Archive

Archive for the ‘Tirunelveli’ Category

தென்காசி சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 115 கிலோ மீன்கள் அழிப்பு

27,October, 2017 Comments off

தென்காசி சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
115 கிலோ மீன்கள் அழிப்பு

தென்காசி,

தென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கிழக்கு பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு பலர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு விற்கப்படும் மீன்களில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக சிலர் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு வாட்ஸ்–அப் மூலம் புகார் செய்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், நெல்லை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின்படி தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர் ஹக்கீம் தலைமையில் அலுவலர்கள் அப்துல்காதர், மகேஸ்வரன், காசிம் ஆகியோர் நேற்று காலை 7 மணியளவில் தென்காசி மீன் சந்தையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கடைகளில் இருந்த மீன்களை எடுத்து பார்த்தனர். அதில் சில கடைகளில் அழுகிய மீன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 115 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

சுப்புலாபுரத்தில் 40 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

25,September, 2017 Comments off

திருநெல்வேலி,:

சுப்புலாபுரம் சுற்றுப்பகுதிகளில் உ ணவு பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணெய் வியாபாரிக ளிடம் ஆய்வு செய்தபோது 40 லிட்டர் கலப்பட சமையல் எண் ணெயை பறிமுதல் செய்தனர்.

கரிவலம் வந்தநல்லுாரை அடுத்த சுப்புலாபுரம் கிராமத் தில் கலப்பட எண்ணெய் உதிரியாக விற்பனை செய்யப் படுவதாக தமிழக உணவுத் துறை மற்றும் நிர்வாகத் துறை ஆணையர் அமுதா விற்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார், உணவு ஆய்விற்காக உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்ட குழுவை அமைத்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகுமாரசாமி, சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் கொண்ட குழு சுப்புலாபுரம் கிராமத்தில்  கலப்பட் எண்ணெய்  விற்பனை செய்யப்படுகிறதா என அறிய எண்ணெய் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களது இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வீடுக ளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் இருந்த சுமார் 40  லிட்டர் கடலை எண் ணெய், பாமாயில் போன்றவற்றை பறிமுதல் செய்து கரிவலம்வந்த நல்லுார் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று  சீல் வைத்தனர்.  இதுதவிர அதிகாரிகள், எண்ணெய் வியாபாரிகளின் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்கு வைத்திருந்த பாமாயில் கடலை எண்ணெயை உணவு மாதிரி எடுக்கப் பட்டு அரசால் வரையறுக்கப்பட்ட உணவு பகுப்பாய் விற்காக அனுப்பினர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ‘ பொதுமக்கள் உதிரியாக விற்கப்படும் எண்ணெயை வாங்க கூடாது. பாக்கெட் எண்ணெய் வாங்கும் போது விளக்கெரிக்க பயன்படுத்த மற்றும் பூஜா எண்ணெய் அல்லது வெளி உபயோகத்திற்கு மட்டும் என சிறிய அளவில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் இருந்தால், அந்த எண்ணெய் பாக்கெட்டுகள் தரம் குறைந்தவை மற்றும் பாதுகாப்பற்றவை என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் மேற்கண்ட எண்ணெய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் ’என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

மானூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி சோதனை

15,June, 2017 Comments off

மானூர்: மானூர்  பகுதியிலுள்ள  கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார். ஆந்திரா, கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை பிளாஸ்டிக் அரிசி சிக்கவில்லை.
இந்நிலையில் மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரிசி கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த சோதனை நடந்தது. ஆனால், பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாவட்ட  உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் அறிவுரைப்படி  மானூர்  பகுதியில்  உள்ள அரிசி கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அரிசியை தண்ணீரில் போட்டும், தீயில் பொறித்தும் பார்க்கப்பட்டது. ஆனால் பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை’ என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

நெல்லை கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா?: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

9,June, 2017 Comments off

உணவு பாதுகாப்பு துறை உத்தரவையடுத்து இன்று நெல்லையில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.

நெல்லை கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா?: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

நெல்லை:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக்கோளாறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதே போல் கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவை விற்பனைக்கு வந்திருப்பதாகவும், அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.
தற்போது இந்த பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழகத்தில் பீதி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மொத்த அரிசி வியாபார கடைகள் மற்றும் சில்லறை கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதே போல் டவுன் ரதவீதிகள், தொண்டர் சன்னதி, டவுன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அரிசி மாதிரிகள் எடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதித்தனர். இன்று ஒரே நாளில் நெல்லை நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் கூறியதாவது:-
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை உத்தரவையடுத்து இன்று நெல்லையில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உடனடியாக பொதுமக்கள் அந்தந்த உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். பிளாஸ்டிக் அரிசி என்றால் தண்ணீரில் மிதக்கும். அதை வைத்து பொதுமக்கள் கண்டுபிடித்து புகார் தெரிவிக்கலாம்.
இன்று நடைபெற்ற ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி நெல்லையில் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. எனினும் சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்து விடக்கூடாது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

சாலையோரங்களில் காலாவதி சாக்லேட்கள் வீச்சு

19,May, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

சுகாதாரத்துறை அதிரடி ஆய்வு – மீன், இறைச்சி பறிமுதல்

23,April, 2017 Comments off

Onetamil News

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் மீன் திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேட்டுடன் கூடிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு புகார் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை வருவாய்துறை பி.டி.ஒ ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பசுவந்தனையில் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரம் மீன் விற்பனை செய்துவந்த முருகவள்ளி என்பவரிடம் பத்தாயிரம் மதிப்புள்ள் மீன் மூவாயிரம் மதிப்புள்ள ஆட்டு இறைச்சியும் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்து கண்மாயில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. 
மேலும் பசுவந்தனையில் மேற்கொண்ட ஆய்வில் அனுமதி பெறாமல் இயங்கிவந்த ஏழு இறைச்சி கடைகள் கண்டறியப்பட்டன அவர்களுக்கு அனுமதி பெறவும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறித்தினர்.
ஆய்வில் பி.டி.ஒ சிவபாலன் , கிரி ,கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ் , சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

நெல்லை பஸ் நிலைய நடை பாதையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் திண்பண்டங்கள்

10,March, 2017 Comments off

மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவை சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், வசிக்க வீடு. இவை மட்டும் இருந்ததால் போதாது. சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருந்தால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். உலகிலேயே சுற்றுப்புற சூழல் மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் இந்தியா 5வது இடத்தையும், இந்தியாவில் தமிழகம் 7வது இடத்தையும் பிடித்துள்ளதாக ஒரு ஆய்வில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம், பாளை. வஉசி மைதானம், ராமர் கோயில் மைதானம் ஆகியவற்றில் சுகாதாரமற்ற முறையில் கடைகளுக்கு வெளியே வடை, முறுக்கு, முட்டைகோஸ், பஜ்ஜி, பானிபூரி ஆகிய திண்பண்-்டங்களை எண்ணெய் சட்டியில் போட்டு எடுத்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு அவைகளை நடைபாதையில் திறந்து வைத்துள்ளனர்.

அதன் மேல் கொசு, ஈக்கள் பறந்து உட்கார்ந்து வருகிறது.
மேலும் வடை, முட்டைகோஸ் தயாரிக்கப்பயன்படும் காஸ் மற்றும் அடுப்பில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவ்வழியாக செல்லும் பயணிகளின் உயிரை பதம் பார்த்து விடும் என்பதால் தின்பண்டங்களை தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி நடைபாதையில் தின்பண்டங்களை பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். நடை பாதைகளில் எண்ணெய் சட்டியை வைப்பதற்கு அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டி

9,March, 2017 Comments off

உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டி

உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டிகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்


கரிவலம்வந்தநல்லூரில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அலுவலர்கள் முத்துக்குமாரசாமி, ரமேஷ், சந்திரசேகரன், கருப்பசாமி ஆகியோர் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளை உணவு பாதுகாப்பு வியாபாரிகள் பின்பற்றுவது பற்றி எடுத்துக் கூறினார்கள்.
கரிவலம்வந்தநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜகோபால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றி பேசினார். இதில் வியாபாரிகள் சங்க தலைவர் திருமலை குமாரசாமி, செயலாளர் திருப்பதி உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் உணவு பொருட்களை பாதுகாக்க சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சிறுவியாபாரிகள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு கண்ணாடி பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் தொழில் அதிபர்கள் பூவையா, முருகன் ஆகியோருக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

தகுதிகள்


சிறு வியாபாரிகள் இலவச கண்ணாடி பெட்டியை பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:–
உணவு பாதுகாப்பு துறையில் பதிவு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். சுமார் 10 லிட்டர் பாலுக்குள் டீ, காபி விற்பனை செய்ய வேண்டும். டீ மாஸ்டர் தனியாக நியமித்து இருக்க கூடாது. கலப்படமற்ற தரமான டீத்தூள் உபயோகிக்க வேண்டும். வாகனங்கள் செல்லும் மெயின் ரோட்டில் கடை வைத்திருக்க வேண்டும்.
இந்த தகவலை சங்கரன்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

8,December, 2016 1 comment

மானூர், : மானூர் ஒன்றிய கூட்ட அரங்கில் பள்ளி மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உணவு பாதுகாப்பு சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உணவு பொருட்களின் தரம், கலப்படம் கண்டறிதல், நுகர்வோர் பற்றி விளக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கராஜ் பாதுகாப்பான உணவு தயாரித்தல், சத்தான உணவு உட்கொள்ளுதல் போன்றவை பற்றி விளக்கம் அளித்தார். தரமான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. கூட்ட ஏற்பாடுகளை மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செய்திருந்தார். இதில் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli