Archive

Archive for the ‘Madurai’ Category

3.25 tonnes adulterated sweets and snacks seized

3,November, 2018 Comments off
 

Madurai: Officials from the Food Safety and Standards Authority of India (FSSAI) have seized around 3.25 tonnes of sweets and snacks from four major sweet-making units in the city during a surprise check conducted on Thursday evening and night. The items were seized to check the quality of sweets prepared for Diwali, as there is heavy demand during the season.

Officials said that they seized three tonnes of sweets at around one tonne each from as many units and around 250kg from another unit. They were found using excess colour beyond the permissible limits and non-permitted colours as they are harmful for consumers. Stale sweets used as stuffing in baked items such as coconut buns and items that were kept for sale beyond the expiry date were also seized.

Stating that sale of sweets for Diwali would continue for the next two to three days, the officials added that they would continue such surprise raids till then. They also appealed to the public to report use of excessive colour and sale of expired eatables at bakeries to the FSSAI authorities on 9444042322. Confidentiality would be maintained on identity of the complainants, they said.

Categories: DISTRICT-NEWS, Madurai

கார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்

12,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Madurai

மேலூரில் தர பரிசோதனை முகாம்: 7 பால் மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிப்பு

12,June, 2017 Comments off

மேலூர்:
தமிழகத்தில் தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறினார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பாலின்தரம் குறித்து அறிய பரிசோதனை முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். இந்த முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மதுரையை அடுத்த மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாலின் தரம் அறிவதற்கான சோதனை முகாம் நடந்தது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலின் மாதிரியை தர பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். கடைக்காரர்களும் பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்திருந்தனர். அவை ஆய்வு செய்யப்பட்டது.

பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பாலை ஆய்வு செய்தபோது அதில் 7 பால்மாதிரிகள் தரமற்றவை என கண்டு பிடிக்கப்பட்டது. பாலில் குறைந்த கொழுப்பும், அதிக அளவில் நீரும் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அம்சத்கான் கூறுகையில், தர பரிசோதனை முகாமில் 7 பால் மாதிரிகள் தர மற்றவை என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவைகள் மேல் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக மேலூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலின் தரத்தை எவ்வாறு கண்டறிவது என விளக்கம் அளிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Madurai

அதிக நுரை வருவதற்காக பாலில் சோப்பு ஆயில் கலப்படம் செய்தது கண்டுபிடிப்பு: சட்டபூர்வ நடவடிக்கைக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு

9,June, 2017 Comments off

தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படும் ஏதும் உள்ளதா என்பதை அறிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மதுரை கோ.புதூரில் நடந்த பரிசோதனை முகாமில் மதுரை ஆட்சியர் வீரராகவன் முன்னிலையில் பொதுமக்கள் கொண்டு வந்த பால் பரிசோதனை செய்யப்பட்டது.

தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படும் ஏதும் உள்ளதா என்பதை அறிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மதுரை கோ.புதூரில் நடந்த பரிசோதனை முகாமில் மதுரை ஆட்சியர் வீரராகவன் முன்னிலையில் பொதுமக்கள் கொண்டு வந்த பால் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரையில் பொதுமக்கள் பயன் படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்காக உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் அரசுப்பேருந்து பணிமனை எதிரில் நேற்று தரப் பரிசோதனை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 பால் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் லட்சுமி நாராய ணன், துணை இயக்குநர் (சுகா தாரப் பணிகள்) அர்ஜுன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற் காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதை யடுத்து உணவு பாதுகாப்பு அலு வலர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உணவு பாது காப்பு அலுவலர் சந்திரமோகன் கூறும்போது, ‘மாதிரிப் பரி சோதனையில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய கிண்டியில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத்துக்கு இந்த பாலை அனுப்ப உள்ளோம். அதிலும் பாலில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என் றார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறும்போது, ‘பொதுமக் களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தவே பரிசோதனை முகாம் நடந்தது. வரும் 12-ம் தேதி மேலூ ரிலும், 14-ம் தேதி வாடிப்பட்டியிலும், 16-ம் தேதி திருமங்கலத்திலும் மற் றும் 19-ம் தேதி உசிலம்பட்டி பகுதி களிலும் பால் தரப் பரிசோதனை நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலில் 300 மி.லி அளவுக்கு எடுத்து வந்து கொடுத்து தரப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இதில் பாலில் உள்ள கொழுப்பு, அடர்த்தி, வேதிப்பொருள் கலப்படம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். பாலில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். 2011-16ல் 340 விற் பனையாளர்களிடம் பால் தரப் பரி சோதனை செய்யப்பட்டு 56 சிவில் வழக்குகளும், 31 குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டு ரூ.6,69,000 அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் 26 களப்பணியாளர்கள் ஈடு பட்டுள்ளனர்’ என்றார்.

Categories: DISTRICT-NEWS, Madurai

பாலின் தரம் அறியும் விழிப்புணர்வு முகாம் – மதுரை ஆட்சியர் ஏற்பாடு

8,June, 2017 Comments off

மதுரை: பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படத்தை அறிவதற்காக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூன் 8, 12, 14, 16 மற்றும் 19ஆம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த முகாமில் பால் மற்றும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.

ஜூன் 8ஆம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம், ஜூன் 12ஆம் தேதி மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தாலுகா அலுவலகம், ஜூன் 14ஆம் தேதி வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சமயநல்லூர் நாடார் மகால், ஜூன் 16ஆம் தேதி திருமங்கலம் தாலுகாவில் அசேஃபா சேவா பால் நிறுவனம், ஜூன் 19ஆம் தேதி உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாம்களில், பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியக அறிவிக்கப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படம் குறித்த தன்மை தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பால் மற்றும் பால் உணவுப் பொருட்களை கொண்டு வந்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப., வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Madurai

காலாவதி சிப்ஸ் மூடை மூடையாக வீச்சு

19,May, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Madurai

கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

24,March, 2017 Comments off
 

மதுரை: மதுரையில்  கார்பைட் கல் வைத்து  பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு  பாதுகாப்புத் துறை அலுவலாகள் பறிமுதல் செய்தனர். சீசன் துவங்கியதையடுத்து, மதுரையில் மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள பழக்கடை குடோனில், கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் சில குடோன்களில் மாம்பழங்கள் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.  அதிகாரிகள் கூறுகையில், ‘‘கார்பைட் கல் வைத்து பழங்களை பழுக்க வைத்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சீசன் முடியும் வரை இந்த சோதனை தொடரும்’’ என்று தெரிவித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Madurai

பாலில் பூச்சிக் கொல்லி கலப்படம் : மதுரையில் மாதிரிகள் சேகரிப்பு

1,December, 2016 Comments off

மதுரை: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உத்தரவுப்படி, பாலில் கலப்படம் செய்வதை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் துவங்கின.பாலின் நிறத்திற்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும் வேதிப் பொருட்கள் கலக்கும் நடைமுறை உள்ளது. சில வாரங்களுக்கு முன், பால் கலப்படம் குறித்த வழக்கு ஒன்றில், கலப்படம் செய்பவர்களுக்கு வாழ்நாள் சிறை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கனவே, உ.பி., மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில், பாலில் கலப்படம் செய்பவர்களை தண்டிக்க, வாழ்நாள் சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொண்ட சட்டம் அமலில் உள்ளது. பல மாநிலங்களில், கலப்படம் செய்பவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டங்களே உள்ளன.இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களிடம் மாதிரிகளை சேகரிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: சேகரிக்கப்படும் பால் மாதிரிகளில் ௧௫ வகையான பரிசோதனைகள் செய்யப்படும். இதில் நைட்ரேட், யூரியா, குளுக்கோஸ், செல்லுலோஸ், டிடெர்ஜென்ட், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என தெரியவரும்.பரிசோதனை முடிவுகள் டில்லி, சென்னைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து கலப்படம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்படும். மதுரையில் மட்டும் ௧௪ இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Madurai

மதுரையில் போதை பாக்கெட் விற்பனை

24,November, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Madurai