Archive

Archive for the ‘Thiruvarur’ Category

4 பேருக்கு தண்டனை

6,September, 2019 Comments off

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

மன்னார்குடியில் விழிப்புணர்வு முகாம்

3,November, 2018 Comments off

5

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1¼ லட்சம் புகையிலை-காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

28,April, 2018 Comments off

கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1¼ லட்சம் புகையிலை-காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ரூ 1 லட்சத்து 24 ஆயிரத்து 350 மதிப்புள்ள காலாவதியான உணவுபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மன்னார்குடி நகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் மன்னார்குடி டெப்போ ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை-காலாவதியான உணவு பொருட்கள் கொட்டப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணாழகன், செல்வகுமார், குருசாமி, அன்பழகன் மற்றும் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வையாபுரி,துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யகூடாது. மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

தரமான உணவு வேண்டும்!’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்

4,April, 2018 Comments off

பல்கலைக்கழக விடுதி கேன்டீனில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்ந மாணவர்கள் படித்துவருகின்றனர். வெளிமாநிலத்தினர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக விடுதியில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று கூறி, மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, இன்று இரவுக்குள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என  மெயில் அனுப்பியுள்ளனர், கல்லூரி நிர்வாகத்தினர்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், `கல்லூரி விதிகளின்படி வருஷத்துக்கு ஒருமுறை கேன்டீன் கான்ட்ராக்ட்டை மாத்தணும். ஆனா கல்லூரி நிர்வாகமோ, ரெண்டு வருஷமா ஒப்பந்ததாரரை மாத்தல. வருஷத்துக்கு ஒருமுறை கான்ட்ராக்ட்டை மாத்தும்போது, சாப்பாடும்  நல்லா இருக்கும். எங்களுக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுப்போம். கேன்டீனை மாற்றாததால, உணவும் நல்லா இல்ல. எங்களுக்குப் பிடிச்ச உணவை சாப்பிட முடியல.

இந்த கேனன்டீன்ல N -1 என்ற திட்டம் இருக்கு.  N -1 திட்டம்னா, நான் 10 நாள் விடுமுறையில வீட்டுக்குப் போனா, அந்த 10 நாள்ல ஒரு நாளுக்கான பணம் செலுத்தணும்.  சாப்பாட்டுல அஜினோமோட்டோ என்கிற மோனோ சோடியம் குலூட்டோமேட் போன்ற தடைசெய்யப்பட்ட பெருள்களை எல்லாம் பயன்படுத்துறாங்க. மாணவர் கமிட்டியினர் கேன்டீனை சோதனை செய்தபோது, 4 கிலோ  மோனோ சோடியம் குலூடோமேட்  இருந்ததைக் கண்டுபிடிச்சாங்க.

எங்க கேன்டீன்ல, உணவின் தரம்குறித்து சோதிக்க ஆசிரியர் கமிட்டியும் இருக்கு. ஆனா, அவங்க கேன்டீன் பக்கம் வர்றதே இல்லை. மாணவர்களுக்கான பாதுகாவலர்களாக முன்னாள் ராணுவத்தினர் இருக்காங்க. ஆனா, அவங்களும் கேன்டீன்ல கொடுக்குற இலவச சாப்பாட்டுக்காக, இதைக் கண்டுக்காம போய்டுறாங்க. சமீபத்துலகூட 106 பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கு. உணவு சுத்தமா இருக்காது. புழு, இரும்புத் துண்டுனு என்னென்னவோ கிடக்கும். இதனால பாதிக்கப்பட்டவங்களுக்கு, ஒரு மாத உணவுக்கான தொகையை திரும்பத் தரணும், கேன்டீன் கமிட்டியை மாத்தி அமைக்கணும், தடை செய்யப்பட்ட பொருள்களை உணவுல கலந்த கேன்டீன் நிர்வாகத்துக்கு தக்க தண்டனை பெற்றுத் தரணும், புது கேன்டீன் நிர்வாகத்தைக் கொண்டுவரணும் என்ற 4 கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என முடித்தார்.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

உரிமம் பெற டிச .31 கடைசி நாள்

23,December, 2017 Comments off

23.12.2017 - The Hindu

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

உணவு பாதுகாப்பு திட்ட உரிமத்திற்கான சிறப்பு முகாம்

22,November, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

தேநீர் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தினால் நடவடிக்கை

17,November, 2017 Comments off

திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி பகுதிகளில் தேநீர் கடைகளில் கலப்பட டீ தூள், காபி தூள் பயன்படுத்தப்படுகிறதா என திருத்துறைப்பூண்டி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அவர் கூறியது: திருத்துறைப்பூண்டி பகுதியில் சுமார் 23 தேநீர் கடைகளில் கலப்பட டீத்தூள், காபி தூள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டன. உணவு பதார்த்தங்கள் தரமான பொருள்களைக் கொண்டும், தரமான சமையல் எண்ணெய்யை பயன்படுத்தியும் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டன. இதில் 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
உணவு பதார்த்தங்களை மூடிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும். கடை அருகே கழிவு நீர் தேங்கக் கூடாது. நாள்தோறும் பினாயில் கொண்டு கடைகளை கழுவ வேண்டும் என கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 
ஆய்வின் போது, நன்னிலம் உணவு பாதுகாப்பு அலுவலர் யோகநாதன் உடனிருந்தார்.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

மன்னார்குடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

14,November, 2017 Comments off

மன்னார்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்மையில் நடத்திய சோதனையில், காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கோ. செல்வராஜ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், ரூ. 5,800 மதிப்பிலான காலாவதியான பிஸ்கட்கள், ரூ.12,200 மதிப்பிலான காலாவதியான மளிகைப் பொருள்கள், ரூ. 6,700 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
இந்த ஆய்வில்,  உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் க. மணாழகன் (மன்னார்குடி), என்.ரெங்கராஜ் (கூத்தாநல்லூர்), எஸ். செல்வகுமார் (முத்துப்பேட்டை), சுகாதார ஆய்வாளர் சு. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

பலகாரங்களின் தரத்தை கண்காணிக்க கலப்பட தடுப்பு குழு

13,October, 2017 Comments off

Daily Thanthi - Sweet Bakery -  12.10.2017

Categories: DISTRICT-NEWS, Thiruvarur