Archive

Archive for the ‘Pudukkottai’ Category

புகையிலை பொருட்கள் விற்பனை

15,November, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

உணவு பாதுகாப்பு வழிகாட்டுதலை மீறுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

25,September, 2015 Comments off

உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதலை கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

பொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை கடைகள், வணிக நிறுவனங்கள் வழங்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நுகர் வோர்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள உரிமைகள், கடமைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைத்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நுகர்வோர் எளிதில் புகார் அளிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் தொலைபேசி மற்றும் முகவரியை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர்கள் உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 04322-222199, 94431 58399 ஆகிய எண்களில் மாவட்ட நியமன அலுவலருக்கோ 04322-221624 என்ற தொலைபேசியிலும் 94450 00311 என்ற எண்ணில் மாவட்ட ஆட்சியருக்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

இதில், நகராட்சி ஆணையர்கள் (பொ) ஜெ. சுப்பிரமணியன் (புதுக்கோட்டை), மீராஅலி (அறந்தாங்கி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

30,January, 2015 1 comment

பொன்னமராவதியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தேநீர், பேக்கரி வணிகர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி உணவுப் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.

கூட்டத்தில், உணவு வணிகர்கள் சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை தயார்செய்து விற்பனை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டது. உணவு வணிகத்திற்கான பதிவு மற்றும் உரிமத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

அறந்தாங்கியில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

21,November, 2014 Comments off

அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டு, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கு. வரலட்சுமி தலைமையில், அறந்தாங்கி நகரப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர் கு. சரவணக்குமார் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.

இதில், அறந்தாங்கி பேருந்து நிலையம், காந்திபூங்கா சாலை, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 78 கடைகளில் நடத்திய ஆய்வில், காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பிஸ்கட், அதிக சாயம் ஏற்றப்பட்ட மிட்டாய்கள், சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ. 16,500 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், ஹோட்டல், சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட 13 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மேலும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

ஆய்வில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுமுகம், வேல்முருகன், ஜேம்ஸ், ரெங்கசாமி, அருண்குமார், ராஜேந்திரன், மகாகனி, ராஜன் உள்ளிட்டோரும், நகராட்சி துப்புரவு பணியாளர்களும் பங்கேற்றனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

அறந்தாங்கி அருகே காலாவதியான பொருட்கள் பறிமுதல்

14,November, 2014 Comments off

pudukottai

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

ஆலங்குடி, வடகாட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

8,November, 2014 Comments off

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜி. வரலெட்சுமி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எஸ். ஜேம்ஸ், எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலங்குடி, வடகாடு பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் என ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

பொன்னமராவதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அழிப்பு

25,September, 2014 Comments off
 

பொன்னமராவதி, செப்.25:

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.

பொன்னமராவதி பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆணையின்படியும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அறிவுறுத்துதலின் பேரிலும், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆலோசனையின்படியும், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா அம்பலகாரர் முன்னிலையிலும் வரித்தண்டலர் கேசவன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் குடிநீர் பணியாளர் பாபு, துப்புரவு பணியாளர்கள் குழுவாக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பைகள் மற்றும் கப்புகள் சுமார் 102 கிலோ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மறு உபயோகத்திற்கு பயன்படாத வகையில் அழிக்கப்பட்டது.

மேலும் ரூ.7ஆயிரத்து 500 மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சௌந்திரராஜன் ஆகியோரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

அறந்தாங்கியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

3,September, 2014 Comments off

அறந்தாங்கியில் உணவு பாதுப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திடீர் சோதனை
அறந்தாங்கி நகரில் காலாவதியான, தயாரிப்பு தேதிகள் இல்லாத உணவு பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலெட்சுமி தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், அறந்தாங்கி நகராட்சி துப்புரவு அலுவலர் ஜெயராமன் முன்னிலையில், உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, அறந்தாங்கி நகராட்சி ஆகிய துறைகள் இணைந்து அறந்தாங்கி நகர் முழுவதும் உள்ள கடைகளில் 4 குழுக்களாக பிரிந்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொருட்கள் பறிமுதல்
அறந்தாங்கி நகர் முழுவதும் 196 மளிகை கடைகள், உணவகம், டீக்கடை, காய்கறிக்கடை, பழக்கடை, மருந்துக்கடைகளில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வில் பல்வேறு கடைகளில் ரூ.87 ஆயிரத்து 669 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், ரூ.15 ஆயிரத்து 300 மதிப்பிலான மருந்து பொருட்கள், ரூ.2 ஆயிரத்து 150 மதிப்பிலான பொது வினியோக திட்ட மண்ணெண்ணை மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வில் அறந்தாங்கி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 35 பேர் பணியாற்றினர். அறந்தாங்கியில் ஒரே நாளில் நகர் முழுதும் கடைகளில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

அறந்தாங்கியில் அதிரடி 200 கடைகளில் ஆய்வு

3,September, 2014 Comments off

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உணவு பாதுகாப்பு துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து ஹோட்டல், டீ கடை மல்லிகை கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, டீ கடை,ஹோட்டல், பேக்கரி, பழக்கடை உட்பட, 200 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி, டீ கடையில் பயன்படுத்திய, 125 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல்களில் பயன்படுத்திய, ஐந்து வீட்டு உபயோக சிலிண்டர்களையும் கைப்பற்றினர். பழக்கடைகளில் ஆய்வு செய்த போது, செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள், பேக்கரியில் வைத்திருந்த காலாவதியான தின்பண்டங்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். "காலவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai