Archive

Archive for the ‘Namakkal’ Category

தரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்

4,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Namakkal

மரவள்ளி ஆலையின் அனுமதி தற்காலிக ரத்து

1,December, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Namakkal

உரிமம் புதுபிக்காத உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை

17,November, 2017 Comments off

 

Categories: DISTRICT-NEWS, Namakkal

உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி: ரூ.6 கோடி மதிப்பு ஜவ்வரிசி பறிமுதல்

27,October, 2017 Comments off

வெண்ணந்தூர்: ராசிபுரம், சுற்றுவட்டார பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் செய்த அதிரடி சோதனையில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,192 டன் ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியான, அத்தனூர், மசக்காளிப்பட்டி, ஆண்டகளூகேட், அப்புநாயக்கன்பட்டி, மெட்டாலா, அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி குடோன்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையிட்டனர். இதில், ஐந்து குடோன்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள், மூன்று மில்களில் இருப்பு வைத்திருந்த, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்து, அவற்றின் மாதிரியை சோதனைக்கு அனுப்பினர். இவற்றின் மொத்த மதிப்பு, ஆறு கோடி ரூபாய். உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள, 22 குடோன்களில், இதுவரை, 14 குடோன்களில் சோதனையிட்டுள்ளனர். மீதியுள்ள, எட்டு குடோன்களில், தொடர்ந்து சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, கவிக்குமார் கூறியதாவது: புகாரின் பேரில், தொடர் சோதனையை நடத்தி வருகிறோம். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், உற்பத்தி தேதி குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட தேதிக்கு பிறகு குடோனில் இருப்பு வைத்திருந்தாலும், அது காலாவதியானதாக கருதப்படும். அதன்படி, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal

தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

24,August, 2017 Comments off

நாமக்கல்: நாமக்கல் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்படும் டீக்கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் உத்தரவின்படி, அலுவலர்கள் பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர், நாமக்கல்லில் உள்ள டீக்கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா, பால் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், போலி அல்லது கலப்பட டீத்தூளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் எச்சரித்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில், நான்கு மாதங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், 73 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 18 லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், தற்போது வரை, 31 கிலோ வரை தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பட, காலாவதியான, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை குறித்து, 94440-12322 என்ற, வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal

130 வணிகர்களுக்கு உரிமம்

22,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Namakkal

தரமற்ற உணவு பொருட்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

15,July, 2017 Comments off

ப.வேலூர்: ப.வேலூர் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ப.வேலூர் மற்றும் பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர் ஆகிய பகுதிகளில், நொறுக்கு தீனி, கூல்ட்ரிங்க்ஸ், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள் தேதி குறிப்பிடப்படாமலும், காலாவதியானவையும் விற்கப்பட்டு வருவதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ப.வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன் கூறியதாவது: கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கினால், தயாரிக்கப்பட்ட மற்றும் காலாவதியாகும் தேதி இல்லை. வீட்டிற்கு சென்று பிரித்தால், தரமற்ற எண்ணெயால் தயாரிக்கப்பட்டு, வாடை வீசுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, அனைத்து குடிசைத்தொழில் தின்பண்ட பாக்கெட்டுகளிலும், பேக்கிங் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டும். கடந்த பல மாதங்களாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொள்ளாததே இதற்கு காரணம். வரும்போதெல்லாம், பெயரளவில் சோதனை மேற்கொண்டு செல்கின்றனர். முறையான ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal

கலப்பட ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

28,April, 2017 Comments off

நாமக்கல்: தமிழக ஸ்டார்ச், சேகோ உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் துரைசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் அளித்த மனு விபரம்: ஜவ்வரிசியை உணவு பாதுகாப்பு விதிப்படி மரவள்ளிக் கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்பட வேண்டும். பல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து வருகின்றனர். இதனால், தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கலப்படம் செய்யும் ஆலைகளின், அனைத்து உரிமங்களையும் குறைந்தது ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இந்நிலையில், கலப்படத்துக்காக கடந்த மாதம் பேளுக்குறிச்சியில் பிடிபட்ட ஆலை மற்றும் பச்சுடையாம்பாளையம் ஆலைகள் இயக்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு, கலப்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Namakkal

குளிர்பான விற்பனை அதிகரிப்பு: தீவிர கண்காணிப்பு அவசியம்

23,April, 2017 Comments off

ராசிபுரம்: கோடை காலம் துவங்கியுள்ளதையடுத்து, குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது. போலிகளுக்கு வாய்ப்புள்ளதால் தீவிரமாக கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. மக்களை வெயில் வறுத்தெடுக்கிறது. மக்கள் குளிர்பான கடைகளை அதிகளவு நாடிச் செல்கின்றனர். முலாம், வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்கள், கம்பங்கூழ், கரும்பு பால் விற்பனை கடைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு போட்டியாக தனியார் குளிர்பான நிறுவனங்கள் புதுப்புது பெயர்களில் குளிர்பானங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அவை அதிகமாக விற்கின்றன. இதற்கிடையே அவற்றை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, அரசு அனுமதி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். அவற்றில் போலிகளும் உள்ளதால், இதுகுறித்து, போதிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Categories: DISTRICT-NEWS, Namakkal