Archive

Archive for the ‘DISTRICT-NEWS’ Category

வெல்ல ஏல மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

4,September, 2020 Comments off

தேனியில் விவசாயிகள் வெல்ல ஏல மையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 8 மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பினர்.
மனித உடலுக்கு அதீத தீங்கிழைக்கும் சோடியம் ஹைட்ரோ சல்பைட்’ மருந்தை வெல்லத் தயாரிப்பில் ‘ப்ளீச்சிங்’ பயன்பாட்டிற்கு கலந்து வருகின்றனர். இதனைகண்டறிந்து உற்பத்தி மையங்களை ‘சீல்’ வைத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உணவுபாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் நவநீதன், உணவு பாதுகாப்புத்துறை வட்டார அலுவலர்கள் பாண்டியராஜன் (தேனி), சரண்யா (போடி), சீரஞ்சீவி (கம்பம்), இளங்கோ (உத்தமபாளையம்), ரவி (பெரியகுளம்) உள்ளிட்டோர் அணைக்கரைப்பட்டியில் உள்ள 6 வெல்ல உற்பத்தி மையங்கள், வாழையாத்துப்பட்டியில் உள்ள விவசாயிகள் வெல்ல ஏல மண்டியில் ஆய்வு செய்தனர்.
மண்டியில் விற்பனைக்கு தயாரான 400 மூடைகளில் 8 மாதிரிகளில் தலா 350 கிராம் ஆய்வக பரிசோதனைக்காக சேகரித்தனர். அவை திருநெல்வேலியில் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Theni

தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்

4,September, 2020 Comments off

காஞ்சிபுரம் பகுதியில் தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 24க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் பிரபல அசைவ உணவகம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த அசைவ உணவகத்தில், உணவு வாங்கி சாப்பிட்டவர்களின் 24க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ரயில்வே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததால், தனியார் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 24க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம், காரணமாக அனுமதிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியானதும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள்!

29,May, 2020 Comments off

மா, வாழை, சப்போட்டா பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளதால், இவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குறைந்து வரும் விவசாயப் பரப்பளவு, குறுகிய காலத்தில் அறுவடை, அதிக விளைச்சல் ஆகிய காரணிகளுக்காக விவசாய பணிகளில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், விளைந்த காய்களை ராசாயன முறையில் பழுக்க வைப்பதும் தொடா்கிறது.

காய் பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க சுமாா் ஒரு வார காலம் பிடிக்கும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா். இந்த முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தற்போது ‘கால்சியம் காா்பைடு’ கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகளும், நுகா்வோரும் எளிதில் கண்டறிவதால், வியாபாரிகள் சிலா் ‘எத்திலின்’ என்ற ரசாயனப் பொடி மூலம் பழங்களை பழுக்க வைக்கின்றனா். இந்தப் பொடியை தண்ணீரில் கரைத்து பழங்கள் மீது தெளிக்கின்றனா். இந்த பொடியிலிருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்துள்ளதைக் கண்டறிய முடிவதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு கூறியதாவது:

பழங்களை பழுக்க வைக்க 100 பி.பி.எம். எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. எனவே, மா, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட (உணவுப் பாதுகாப்புத் துறை) நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் கூறியதாவது: மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வருகிறோம். சேலம், நாமக்கல் பகுதிகளிலிருந்து பெட்டியிலேயே மாம்பழங்கள் வருகின்றன. அங்கு என்ன செய்கின்றனா் என்பது தெரியவில்லை. கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதில் கிடங்கு ஏதும் கண்டறியப்படவில்லை.

வாழைக் காய்களை பழுக்க வைக்க எத்திலின் தெளிப்புக்கு அனுமதி உண்டு. ஒரு லிட்டா் தண்ணீரில் 0.4 சதவீதம் எத்திலின் கலந்து தெளிக்கலாம். ஆனால், எத்திலின் கலந்த தொட்டி தண்ணீரில் வாழை காய்களை அமிழ்த்தி எடுக்கக் கூடாது. இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

ஈரோட்டில் அதிகாரிகள் ஆய்வு

29,May, 2020 Comments off

Categories: DISTRICT-NEWS, Erode

மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு சீல்

29,May, 2020 Comments off

Categories: DISTRICT-NEWS, Salem

கடும் நிபந்தனை

26,March, 2020 Comments off

Categories: DISTRICT-NEWS, Villupuram

பொள்ளாச்சியில் ஆய்வு

9,March, 2020 Comments off

Categories: Coimbatore, DISTRICT-NEWS

வேலூர் மீன் மார்க்கெட்டில் ஆய்வு

3,March, 2020 Comments off

Categories: DISTRICT-NEWS, Vellore

மீன்கள் பறிமுதல்

3,March, 2020 Comments off

Categories: Dharmapuri, DISTRICT-NEWS