Archive

Archive for the ‘Sivaganga’ Category

பாஸ்ட் புட் உணவில் பழைய இறைச்சி கலப்பு

10,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/d7013-4.jpg?w=741&h=634

Categories: DISTRICT-NEWS, Sivaganga

சிறப்பு முகாம்

22,November, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Sivaganga

ஓட்டலில் பிளாஸ்டிக் இலையில் உணவு

18,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Sivaganga

பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற்றுக் கொள்ளலாம்

22,June, 2017 Comments off

சிவகங்கை,

உணவுப் பாதுகாப்புத் துறையின்கீழ் பதிவுச் சான்றிதழை தகுதிவாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

உரிமம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள், இறைச்சி கடைகள், டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். வணிகர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானம் போன்றவற்றிற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது அவசியமாகும். இந்த உரிமத்தினை பெற விரும்பும் விற்பனையாளர் ரூ.2000–மும், தயாரிப்பாளர் ரூ.3000–மும் கட்டணமாக மாவட்ட கருவூலம் அல்லது சார் கருவூலத்தில் காசோலை எண் பெற்று வங்கியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம்

வருடாந்திர விற்பனை செய்யும் அளவு ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக உள்ள வணிகர்கள் பதிவுச் சான்றிதழுக்கு ரூ.100 மட்டும் செலுத்தினால் போதும். அதன்பின்னர் http://www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தங்களது கையொப்பமிட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு பெறுவதற்கு உணவுப் பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும் என்றும், இடைத்தரகர்கள் எனக் கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

பொது சேவை மையங்கள்

உணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெறலாம். மேலும், உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவுப் பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga

ரசாயன பவுடர் கலந்த பச்சை பட்டாணி

5,June, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Sivaganga

இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்யனுமாம் – ஆட்சியர் அறிவிப்பு

28,April, 2017 Comments off

சிவகங்கையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி அறிவிப்பி வெளியிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உணவு வணிகர்கள் மட்டுமின்றி அன்னதானம் செய்பவர்களும் உரிமம் பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பது:

“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உணவு விடுதிகள், மளிகை கடைகள், அடுமனை கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள், பால் வர்த்தகர்கள், சாலையோர உணவு வர்த்தகர்கள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டும்.

மேலும், வணிகர்கள் மட்டுமின்றி, மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உரிமம் பெறுவது அவசியம்.

இந்த உரிமத்தினை பெற விரும்புவோர் http://www.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து அதில் தங்களது கையொப்பமிட்டு இணையத்தளத்தில் விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும். இடைத்தரகர்கள் என்று கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

உணவு பாதுகாப்புத் துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது இ–சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெறலாம்.

மேலும், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீட்டிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும்.

உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் குறித்த தங்களது சந்தேகங்கள் கேட்க மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதேபோல இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையரகம் அல்லது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

எனவே, நுகர்வோர்களும், உணவு வணிகர்களும் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga

நிராகரிக்கப்பட்ட கோழிக்கறி விற்பனை அமோகம் `சீக்கை’ வரவழைக்கும் சிக்கன் பக்கோடா காரைக்குடியை கதற வைக்கும் வியாபாரிகள்

12,April, 2017 Comments off

காரைக்குடி : ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்ட கோழிக் கறியை குறைந்த விலைக்கு வாங்கி தயார் செய்யப்படும் சிக்கன் பக்கோடா விற்பனை காரைக்குடியில் பல்வேறு இடங்களில் நடந்து வருவதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடியில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பகுதிகளில் தள்ளு வண்டிகளில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தவிர புதுவயல், பள்ளத்தூர் மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு தேவையான கோழிக்கறி கோவை, கேரளா, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனை காரைக்குடியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு கிலோ ரூ. 35 வரை விற்பனை செய்கின்றனர்.
இதனால விலை மலிவு என்பதால் சிறு வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி நாவை மயக்கும் மசாலக்களை கலந்து “சிக்கன் பக்கோடா” என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
100 கிராம் சிக்கன் பக்கோடா ரூ. 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. கமகமக்கு சுவையுடன் சூடாக விற்பனை செய்வதால் குடி மகன்கள் முதல் பொதுமக்கள் வரை ஆர்வமுடன் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கெட்டுப்போன கறியில்  தயார் செய்யப்படும் உணவு பொருட்களால் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற விற்பனை நிலையங்களை  சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில்,” ஏற்றுமதி தரம் போக நிராகரிக்கப் பட்ட கோழிக்கறியை இப்பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வருகின்றனர். இதற்கென  தனியாக ஒரு பெயரினை வைத்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த கோழிக்கறி முறையாக சுத்தம் செய்யாமலும், ஒரு வித தூர்நாற்றத்துடன்  பீரிசர் பாக்ஸ்களில் வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. கெட்டுப் போன இந்த கறியை “சிக்கன் பக்கோடா” என்ற பெயரில் விற்கப் படுகிறது.
ஒரு கிலோவுக்கு ரூ. 100 முதல் 150 வரை லாபம் வருவதால் புற்றீசல் போல் மாவட்டம் முழுவதும் கடைகள் பெருகி வருகிறது. காரைக்குடி பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. தரைக் கடை வியாபாரிகளுக்கு தேவையான வண்டிகளும் மொத்த வியாபாரிகளே வாங்கி தந்து விடுகின்றனர்” என்றனர்.
இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில்.  24 மணிநேரத்துக்கு மேலான ஆன கறி, கோழி, மீன் போன்ற வகைகளை சாப்பிடும் பேது வாந்தி வயிற்று போக்கு, சீத பேதி போன்றவைகள் மட்டும் இல்லாமல் குடல் அழுகல் நோய் ஏற்படும். இது போன்ற உணவு பொருட்களை தொடர்ந்து உண்பதால் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga

உணவு பாதுகாப்பு துறை ‘டம்மி ‘

6,January, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Sivaganga

புழு வைத்த உணவுபொருட்கள்

29,December, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Sivaganga