Archive

Archive for the ‘Perambalur’ Category

பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனை கடைகளுக்கு சீல்

2,October, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Perambalur

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

29,March, 2018 Comments off

https://2.bp.blogspot.com/-SBruPQlUVNk/WrxKv-Y9VqI/AAAAAAAA0oU/zs1I8hxR8ww1vFkIQsEKlSxLjJf9QLaJQCLcBGAs/s1600/5.jpg

Categories: DISTRICT-NEWS, Perambalur

பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

10,March, 2018 Comments off

பெரம்பலூர் மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மா.சௌமியா சுந்தரி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.மா.சௌமியா சுந்தரி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைப்பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சமையல் செய்பவர்கள் உணவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமாகவும் சமைத்து தர வேண்டும் எனவும், காலாவாதியான உணவு பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. உணவுபொட்டலத்தில் குளுளுயுஐ பதிவுஃஉரிமம் எண் அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுபொட்டலத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுப்பொருட்கள் அடுக்கிவைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும் உணவு தயார்செய்யப்படும் இடம் சுகாதாரமாக இருக்கவும், குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து தரப்படும் பாத்திரங்கள் கழுவி பயன்படுத்தவும், சமையல் செய்பவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கவும், குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு அதற்கான பதிவேடுகளை பராமரிக்கவும், பார்வையாளர்கள் பதிவேடு பராமரிக்கவும், உணவுமாதிரிகள் சமைத்தவுடன் எடுத்துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சமைப்பவர்களுக்கு உணவுப் பொருட்களில் அதிக நிறமிகள் சோ்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனைத்து உணவு நிறுவனங்களிலும் அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளிலும் உள்ளாக வாட்ஸ்அப் புகார் எண் ஒட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, வாட்ஸ்அப் எண் 9444042322 கொண்ட சுவரொட்டிகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி மற்றும் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களும் மற்றும் சுமார் 410 நபர்கள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Perambalur

பெரம்பலூர் மாவட்ட விடுதிகளில் உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் காப்பாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தல்

4,March, 2018 Comments off

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக கூட்டுறவு பண்டக சாலை கிடங்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்கள், தனியார் விடுதி காப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு பயிற்சி மைய விடுதி காப்பாளர் மற்றும் பானிபூரி கடை உரிமையாளர்களுக்கு, தரமான முறையில் உணவு தயாரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கூட்டுறவு பண்டகசாலை கிடங்கில் இருந்து வழங்கப்படும் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஒருமாத காலத்திற்குள் அச்சிடப்பட வேண்டும். விடுதி காப்பாளர்கள், உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்த்து தரமான உணவினை தயாரித்து பரிமாற வேண்டும். உணவு பொட்டலத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும்.

மேலும் விடுதிகளில் உணவு தயார் செய்யப்படும் இடத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும், சமையல் செய்பவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கவும், குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு அதற்கான பதிவேடுகளை பராமரிக்கவும், பார்வையாளர்கள் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் காப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவுப்படி அனைத்து உணவு நிறுவனங்கள், அனைத்து தனியார் மற்றும் அரசு விடுதிகள் உள்ளிட்டவற்றில் வாட்ஸ்-அப் புகார் எண் 9444042322 கொண்ட சுவரொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பற்றிய விளக்கங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள், பானிபூரி கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Perambalur

வணிகர்கள் உரிமம், பதிவு சான்றிதழ் பெற நாளை சிறப்பு முகாம்

17,November, 2017 Comments off

பெரம்பலூர் மாவட்டத்தில் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாத அனைத்து வகையான வணிகர்களும் சனிக்கிழமை (நவம்பர் 18) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, பயன்பெறலாம்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மா. செளமியா சுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள கூட்ட அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாதவர்கள், செலுத்துச்சீட்டு வாங்கி பொது சேவை மையம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உரிமம் பெறாத உணவகங்ளுக்கு "சீல்’ வைக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேக்கேஜ் உணவு பொருள்கள் உள்பட உணவு பொருள்களின் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கண்காணித்து வருகிறது. தரமற்ற, உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், சுவையூட்டும் பொருள்கள் பயன்பாடு தொடர்பாக, அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இந்நிலையில், உரிமம் பெறாமல் நடத்தப்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்குள் உரிமம் பெறாவிட்டால், அவற்றை மூடி "சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இந்த விதிமுறை உணவகங்களுக்கு மட்டுமின்றி, இலவசமாக பிரசாதம் வழங்கும் வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும்.
எனவே, 3 மாத அவகாசத்தில் அனைத்து உணவு வர்த்தக நிறுவனங்களும்  உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், உணவு பேக்கேஜ், கேட்டரிங் சேவை, உணவு உற்பத்திக்கான பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கும் இது பொருந்தும்.

தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’

16,October, 2017 Comments off

பெரம்பலூர் மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் உணவு பொருள்களின் தரம், விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  
உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், இ-சேவை மையங்கள் மூலம் பதிவுச்சான்று பெறலாம்.  
தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.  
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Perambalur

இனிப்புகளில் ரசாயனம் சேர்க்க கூடாது

11,October, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Perambalur

பெரம்பலூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

27,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Perambalur