Archive

Archive for the ‘Karur’ Category

போலி வாட்டர் கேன் விற்பனை படுஜோர் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

17,August, 2017 Comments off

கரூர்: போலி வாட்டர் கேன் நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்வதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என, புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், போதிய மழையில்லாததாலும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாலும், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீருக்கு மவுசு அதிகரித்தது. இதைப்பயன்படுத்தி, போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
இதுகுறித்து மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்.ஓ., முறையில், தண்ணீரை சுத்திகரித்து, கேன்களில் அடைத்து, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ., முத்திரை தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கு உரிமக் கட்டணம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி பெற வேண்டும். ஆய்வுக்கூடம் அமைக்க, மற்றும் டெக்னீஷியனுக்கு ஊதியம், போன்றவைகளுக்கு, குறைந்தபட்சம், மாதம், 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் போலி நிறுவனங்கள், தரமற்ற ஆர்.ஓ., பிளாண்ட் மூலம், தண்ணீரை சுத்தம் செய்கின்றன. இந்த தண்ணீரை எந்த பரிசோதனையும் செய்யாமல், கேனில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். சில போலி நிறுவனங்கள், 20 லிட்டர் தண்ணீர், 10 ரூபாய் என, விற்கின்றன.
இதில், கேன்களை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால், கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இந்த தண்ணீரை குடித்தால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள், நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை மாவட்ட அலுவலர் மீனாட்சிசுந்தரத்திடம் கேட்டபோது, “மாவட்டத்தில் போலி சுத்திகரிக்கப்பட்ட வாட்டர் கேன் விற்பனை எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Categories: DISTRICT-NEWS, Karur

கண்டு கொள்ளாத அதிகாரிகள்

24,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Karur, NEWS

ரகசியமாக செயல்பட்ட பான்மசாலா குடோனுக்கு அதிகாரிகள் சீல்

22,July, 2017 Comments off

குளித்தலை: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை சோதனை சவாடியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்யும் போது, ஒரு லாரியில் அரசு தடைசெய்யப்பட்ட பான்மசாலா, பான்பராக் போன்ற போதை பொருட்களை கடத்தி வந்ததாகவும், அவை கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த காவல்காரன்பட்டியில் உள்ள, குடோனில் இருந்து ஏற்றி வருவதாகவும் போலீசாரிடம் லாரி டிரைவர் தெரிவித்துள்ளளார். இதையடுத்து, கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மீனாட்சிசுந்தரம், தோகைமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், வடசேரி வி.ஏ.ஓ., ரவி ஆகியோர் காவல்காரன்பட்டி அருகே, சோக்கேஸ்பட்டி மேற்கு பகுதியில் தனியாக உள்ள ஒரு கட்டடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், திருச்சி பகுதியில் உள்ள திரிபால் சங்கவி என்பவருக்கு சொந்தமான கட்டடம் என்பதும், அரசால் தடை செய்யபபட்ட பான்மசாலா உள்பட பல்வேறு போதை பொருட்களை அனுமதி இன்றி பதுக்கி வைத்து, திருச்சி மாவட்ட பகுதிகளுக்கு கடத்தியது தெரியவந்தது. 1,880 கிலோ எடை கொண்ட, 47 போதை பொருட்களின் பண்டல்களை, அதே அறையில் வைத்து அந்த கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், போதை பொருட்களில் இருந்து, சிலவற்றை எடுத்து உணவு பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனை செய்வற்காக அனுப்பி உள்ளனர்.
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: போதை பொருட்கள், அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்து, திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குடோன் சீல் வைக்கப்பட்டது. போதை பொருட்களின் மதிப்பெடுக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Karur

குப்பையில் கொட்டப்படும் சத்துணவு

7,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Karur

உரிமம் இன்றி உணவுப்பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை’

22,June, 2017 Comments off

உரிமம் இன்றி உணவுப்பொருள்கள் விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் அனைவருக்கும் தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உரிமம் வழங்கின. ஆனால் தற்போது புதிய சட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை வழங்குகிறது. உணவுப்பொருள்கள் விற்கும் வியாபாரிகளுக்கு பதிவு மற்றும் உரிமம் பெற போதிய கால அவகாசம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. எனவே வியாபாரிகள் தங்களது விற்பனை மற்றும் கொள்முதல் தொகைக்கு ஏற்ப உரிமம், பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் உணவுப்பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தங்களது பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ உரிமம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.12லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.  ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்பவர்களுக்கு உரிமக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2,000, தயாரிப்பாளர்கள் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதாக இருந்தால் ரூ.3,000, அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 மும் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்த தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகல் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உரிமம் மற்றும் பதிவுகள் காலாவதியாவதற்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் 7,800 உணவு வணிகர்கள் உள்ளனர். கடந்தாண்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு 344 உரிமச் சான்றிதழ்களும், 1528 பதிவு சான்றிதழ்களும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கலப்பட உணவுப்பொருள் தயாரித்து விற்ற 4 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்தால் தண்டனையும், ரூ,51,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தரத்திற்கு குறைவாக உணவுப்பொருள் விற்க 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7.78 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உணவுப்பொருள் கலப்படம் தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறாத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Categories: DISTRICT-NEWS, Karur

தரமற்ற ஆட்டிறைச்சி விற்பனை

30,March, 2016 Comments off

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில், தரமற்ற ஆட்டிறைச்சி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சமைத்து சாப்பிடும் பொதுமக்கள், வயிற்று உபாதை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி, 400 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கரூர், வெங்கமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு கிலோ தரம் குறைந்த ஆட்டிறைச்சி, 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகளை விலைக்கு வாங்கி வந்து, இறைச்சிக்காக வெட்டுகின்றனர். இந்த ஆடுகள் வளர்க்க ஊசி மற்றும் மருந்து கொடுக்கின்றனர். இதனால், ஆடுகள் எடை அதிகரித்து விடுகிறது. வெளிமாநிலத்தில் கொண்டு வரப்படும் ஆடுகளை வெட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், ‘பிராய்லர் கோழி போல, பிராய்லர் ஆடுகள்’ என்கின்றனர். ஒரு கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஆட்டிறைச்சி, விரைவாக வெந்து விடுகிறது. ஆனால், சாப்பிட்டால் ஜீரணம் ஆகாமல் வயிற்று உபாதை ஏற்படுகிறது. குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும், ஆட்டிறைச்சி குறித்து, உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Categories: DISTRICT-NEWS, Karur

கரூரில் போலி ஆயில் ஆலை கண்டுபிடிப்பு : குருடாயிலை சமையல் எண்ணைகளில் கலந்த விபரீதம்

2,March, 2016 Comments off

கரூர் அருகே கள்ளத்தனமாக இயங்கிய, போலி ஆயில் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிரெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவர் இப்பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.

இவரது மகன் பழனிவேல் (வயது 50), இப்பகுதியில் தேங்காய் எண்ணைய் ஆலைக்கு உரிமம் பெற்று, அந்த ஆயில் நிறுவனத்தின் பின்புறமாக ஒட்டு வீடு கட்டி அங்கே கள்ளத்தனமாக குருடு ஆயில், அதாவது பழைய ஆயில்களை, ஆட்டோ ஒர்க்ஸ், லாரி மெக்கானிக் செட்டுகளில் இருந்து வாங்கி வந்து, அதை காய்ச்சி, அதிலிருந்து வரும் ஆயிலை, தேங்காய் எண்ணை, விளக்கெண்ணை, நல்லெண்ணை என உணவுக்காக பயன்படுத்தப்படும் ஆயில்களாக பயன்படுத்தும் ஆயில்களில் கலப்படம் செய்து புழக்கத்தில் விட்டு உள்ளனர்.

இதை அங்கிருந்து வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் அங்கே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 21 பேரல்கள் கலப்பட ஆயில்களை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் அந்த ஆயில்களை சோதனை மாதிரியாக எடுத்து அரசு ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து ஆலையின் உரிமையாளர் பழனிவேல் தலைமறைவாகி விட்டார்.

பேட்டி : மீனாட்சி சுந்தரம் – உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்

Categories: DISTRICT-NEWS, Karur

உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை

6,January, 2016 Comments off

கரூர்: உணவு, வணிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உணவு தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக்குழு, இரண்டாவது அரையாண்டு கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான, நான்காவது காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள உணவகங்களிலுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உணவு பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு உணவு மாதிரிகள், உணவு எண்ணெய் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி தரத்தை உறுதி செய்ய வேண்டும். ஆய்வு முடிவில் தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடித்து டூவீலர்களில் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்க் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, கழிவுநீர் குழாய் முறைப்படுத்துதல் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் வீடு கட்ட அனுமதி வழங்கும் போது சரியாக பின்பற்றுவதுடன், ஒன்று முதல், 48வது வார்டு வரை நடப்பட்ட, 720 மரக்கன்றுகளை அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கழிவு நீரில் தனியார் நிறுவனங்கள் ஆடைகள் சலவை செய்து வருவதாகவும், அதை மேலும் மக்கள் பயன்படுத்துவதாகவும், அதனால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார். இதில், டி.ஆர்.ஓ., அருணா, அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்புக்குழு மண்டல தலைவர் கோபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தரமான உணவு விற்பனையா? கரூர் மாவட்ட நகர பகுதிகளில், தெருவுக்குத் தெரு சாலையோரம் இரவு டிபன் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் சுகாதாராம் இருக்கிறதா, அவர்கள் என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். இந்த உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் கண்காணிப்பதில்லை. அவ்வாறே கண்டு கொண்டாலும், சடங்குக்காக ஒருசில வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தொடர் கண்காணிப்பு இல்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.

Categories: DISTRICT-NEWS, Karur

கரூர் நகராட்சி பகுதி டீக்கடைகளில் கலப்பட டீத் துாள் புழக் கம் அதிகரிப்பு

19,November, 2015 Comments off
 

Categories: DISTRICT-NEWS, Karur