Archive

Archive for the ‘Thoothukudi’ Category

போலி உப்பு மூட்டைகள் பறிமுதல்

20,August, 2019 Comments off

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

உணவகங்களில் ஆய்வு

14,October, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/10/20e97-4.jpg

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

தூத்துக்குடியில் 200 கிலோ அழுகிய மாம்பழம் அழிப்பு ; அதிகாரிகள் திடீர் ஆய்வு

21,May, 2018 Comments off

view-source:https://i0.wp.com/www.onetamilnews.com/News_Images/13303.jpg

தூத்துக்குடி 2018 திங்கள்கிழமை மே 21 ;தூத்துக்குடி மார்க்கெட் சந்திப்பு பகுதி பழக்கடை கிட்டங்கிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  சோதனை செய்தனர். அப்போது அழுகிய மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து  மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரைப்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  டாக்டர் தங்க விக்னேஷ்  தலைமையில் அதிகாரிகள் தூத்துக்குடி மார்க்கெட் பகுதிகளில் இன்று  திடீர் சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று  திடீர் சோதனை நடத்தியது. இந்த குழுவில் அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், டைட்டஸ் பர்னாந்து, பாலசுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர்.

சோதனையின் போது, அழுகிய மாம்பழங்கள்  கண்டுபிடிக்கப்பட்டு   200 கிலோ மாம்பழம் , பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பழங்கள் கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ்  கூறும் போது, “கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு இருக்கிறதா? என சோதனை செய்தோம். கார்பைடு கல் வைத்து பழங்களை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்திலே கார்பைடு கல் வைத்து பழங்கள் பழுக்கவைக்கவில்லை இது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

துாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை!

20,May, 2018 Comments off

துாத்துக்குடியில் கார்பைடுகல் முலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. மேலும் மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வை பெறலாம்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை காலங்களில் மாம்பழ சீசன் வரும். வருடம் ஒரு முறை மட்டும் சீசன் என்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவதால், இந்த காலத்தில் மாம்பழம் விற்பனை அதிகமாக இருக்கும். துாத்துக்குடியில் முன்பு வைக்கோல் முலம் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களே விற்பனைக்கு வந்தன. ஆனால் தற்போது பெருமளவு கார்பைடு முலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களே அதிக அளவில் உலா வருகின்றன.

துாத்துக்குடியில் உள்ள பழக்கடைகளுக்கு இங்குள்ள 2 பெரும் புள்ளிகளே அதிகளவில் மாம்பழங்களை சப்ளை செய்கின்றனர். மேலும் அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது என வியாபாரிகளிடயே ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சீசன் முடிவதற்குள் விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதுபோன்று ஆங்காங்கே வாகனங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு மலிவு விலையில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது தெரியாமல் இந்த பழங்களை அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.

உணவு பாதுகாப்பு துறை அலட்சியம்..?

ஆனால் துாத்துக்குடியில் இதையெல்லாம் தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை என்ற ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. துாத்துக்குடியில் முன்பு உணவு பாதுகாப்பு துறை தர கட்டுப்பாட்டு அதிகாரியாக ஜெகதீஸ் சந்திர போஸ் என்பவர் இருக்கும் போது அடிக்கடி ஆய்வு செய்து இது போன்று கார்பைடு மாம்பழங்களை பறிமுதல் செய்தார். தற்போது அந்தத்துறைக்கான அதிகாரி இருக்கிறாரா என்பதே தெரியாத நிலை உள்ளது. என்ன காரணத்தினால் உணவு பாதுகாப்பு துறை இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என பாெது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கார்பைடு மாம்பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும்.

கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும். மக்கள் மாம்பழங்களை சாேதிக்காமல் வாங்கக்கூடாது இவ்வாறு அவர் கூறினார். மக்கள் உயிருக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பைடு மாம்பழங்களை முற்றிலுமாக ஒழிக்க துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசின் முத்திரை இல்லாமல் விற்பனை

தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் திறந்த வெளியில் ஆடு, மாடுகள், பன்றிகளை வெட்டி விற்கின்றனர். அந்த வழியாக செல்லும் அதிகாரிகள் கூட இதனை கண்டு கொள்வதில்லை. பல இடங்களில் அரசின் முத்திரை இல்லாமல் இறந்த ஆட்டு இறைச்சிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மேலும், விற்காத ஆடு, மாடு இறைச்சிகளை ஐஸ் பெட்டிகளில் வைத்து மீண்டும் விற்கப்படுவதால் வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இவ்விசயத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

குளத்தூரில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

2,March, 2018 Comments off

குளத்தூரில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்து கூட்டத்தை துவக்கிவைத்தார். குளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் குழு பெண்களும் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவபாலன் பேசுகையில், கடைகளில் தரமான உணவுப் பொருட்களை கவனமாக பார்த்து வாங்குவது.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என உணவு பொருள்கள் குறித்த பல தகவல்களை பேசினார். தொடர்ந்து பேச்சுப்போட்டி, வினாடி,வினா, படம்வரைதல் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அனைத்து மகளிர் குழு பெண்கள் செய்திருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

ஆழ்வார் திருநகரி வட்டார உணவு பாதுகாப்பு செய்திகள்

2,March, 2018 Comments off

12f_0001

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

ஆத்தூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை ;3000ரூ மதிப்புள்ள பான்மசாலா, குட்கா , புகையிலை பறிமுதல்

14,February, 2018 Comments off

Onetamil News

ஆத்தூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை  ;3000ரூ மதிப்புள்ள பான்மசாலா, குட்கா , புகையிலை  பறிமுதல் செய்தனர்.
ஆத்தூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் இதில் சுமார் 3000ரூ மதிப்புள்ள பான்மசாலா, குட்கா , புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட  பொருட்களை கைப்பற்றி  அழித்தனர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு  அலுவலர்  ஆழ்வை வட்டாரம் மாரியப்பன் கூறுகையில்  தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை  தடுக்க ஆணையர் சென்னை அமுதா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் வழிகாட்டுதலின் படி சுமார் 12   கடைகளில் நடத்திய சோதனையில் 3000ரூ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் சிக்கியதாக தெரிவித்தார் இந்த சோதனையில் உடன்குடி  உணவு பாதுகாப்பு அலுவலர் கணேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டனர்…

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை முகாம் நாளை தொடக்கம்

9,January, 2018 Comments off

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 9) தொடங்குகிறது. 
இதுகுறித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மாரிசாமி, பொன்ராஜ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006இன் கீழ் உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். 
உணவு வணிகம் செய்வோர் ஆண்டுக்கு ரூ. 12லட்சத்திற்கு கீழ் விற்று கொள்முதல் புரிவோர் பதிவுச் சான்றிதழ் பெற தகுதியுடையவர் ஆவர். ரூ. 12 லட்சத்திற்கு மேல் விற்று கொள்முதல் புரிவோர் உரிமம் பெற தகுதியுடையவர் ஆவார். பதிவுச் சான்று அல்லது உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்வது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 31இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். 
எனவே, இந்தக் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். இதையடுத்து, கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட உணவு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச் சட்டம் உரிமம் மற்றும் பதிவு முகாம் கோவில்பட்டி, கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
எட்டயபுரம் வர்த்தக சங்க கட்டடத்தில் புதன்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரையும் இம்முகாம் நடைபெறுகிறது. 
இந்த முகாம்களை கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பதிவு மற்றும் உரிமம் பெறாத உணவு வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. 
கயத்தாறு ஒன்றியத்திற்கு உள்பட்ட உணவு வணிகர்களுக்கு கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அன்னை எலெக்ட்ரிக்கல்ஸ் பண்டக சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கயத்தாறு தெற்கு தெருவில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை (ஜன.10) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
கயத்தாறு ஒன்றியத்திற்கு உள்பட்ட உரிமம் மற்றும் பதிவு பெறாத உணவு வணிகர்கள் இம்முகாமை பயன்படுத்தி உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

திருச்செந்துாரில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

12,December, 2017 Comments off

திருச்செந்தூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செந்தூர் பகுதியில் கலாவதியான பொருட்கள் விற்பகப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் ஆலோசனையின் பேரில் திருச்செந்தூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பொன் முத்து ஞானசேகர் வடக்குரதவீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் வடக்குரதவீதி பெட்டி கடை ஒன்றில் கலாவதியான குளிர்பானங்கள் 52 லிட்டர் கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும். புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கலாவதியான பொருட்கள் விற்றது தொடர்பாக சட்டபடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பொன் முத்து ஞானசேகரன் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi