Archive

Archive for the ‘Cuddalore’ Category

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள்!

29,May, 2020 Comments off

மா, வாழை, சப்போட்டா பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளதால், இவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குறைந்து வரும் விவசாயப் பரப்பளவு, குறுகிய காலத்தில் அறுவடை, அதிக விளைச்சல் ஆகிய காரணிகளுக்காக விவசாய பணிகளில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், விளைந்த காய்களை ராசாயன முறையில் பழுக்க வைப்பதும் தொடா்கிறது.

காய் பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க சுமாா் ஒரு வார காலம் பிடிக்கும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா். இந்த முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தற்போது ‘கால்சியம் காா்பைடு’ கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகளும், நுகா்வோரும் எளிதில் கண்டறிவதால், வியாபாரிகள் சிலா் ‘எத்திலின்’ என்ற ரசாயனப் பொடி மூலம் பழங்களை பழுக்க வைக்கின்றனா். இந்தப் பொடியை தண்ணீரில் கரைத்து பழங்கள் மீது தெளிக்கின்றனா். இந்த பொடியிலிருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்துள்ளதைக் கண்டறிய முடிவதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு கூறியதாவது:

பழங்களை பழுக்க வைக்க 100 பி.பி.எம். எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. எனவே, மா, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட (உணவுப் பாதுகாப்புத் துறை) நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் கூறியதாவது: மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வருகிறோம். சேலம், நாமக்கல் பகுதிகளிலிருந்து பெட்டியிலேயே மாம்பழங்கள் வருகின்றன. அங்கு என்ன செய்கின்றனா் என்பது தெரியவில்லை. கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதில் கிடங்கு ஏதும் கண்டறியப்படவில்லை.

வாழைக் காய்களை பழுக்க வைக்க எத்திலின் தெளிப்புக்கு அனுமதி உண்டு. ஒரு லிட்டா் தண்ணீரில் 0.4 சதவீதம் எத்திலின் கலந்து தெளிக்கலாம். ஆனால், எத்திலின் கலந்த தொட்டி தண்ணீரில் வாழை காய்களை அமிழ்த்தி எடுக்கக் கூடாது. இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

விருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

17,June, 2018 Comments off

விருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

விருத்தாசலம் நகர பகுதியில் மளிகை கடைகள், உணவு பொருட்கள் விற்பனை கடைகள், ஏஜென்சிகள், பல்பொருள் அங்காடிகள், இனிப்பகங்கள், பழ அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், மளிகை கடைகளிலும் ஆய்வு செய்தார். அப்போது காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவு பொருட்களை பறிமுதல் செய்தார்.

மேலும் உணவு பொருட்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா? காலாவதி தேதிக்குள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், காலாவதியான கெட்டுப்போன உணவு பொருட்களை வியாபாரிகள் யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதை மீறி விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பாதுகாப்புத்துறையின் அனைத்து விதிகளையும் வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ, விதிகளை மீறினாலோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது விருத்தாசலம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு

2,June, 2018 Comments off

குறிஞ்சிப்பாடியில் உள்ள குளிர்பான கடைகள், பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். குறிஞ்சிப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பான கடைகள் சுகாதாரமாக இருப்பதில்லை என உணவு பாதுகாப்பு அலுவலர்
களுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் உணவு  பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, கொளஞ்சியான் ஆகியோர் குறிஞ்சிப்பாடி ராஜவீதி, பெருமாள் கோயில் தெரு, கடை வீதி ஆகிய இடங்களில் உள்ள குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, அழுகிய பழங்களை கொண்டு பழச்சாறு தயாரிக்க கூடாது.
தரமான ஐஸ் கட்டிகளை பயன்படுத்த வேண்டும். பழச்சாறு தயாரிக்கும் இடங்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிவு பொருட்களை சாலையில் கொட்டாமல் கூடையில் சேகரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பழங்களை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைக்க கூடாது. பழச்சாற்றில் செயற்கை வண்ணங்களை சேர்க்க கூடாது ஆகியவற்றை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது உரிமம்
பெறாமல் இயங்கி வந்த கடைகள் 1 5 நாட்களுக்குள்உரி மம் பெற அறிவுறுத்தப்பட்டது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

21,May, 2018 Comments off

கிள்ளை: பிச்சாவரத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் செயல் விளக்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது.தமிழகத்தில் சுற்றுலா தளங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். அதனையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வட்டார உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடந்து வரும் முகாமில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஏழுமலை, தரமான பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்களை கண்டறியும்முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். அத்துடன் உடல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பில் தவிர்க்க வேண்டியவைகள் குறித்து 16 வகையான அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்த முகாம் வரும் 31ம் வரை நடக்கிறது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு

23,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/f1f96-7a.jpg

Categories: Cuddalore, DISTRICT-NEWS

காலாவதி குளிர்பானம் டீத்தூள் பறிமுதல்

22,February, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/02/fc587-6.jpg

Categories: Cuddalore, DISTRICT-NEWS

2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

10,November, 2017 Comments off

ஸ்ரீமுஷ்ணம், நவ. 10: கடலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ஆலோசனையின் பேரில்  ஸ்ரீமுஷ்ணத்தில் பொதுசுகாதார துறை, பேரூராட்சி, உணவு பாதுகாப்பு துறை ஆகியவை சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயிந்த் மோசஸ் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தென்னரசு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சியான், பத்மநாபன், சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் அடங்கிய குழுவினர், டெங்கு தடுப்பு பணி, நிலவேம்பு கசாயம் வழங்குதல், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரினேசன் செய்யப்பட்டதா என ஆய்வு செய்தனர்.மேலும் டெங்கு கொசுப்புழு உருவாக கூடிய நிலையில் உள்ள இரண்டு நிறுவனங்களை கண்டறிந்து தலா ரூ.5000 அபராதம் விதித்தனர். பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

3,November, 2017 Comments off

திட்டக்குடி: திட்டக்குடி, ராமநத்தம் பகுதி கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் கடந்த 29ம் தேதி பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் லாலிபாப் வாங்கி சாப்பிட்ட குழந்தை மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, நல்லதம்பி, அன்பழகன், கொளஞ்சியப்பன், மாரிமுத்து உள்ளிட்டோர் திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது காலாவதியான குளிர்பானம், குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்திற்கிடமான லாலிபாப் மிட்டாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், சந்தேகத்திற்கிடமான லாலிபாப் மிட்டாய்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

புகையிலை பொருட்கள் பறிமுதல்

2,August, 2017 Comments off

Categories: Cuddalore, DISTRICT-NEWS