Archive

Archive for the ‘The Nilgiris’ Category

உணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்:சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

18,May, 2018 Comments off

ஊட்டி:மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் முகாம் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை அடுத்து, ‘அந்தந்த மாவட்டங்களில் மக்கள் அன்றாட பயன்படுத்தும் உணவு, தின்பண்டங்களின் தரத்தை அறிந்து கொள்வது; சில உணவு வகைகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதை எவ்வாறு கண்டுபிடிப்பது,’ என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில், மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னுார் சிம்ஸ் பார்க், கோத்தகரி கோடநாடு காட்சி முனை என, ஐந்து இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதுடன், புகார் குறித்து ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஸ்டால் அமைத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், கல்லுாரி மாணவர்கள் மோகன்குமார், அருண்குமார் ஆகியோர் அங்கு சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்

18,May, 2018 Comments off

காலாவதி பொருட்கள் விற்பனையா?புகார் தெரிவிக்க புதிய வசதி

6,May, 2018 Comments off

நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்கள், நகர் பகுதிகளில் காலாவதி பொருட்கள் விற்பனை குறித்து, புகார் தெரிவிக்க, மாநில உணவு பாதுகாப்பு நிர்வாகத்தின் ‘வாட்ஸ்-ஆப்’ எண், ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ள ஓட்டல்கள்; உணவு விடுதிகள்; சிறிய கடைகளில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வுகள், உணவு பாதுகாப்பு நிர்வாகம் சார்பில் நடந்து வருகின்றன.இந்நிலையில், ‘ஊட்டியில் உள்ள சில சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல், தின்பண்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பதாகவும், இதனால், சுற்றுலா பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது,’ எனவும், சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு புகார்கள் சென்றன.
இதை தொடர்ந்து, சென்னை தலைமை அலுவலக உத்தரவுப்படி, 94440-42322 என்ற, ‘வாட்ஸ்-ஆப்’ எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நகரங்களில் தரமற்ற உணவு, தின்பண்டங்கள் விற்பனை குறித்து, சுற்றுலா பயணிகள் சரியான விலாசத்துடன் புகார் தெரிவித்தால், அந்த புகார் யார் அனுப்பியுள்ளனர் என்ற விபரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். புகாரை பெறும் அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு கொண்டு, அதற்கான நடவடிக்கை குறித்து படம் அல்லது வீடியோவை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதன் முதலில், மாநிலத்தில், ஊட்டியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில், 50 இடங்களில் அதற்கான ‘வாட்ஸ்-ஆப்’ எண் கொண்ட விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், ”மாநில அலுவலகத்தின் உத்தரவுப்படி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில், 50 இடங்களில் ‘வாட்ஸ்- ஆப்’ எண் கொண்ட விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் உண்மையான தகவல்களை அனுப்பலாம். 24 மணி நேரத்துக்குள் அதற்கு தீர்வு காணப்படும்,” என்றார்.

பந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு

7,April, 2018 Comments off

https://4.bp.blogspot.com/-L7Upu_sxT4s/WsgkYi1U_SI/AAAAAAAA0uE/swWgDqRcMM0MtW0BuBYqSCrIrZMhzP6yACLcBGAs/s1600/4.jpg

கலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு

5,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/925b4-1.jpg

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

1,April, 2018 Comments off

கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள பனஹட்டி, கக்குச்சி கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சம் கிலோ சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் கலப்பட தேயிலை தூளை அழிக்காமல் அதிகாரிகளுக்கு தெரியாமல் லாரிகள் மூலம் கடத்தி வெளி மாநிலங்களுக்கு மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்வதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Read more…

தரமான உணவு பொருட்கள் காலத்தின் கட்டாயம்

22,March, 2018 Comments off

பந்தலுார் : மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆசிரியர் முருகன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் தலைமை வகித்தார்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் குமார் பேசுகையில், ”சில வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் செய்து வருகின்றனர். ”இதனால், எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாம் உணவு பொருட்களை கடைகளிலிருந்து வாங்கும்போது, முறையான விபரங்கள் குறிப்பிட்டுள்ள பொருட்களை, பார்த்து வாங்க வேண்டும். மேலும், மாணவர்கள், தங்கள் பெற்றோர் மத்தியில் தரமான உணவு பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.
உணவுப்பொருள் பாதுகாப்பு குறித்து, நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துறை சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாயம் கலந்த தேநீரை கண்டறிவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

24,February, 2018 1 comment

https://foodsafetynews.files.wordpress.com/2018/02/3eff6-1.jpg

சாயம் கலந்த கோதுமை உற்பத்தி

4,January, 2018 Comments off