Archive

Archive for the ‘Tiruchirappalli’ Category

திருச்சி மாவட்டத்தில் தரமற்ற நெய் விற்றால் புகார் தெரிவிக்கலாம்

26,April, 2018 Comments off

கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய் தயாரிப்பாளர்கள்,  மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் கலப்படமில்லாத சுத்தமான  வெண்ணெய் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நெய் மட்டும் விற்பனை  செய்ய வேண்டும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழிமுறைகளை  பின்பற்றுவதன் மூலம் தரமற்ற நெய்யை பயன்படுத்துவதால் ஏற்படும்  நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அக்மார்க் சான்று பெற்ற  தரமான நெய்யை இனம் கண்டு வாங்க வேண்டும். பெயரில்லாத, தயாரிப்பு தேதி,  காலாவதி தேதி இல்லாத நெய்யை வாங்குவதை தவிர்க்க வேண்டும். விலை குறைவானது  என்று தரமற்ற கலப்படமான நெய்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நுகர்வோராகிய  பொதுமக்கள் நெய் வாங்கும்போது அவை உணவு பாதுகாப்பு துறை மூலம் பதிவு  உரிமம் எண் பெற்றுள்ளதையும், பேக்கிங் செய்யப்பட்டுள்ள நெய்யில் தயாரிப்பு  தேதி, காலாவதி தேதி ஆகியவை உள்ளதையும் உறுதி செய்தபின் அவற்றை வாங்கி  உபயோகிக்க வேண்டும்.
பேக்கிங்கில் சிறிய எழுத்தில் தீபநெய் (lighting purpose) என்று  பிரிண்ட் செய்த நெய்யை கண்டிப்பாக உணவு உபயோகத்திற்கு வாங்க கூடாது.  சுத்தமான வெண்ணெயில் தயாரித்த கலப்படமற்ற சுத்தமான நெய்யை வாங்கி  பயன்படுத்த வேண்டும். கலப்படமான தரமற்ற நெய் விற்பதை கண்டறித்தால்  வாட்ஸ்அப் எண் 9444042322ல் புகார் அளிக்கலாம்.
மேலும்  விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து  நிர்வாகத் துறை, (உணவு பிரிவு) ரேஸ் கோர்ஸ் ரோடு, துணை இயக்குநர்  சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி-620 021.  அலுவலக தொலைபேசி எண்: 0431-2333330. எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து  கொள்ளலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி டம்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு

12,April, 2018 Comments off

கோடை காலத்தை முன்னிட்டு குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை கலப்படமில்லாத சுத்தமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திகுறிப்பு: கோடை காலங்களில் குளிர்பானங்கள், பழச்சாறு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர், விற்பனையாளர் தற்காலிக குளிர்பானம், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்பு துறை மூலம் உரிமம், பதிவு சான்றுகளை கட்டாயமாக பெற்று தான் விற்பனை செய்ய வேண்டும்.

Read more…

திருச்சி:காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

17,February, 2017 Comments off

 

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் காலாவதியான குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. சமயபுரம் கண்ணூர் பேருராட்சியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி ஆய்வு செய்தனர். இதில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கும் பணிகள் இன்று நடைபெற்றது. அப்போது, சுமார் 500 லிட்டர் குளிர்பானம் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

உணவுப் பொருள்களை பொட்டலமிட செய்தித்தாள்களை பயன்படுத்தக்கூடாது

26,December, 2016 Comments off

திருச்சி மாவட்டத்தில் உணவுப் பொருள்களை பொட்டலமிடுவதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருச்சி மாவட்டத்தில் உணவுப் பொருள்களை பொட்டலம் இடுவதற்கும், மடித்துத் தரவும், பரிமாறவும் செய்தித் தாள்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரங்களை மடித்து தருவதால், செய்தித் தாள்களில் உள்ள மையில் காரீயம் போன்ற ரசாயனப் பொருட்கள் உணவுப்பொருள்களில் சேர்ந்து விடுகிறது. இதனால் நுகர்வோருக்கு ரத்த சோகை, செரிமான குறைபாடு, முதியவர்கள், சிறுவர்களுக்கு வைட்டல் ஆர்கன் எனப்படும் நுரையீரல், கல்லீரல், இருதயம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட செல்கள் அழியவும் காரணமாக உள்ளது. இதனால் புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், உணவுப் பொருட்களை பொட்டலம் இடுவதற்கும், மடிப்பதற்கும் எண்ணெய் பலகாரங்களை வைத்து பரிமாறுவதற்கும் செய்தித் தாள்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் வியாபாரிகளும், நுகர்வோரும் இந்த உத்தரவை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில் அதிரடி

14,July, 2016 Comments off
  • மணப்பாறையில் அதிரடி

காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் பறிமுதல்

21,April, 2016 Comments off

 

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கென்னடி தலைமையில் அலுவலர்கள் சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் ஸ்வீட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள், குடிநீர் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட நிறமிகள் கலந்த ஸ்வீட் வகைகள், கலப்படமான டீ தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 120 கிலோ எடையுடைய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் ரூபாய் ஆகும். பின்னர் காலாவதியான பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கண்ணனூர் பேரூராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று பேரூராட்சி பணியாளர்கள் அழித்தனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காலாவதி குடிநீர் விற்பனை

17,April, 2016 Comments off
 

:

தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் சமயபுரம் கோயில் கடைகளில் திடீர் ஆய்வு

15,March, 2016 Comments off
 

திருவாடானை பகுதி ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறி

9,March, 2016 Comments off