Archive

Archive for the ‘Coimbatore’ Category

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?- உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம்

25,April, 2019 Leave a comment

செயற்கை முறையில் பழுக்கவைக் கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதி யில் கருப்பகவுண்டர் வீதி, பெரிய கடை வீதி ஆகிய இடங்களிலுள்ள பழ குடோன்கள், சில்லறை விற்பனைக் கடைகளில், கார்பைடு கற்களைக் கொண்டு செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து, கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம் பிகை தலைமையிலான அலுவலர் கள் அடங்கிய குழுவினர், நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக விஜயலலிதாம் பிகை கூறும்போது, ‘மாம்பழ குடோன்கள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை சேமிப்புக் கிடங்குகள் உட்பட 32 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அங்கு அழுகிய நிலையில் இருந்த மாம்பழம் 220 கிலோ, ஆரஞ்சு 65 கிலோ, சாத்துக்குடி 32 கிலோ, மாதுளை 34 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், பழ வியாபார நிறுவனங் களுக்கான உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை முறையில் பழுக்கவைக் கப்பட்ட பழங்களை உட்கொண் டால் வயிற்று வலி, குடற்புண், தலைவலி, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் வெளிப்புறத் தோற்றம் சீராக காணப்படும். மாம்பழத்தை வெட்டிப் பார்க்கும்போது, உள்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உண்ணும் போது சுவையின்றி இருக்கலாம். மாம்பழத்தை அழுத்திப் பார்த்தால், அதன் தன்மை மிருதுவாக இல்லாமல் கடினமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

22,March, 2019 Comments off

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் குட்கா கடத்தலில் தொடர்புடைய பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கோவையில் குட்கா பறிமுதல்

16,November, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/11/59723-3.jpg

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கலப்பட எண்ணெய் குடோனுக்கு சீல்

25,June, 2018 Comments off

5

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கலப்பட டீ தூள் விற்பனை… ஆய்வில் ‘சாயம்’ வெளுக்கிறது!

18,June, 2018 Comments off

கலப்பட பொருட்கள் என்பது தெரியாமலேயே, பல கடைக்காரர்கள் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அதிர்ச்சி தகவல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை, அதிகமாக நடப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த வாரம் துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில், அதிரடி ஆய்வுகளை நடத்தினர்.
மாவட்டம் முழுவதும், 152 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், 66.50 கிலோ கலப்பட டீ துாள், 42 கிலோ தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள், காலாவதியான வாட்டர் பாக்கெட்கள், 30 லிட்டர் கைப்பற்றப்பட்டன. பல உணவு விற்பனையாளர்களுக்கும் தரமற்ற, கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது, அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,”பெரும்பாலான டீக்கடைகளில் கலப்படம் என்று தெரியாமலேயே, டீ துாளை பயன்படுத்தி வந்தனர். துாய்மையான நீர், சுத்தமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஒரு சிலர், கலப்படம் என தெரிந்தே பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் காலாவதியான உணவுப் பொருட்கள் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு, காலாவதி தேதி கவனித்து வாங்க வேண்டும். வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
கலப்பட டீ துாள் கண்டறிவது எப்படி?
பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க, டீ துாளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. சாதாரண தண்ணீரில், டீ துாளை சிறிதளவு போடும்போது, நிறமிகள் தனியாக பிரிந்து, கலப்பட டீ துாள் தனியாக தெரியும். நிறமிகள் தண்ணீரின் விளிம்பில் வளையம் ஏற்படுத்தும். தரமான டீ துாள் மெதுவாக, தண்ணீரில் கீழிறங்கும். மரத்துாள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது

26,May, 2018 Comments off

கோவை: கோவையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ராஜவீதி பகுதியில் குட்கா புகையிலைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்களில் குட்கா புகையிலைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாகனத்தில் 600 கிலோ குட்காவும், மற்றொரு வாகனத்தில் 240 கிலோ குட்காவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

பழத்திற்கு கார்பைடு பயன்படுத்தாதிங்க

29,April, 2018 Comments off

Categories: Coimbatore, DISTRICT-NEWS

காலாவதியான குளிர்பானம் விற்பனை அமோகம்:உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

28,April, 2018 Comments off

பொள்ளாச்சி நகரப்பகுதியில், காலாவதியான பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி நகரில், காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதுபற்றி, உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் சென்றன.இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், செந்தில்குமார், செல்வபாண்டியன், காளிமுத்து ஆகியோர், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், சத்திரம் வீதி, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கடைவீதி, எஸ்.எஸ்.கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி, மார்க்கெட் ரோடு, ராஜாமில்ரோடு, கோவை ரோடு, திருவள்ளுவர் திடல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, டீ கடைகளில், வடை, போண்டா போன்ற உணவு பொருட்கள் திறந்தவெளியில் வைத்து விற்க கூடாது என்றும்; பேப்பரில் பலகாரங்கள் வைத்து தரக்கூடாது என்றும் எச்சரித்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், ‘நகரப்பகுதிகளில், 54 கடைகளில், கூட்டு கள ஆய்வு நடத்தப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, 18 கடைகளில், 22 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.காலாவதியான பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்கள் இல்லாத குளிர்பானங்கள், 39 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ததற்காக, ஐந்து கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது. பதிவுச் சான்று பெறாத இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது,’ என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட குட்கா தொழிற்சாலையில் விடிய, விடிய சோதனை

28,April, 2018 Comments off

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட குட்கா தொழிற்சாலையில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் போதை பொருட்கள் சிக்கியது. #Gutkha

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட குட்கா தொழிற்சாலையில் விடிய, விடிய சோதனை

சோதனை நடந்து வரும் குட்கா தொழிற்சாலையின் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.

சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் நல்லான் தோட்டம் என்ற பகுதியில் டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுமார் 12 அடி உயரத்திற்கு சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. அதற்குள் சொகுசு பங்களாவும், 20 ஆயிரம் சதுர அடியில் குடோனும் அமைந்து உள்ளது. இங்கு தொழிற்சாலை அமைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, சாந்தி பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்படுவதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்திக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து அவரது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட  தனிப்படை போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் பங்களா தோட்டத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு சோதனை நடத்திய போது குட்கா தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

சோதனை நடத்த வந்த போலீசாரின் வாகனங்கள் குட்கா தொழிற்சாலையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை தனி அலுவலர் விஜய லலிதாம்பிகை மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர். சூலூர் துணை தாசில்தார் முத்துக்குமார், மற்றும் மதுவிலக்கு போலீசாரும் அங்கு விரைந்தனர்.
அப்போது அங்கு குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்பட்டு பேக்கிங் செய்து கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்படுவது தெரிய வந்தது.
மேலும் அங்கு 20 மூட்டைகளில் போதை பாக்குகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் 20 டன் மதிப்புள்ள மூலப்பொருட்களும் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள போதை பொருட்கள்.

கோடிக்கணக்கான மதிப்பில் போதை பொருட்கள் அங்கு தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. குடோனில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு தொடங்கிய சோதனை விடிய, விடிய நடந்தது. இன்றும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையின் போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனை நடைபெற்ற தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இந்த பங்களாவின் சுவர் 12 அடி உயரத்தில் உள்ளது. இதனால் உள்ளே நடப்பது வெளியே உள்ளவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. குட்காவை தயார் செய்து தரையில் புதைத்து வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை சூலூரில் இருந்து வெல்டிங் எந்திரம் கொண்டு வரப்பட்டு சுவற்றை உடைத்து சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
கடந்த சில வருடங்களாக இந்த தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  முதலில் அரசு அனுமதி பெற்று சாந்தி மசாலா தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசு குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது.
அரசின் உத்தரவை மீறி  இந்த  தொழிற்சாலை தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரையும் வேலைக்கு சேர்த்து கொள்ளவில்லை. இந்த பங்களாவில் வட மாநில தொழிலாளர்களே வேலை செய்து வந்தனர். அவர்களும் வெளியில் வருவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பங்களாவில் செய்து கொடுக்கப்பட்டது.

தொழிற்சாலை நடத்தி வந்த ஜெயின் தங்கியிருக்கும் சொசுகு பங்களா.

இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் வரவே போலீசாருக்கு தகவல் தெரிவித்து  சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
போலீசார் குட்கா தொழிற்சாலையின் மேலாளர் ரகு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இந்த தொழிற்சாலையில் தயாராகும் போதை பொருட்கள் யார் மூலம் எந்தெந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது குட்கா விவகாரம் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் சூலூரில் குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories: Coimbatore, DISTRICT-NEWS