டிருந்தார் தமிழக அரசின் உணவு பாதுகாப்புப் பிரிவு கமிஷனர் அமுதா. “இனி அப்படி நடக்காது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறோம்’’ என்கிற ரீதியில் ஹோட்டல் நிர்வாகத்தினர் டாக்டர் கதிரவனிடம் கடிதம் கொடுத்துவிட்டு சீலை எடுக்கும்படி காத்திருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க…

டாக்டர் கதிரவன்

சென்னையின் பிரபல ஹோட்டல்களில் பரிமாறப்படும் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகள் தரமானதுதானா?

…என்கிற விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள். மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் செயல்படும் சில நான்வெஜ் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி சப்ளை ஆவது தொடர்பாக ரகசிய விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் ஏஜென்டுகள் உண்டு. இவர்கள் மூலம் சந்தடியில்லாமல் குறைந்த விலைக்குக் கடைகளுக்கு இறைச்சி சப்ளை ஆகிவிடும். ஆசிஃப் ஹோட்டல் ரெய்டுக்குப் பிறகு, உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.

நேற்று (5.10.2018) அவர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் ஓர் இடத்தில் சர்ப்ரைஸ் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். 2,000 கிலோ இறைச்சி கெட்டுப்போன நிலையில் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இறைச்சி

சென்னை ஹோட்டல்களுக்குத் தரமற்ற இறைச்சியை சப்ளை செய்யும் நெட்வொர்க்கை ரகசியமாக நடத்திவரும் கோஷ்டிகளில் முக்கியமானது சக்திவேல் கோஷ்டி. இதுபற்றி டாக்டர் கதிரவன் நம்மிடம் கூறும்போது, “மாடு, பன்றி, கன்றுக்குட்டி… ஆகியவற்றைக் கொன்று அதன் இறைச்சியைச் சாதாரண தெர்மோ கூல் பாக்ஸில் அனுப்புகிறார்கள். இந்த மாதிரி, அண்ணாசாலை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகே ஒரு கும்பல் கெட்டுப்போன இறைச்சியைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்து ரெய்டு நடத்தினோம். அங்கே சிக்கிய சக்திவேல் கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து பேரைப் பிடித்தோம். அவர்களைப் போலீஸில் சொல்லி கைது செய்து சிறையில் அடைத்தோம். அப்போது, அந்தக் கோஷ்டியிடமிருந்து 500 கிலோ இறைச்சியைக் கைப்பற்றி அழித்தோம்.

அதேபோல், இன்றும் எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே சிந்தாதிரிப்பேட்டையில் ரெய்டு நடத்தினோம். அதே, சக்திவேல் கோஷ்டிதான் சிக்கியது. இறைச்சிகள் குவியலாகப் போட்டுவைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்த்தால், குமட்டிக்கொண்டு வந்தது. துர்நாற்றம் வீசியது. சுகாதாரமற்ற நிலையில் கிடந்த 2,000 கிலோ இறைச்சியைக் கைப்பற்றி அழித்தோம். மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை இந்த இறைச்சி. இதன் பின்னணி தெரிந்தே, சிலர் வாங்கிச்செல்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆட்டு இறைச்சியின் விலை அதிகம். ஆனால், மாடு, பன்றி, கன்றுக்குட்டி ஆகியவற்றின் இறைச்சி விலை குறைவு. இவற்றை வெட்டி, இறைச்சியைக் கடத்தி விற்கிறார்கள். அதை வாங்குகிறவர்கள் ஆட்டு இறைச்சிக்குப் பதிலாக இவற்றைக் கலந்து சமைக்கிறார்கள். இது மிகவும் தவறானது. இந்தக் கொடுஞ்செயலை யார் செய்தாலும் தண்டனைக்கு உரியக் குற்றம்" என்றார்.

இனி பிரபல ஹோட்டல்களில் சாப்பிடப் போகும்போது உணவு தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ… உடனே உணவு பாதுகாப்புத்துறை கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுங்கள். நீங்கள் பார்த்த காட்சியைப் படம் பிடித்துக் குறிப்புடன் சென்னை தேனாம்பேட்டையில் மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் இயங்கும் கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ் அப்/ செல் எண் 94440 42322) தகவல் தெரிவியுங்கள்.

Categories: Chennai, DISTRICT-NEWS

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் – ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

4,October, 2018 Comments off

கிண்டியில் செயல்பட்டுவந்த ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து, ஜூனியர் விகடன் ஏற்கெனவே களஆய்வு நடத்தி புகார் அளித்தது.

ஆசிஃப் பிரியாணி

சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இவற்றுக்கு கிண்டியில் உள்ள தலைமை கிச்சனில் இருந்துதான் பிரியாணி தயாரித்து தினமும் அனுப்புகிறார்கள். சமீபத்தில் ஒரு நாள், ஜூ.வி வாசகர் ஒருவர் கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஆசிஃப் பிரியாணி கடைக்குப் போயிருக்கிறார். மட்டன் பிரியாணி கேட்டிருக்கிறார். அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இருந்த மட்டன் துண்டுகள் தரமில்லாததைக் கவனித்து விசாரித்திருக்கிறார். அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைக் கவனித்திருக்கிறார். இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது,  சரியான பதில் இல்லை. உடனே, ஜூ.வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தார். அடுத்த நிமிடமே ஜூ.வி சிறப்புக் குழு ஆக்ஷனில் இறங்கியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐஏஎஸ் ஆபீஸில் இயங்கும் கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ்அப்/ செல் எண் 94440 42322) தகவல் தெரிவித்தோம்.

அதிகாரிகள் குழு விரைந்து சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதை நேரில் பார்த்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதேசமயம், கிண்டியில் செயல்படும் தலைமை கிச்சன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய அங்கும் சர்ப்ரைஸ் விசிட் செய்திருக்கிறார்கள். அங்கேயும் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைப் பார்த்து எச்சரித்து, நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, " எங்கள் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் ஆய்வு நடந்தது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி உரிய காலஅவகாசம் கொடுத்திருந்தோம். ஆனாலும், அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் தங்கள் தரப்பு தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை. இதுகுறித்து கமிஷனர் அமுதாவிடம் ஆதாரத்துடன் எடுத்துச்சொல்லி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி கேட்டோம். அவரும் ஆதாரங்களைப் பரிசீலித்து, கிச்சனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கிச்சனுக்கு சீல் வைத்தோம் " என்றார்.

சென்னையின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் பலவும் ஏராளமான கிளைகளைத் திறந்துவிடுகின்றனர். அவற்றுக்கு சென்ட்ரலைஸ்டு கிச்சன் ஒன்று இருக்கும். அங்கிருந்து பிரியாணி தயாரித்து சப்ளை செய்கிறார்கள். இங்குதான் பிரச்னையே வருகிறது. சென்ட்ரலைஸ்டு கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் லைசென்ஸ் பெற்ற கடைகளில் வாங்கியதற்கான பில்களைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல, மீதமாகும் உணவுப் பொருள்களை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகள் இருந்தும், சில ஹோட்டல்காரர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஹோட்டலுக்குச் செல்லும் மக்கள் தரப்பில் புகார் வந்தபிறகுதான், நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போகிறார்கள். இனியாவது, சாப்பிடப் போகும்போது உணவு தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ, உடனே உணவு பாதுகாப்புத் துறை கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுங்கள். நீங்கள் பார்த்த காட்சியைப் படம்பிடித்து, குறிப்புடன் மேலே குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

Categories: Chennai, DISTRICT-NEWS

மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

11,July, 2018 Comments off

2

Categories: Chennai, DISTRICT-NEWS

டீத்தூளில் கலப்படம் : நிறுவனத்திற்கு, ‘சீல்’

21,June, 2018 Comments off

அரும்பாக்கத்தில் உள்ள, டீ துாள் விற்பனை நிறுவனத்தில் இருந்து, கலப்படம் செய்யப்பட்ட, 35 டன் டீத்துளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அரும்பாக்கம், செந்தில் நகர், 2வது தெருவில், தாமஸ் என்பவருக்கு சொந்தமான, தனியார் டீ துாள் விற்பனை நிறுவனம் உள்ளது. கோவையில் இருந்து வரும் டீ துாளை, ‘பேக்’ செய்து, சென்னையில் விற்பனை செய்து வந்தார்.உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று இரவு, அந்நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், டீ துாளில் சேர்க்க வைத்திருந்த, 300 கிலோ சாயம் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட, 35 டன் டீத்துாள் ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நிறுவனத்திற்கு, அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.மேலும், அந்த கலப்பட டீத்துார் மாதிரியை, தஞ்சாவூரில் உள்ள சோதனை சாவடிக்கு அனுப்பி வைத்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS

5 கிலோ கார்பைடு கல் 4 டன் மாம்பழம் பறிமுதல்

31,May, 2018 Comments off

கோயம்பேடு:கோயம்பேடு மார்க்கெட்டில், கார்பைடு கல்லில் பழுக்க வைத்த, 4 டன் பழங்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு, நெற்குன்றம், அழகம்மாள் நகரில் உள்ள குடோனில், கார்பைடு கல் மூலம், மாங்காய்கள் பழுக்க வைக்கப் படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மாலை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த குடோனை
சோதனையிட்டனர்.
இதில், கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட, 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்; மேலும், 5 கிலோ கார்பைடு கல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: Chennai, DISTRICT-NEWS

போதை பாக்கு பறிமுதல்

19,May, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/05/5efef-1.jpg

Categories: Chennai, DISTRICT-NEWS

பறிமுதல்

26,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/0bbc1-2.jpg

Categories: Chennai, DISTRICT-NEWS

கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்

26,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/c6bcb-25_04_2018_108_026.jpg

Categories: Chennai, DISTRICT-NEWS

கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

24,April, 2018 Comments off
 

சென்னை: கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரசாயன பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்படுதாக புகார்கள் எழுந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 6 மணி முதல் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள்,பப்பாளி பழங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டதோடு கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது

Categories: Chennai, DISTRICT-NEWS