Archive

Archive for the ‘Krishnagiri’ Category

உணவு பாதுகாப்பு மையம் திறப்பு

9,February, 2019 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2019/02/04d78-f7609c2a-8695-4ede-9932-543e7ce8313c.jpg?w=858&h=635

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

அனைத்து உணவகங்களிலும் உரிமம் அவசியம்

5,June, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/06/3c637-3.jpg?w=595

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

உணவகங்களில் ஆய்வு

5,May, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/05/1aac8-1a.jpg?w=595

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

4 லட்சம் அபராதம் வசூல்

8,December, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ்

27,October, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

உணவு பாதுகாப்பு அலுவலரை தாக்கிய வேன் டிரைவர் கைது

3,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் எதிரொலி: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

15,June, 2017 Comments off

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அரிசி கடைகள் மற்றும் குடோன்களின் திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த சில நாட்காளாக சமைக்கும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இதனை தமிழகஅரசு

மறுத்தாலும் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அரிசி கடைகள் குடோன்கள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் ஒசூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் துளசிராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒசூர்
பகுதியிலுள்ள பல்வேறு அரிசி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அரிசி கடைகள், அரிசி குடோன்கள் ஆகியவற்றிக்கு சென்று அரிசி மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டுனர்.
இதில் பெரும்பாலான கடைகளில் ஆய்வு நடத்தியபோது அரிசியில் பிளாஸ்டிக்க கலப்படம் செய்யாமல் இருந்தது. ஒசூர் பகுதியில் எம்.ஜி சாலை, நேதாஜிசாலை, வட்டாச்சியர் சாலை, பாகலூர்சாலை,
தேன்கனிகோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.  மாவட்டம் முழுவதும் 78 அரிசி மண்டிகளில் பிளாஸ்டிக் அரிசி சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் எனவும் எனவே அரிசி மண்டி வியாபாரிகள் தங்களது கடைகளில் கலப்படமுள்ள அரிசிகளை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்தனர். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

சாலையோரங்களில் கலப்பட பொருட்கள் விற்பனை: அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

27,March, 2017 Comments off

ஓசூர்: சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட கலப்பட மளிகை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உரிய அனுமதியின்றி சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட கலப்பட மளிகை பொருட்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதுபோன்ற கலப்பட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
ஓசூர் நகரில் பாகலூர் சாலை, ராயக்கோட்டை சாலை, மத்திகிரி சாலை மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி, டி.வி.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கலப்படம் செய்யப்பட்ட மளிகை பொருட்களை குறைந்த விலைக்கு சிலர் விற்பனை செய்து வந்தனர்.
கோவை மற்றும் சேலத்திலிருந்து கொண்டு வரப்படும் இந்த கலப்பட மளிகை பொருட்களினால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் துளசி ராமன் ஆகியோர் சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கலப்பட பொருட்களை சோதனை செய்தனர்.
அப்போது  கோவையில் இருந்த லாரியில் மளிகை பொருட்களான உளுத்தம் பருப்பு, மிளகு, சோம்பு, பொரிகடலை, துவரம்பருப்பு, மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் மூட்டை, மூட்டையாக எடுத்து வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதில் ஏராளமான பொருட்களில் கலப்படம் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
கலப்படம் செய்யப்பட்ட சோம்பு மற்றும் மளகு ஆகிய பொருட்களை அதிகாரிகள் குப்பைகளில் கொட்டி அழித்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் எந்த அனுமதியும் இல்லாமல், சாலையோரங்களில் விற்பனை செய்வற்கான உரிமம் இல்லாமல் கலப்பட உள்ள மளிகை பொருட்களை விற்பனை செய்தவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும், இது போன்ற கலப்பட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் பொருட்கள் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்வோம் என கூறியதால் மளிகை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் அங்கிருந்து பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

தயாரிப்பு தேதி இல்லாத உணவு பாக்கெட்டுகள் விற்பனை தாராளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

6,February, 2017 Comments off

ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதியில், பேட்ஜ் நம்பர், தயாரிப்பு தேதி குறித்த எந்த விபரமும் இல்லாத உணவு பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிப்படி, பாக்கெட் செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களின் விபர பட்டியல், அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, உணவு பொருள் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் முகவரி, பேட்ஜ் நம்பர் போன்றவைகள் அவசியம் இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கி கொடுக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் பொருட்களில், தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் கால அளவு குறிப்பிடுவதில்லை. இதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில நிறுவன மினரல் வாட்டர், கூல்டிரிங்ஸ் போன்றவைகளின் பாட்டில்களில், தயாரிப்பு தேதிகளை பிரின்ட் செய்யாமல் விட்டு விடுகின்றனர். குறிப்பாக, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் டீத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் பொடி உட்பட பல பாக்கெட்டு களில், தயாரிப்பு தேதி, பேட்ஜ் நம்பர் என எதுவும் இருப்பதில்லை. ஆனால், பேக்கிங் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதம் பயன்படுத்தலாம் என்ற வாசகம் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. இதனால் கடைகளில் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவில், இதேபோல், பேட்ஜ் நம்பர், தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்ட போதும், கிராம மற்றும் நகர்புற மக்கள் பெரும்பாலானோர், அதை பார்க்காமலேயே வாங்கி சென்று பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்க வேண்டிய, உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் இன்று வரை, பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் தேதி, பேட்ஜ் நம்பர் இல்லாத பேக்கிங் உணவு பொருள் விற்பனை தொடர்கிறது.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri