Archive

Archive for the ‘Tiruppur’ Category

அதிரடி ஆய்வு

3,November, 2018 Comments off

3

Categories: DISTRICT-NEWS, Tiruppur

காகித பொட்டலத்தில் உணவு :விழிப்புணர்வு இல்லாத அவலம்

23,September, 2018 Comments off

திருப்பூர்;பெரும்பாலான கடைகளில், செய்தித்தாள் காகிதங்களில், உணவு பதார்த்தங்களை பொட்ட லமிட்டு வழங்குவது, உடல் உபாதைக்கு வித்திடுகிறது.

எண்ணெயால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, பெரும்பாலான வியாபாரிகள், செய்தித்தாள் காகிதம் பயன்படுத்துகின்றனர். அதில் அச்சிடப்பட்டுள்ள மையில் கலந்துள்ள, காரீயம் போன்ற ரசாயனப் பொருட்கள், உணவு பதார்த்தங்களில் கலக்கிறது.

அவை, உணவோடு, உடலில் சேரும் போது, ரத்த சோகை, செரிமான குறைபாடு உட்பட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முதியவர்கள், சிறுவர்களுக்கு ‘வைட்டல் ஆர்கன்’ எனப்படும் நுரையீரல், கல்லீரல், இதயம் சார்ந்த பாதிப்பு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, செய்தித்தாள் காகிதத்தை பயன்படுத்தக்கூடாது என, அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடைகளில் இச்செயல் தொடர்கிறது. எனவே, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

புகையிலை விற்றால் உரிமம் ரத்து

12,September, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/09/5b0be-1.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

உணவு தரத்துக்கு உத்தரவாதம் இல்லை!

3,September, 2018 Comments off

ஓட்டல், சிற்றுண்டி கடைகளில், சுகாதாரம் இல்லாத உணவுகள் விற்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது. பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், தினசரி, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வர்த்தகம் சார்ந்து, வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இதனால், நகரில் உள்ள ஓட்டல், சிற்றுண்டி கடைகளில், மக்கள் கூட்டம் அதி கமாக இருக்கும். ஆனால், பல ஓட்டல்களில் சுத்தம், சுகாதாரம் இல்லை என, பொதுமக்கள் புலம்புகின்ற னர். குறிப்பாக, ரோட்டோரம் உள்ள சிற்றுண்டிக் கடைகளின் சுற்றுப்புறம், சுத்தமாக இல்லை, என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டு.இதுதான் விதி!உணவு பாதுகாப்புத்துறையின் தர நிர்ணய சட்டம், 2006ன் கீழ் உள்ள, குறிப்பிட்ட, 12 விதிகளுக்குட்பட்டே உரிமம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஓட்டல் உரிமையாளர்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கொரு முறை, கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய், வெட்டுக்காயம் உள்ளவர்களை உணவு தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.உணவு தயாரிக்க, சுத்தமான பாத்திரத்தை பயன் படுத்த வேண்டும். கீற்றுக் கொட்டகை மற்றும் பிற உயிரினம் வசிக்கும் நிலையில், சமையல் கூடம் இருக்கக்கூடாது என்பது உட்பட விதிகள் உள்ளன. ஆனால், திருப்பூர், சுற்றுப்புற பகுதிகளில், பல ஓட்டல், சிற்றுண்டிக் கடைகளில், இவ்விதி கடைபிடிக்கப்படுவது இல்லை.சுகாதாரம் இல்லைபல ஓட்டல்களில், சுகாதாரம் பேணுவதில்லை; ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படு வதும் இல்லை. உரிமம் பெறாத, விதிமீறும் ஓட் டல், சிற்றுண்டிக் கடைகள் மீது, நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ள போதிலும், அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுக்கொள் வதில்லை. இதனால், ஓட்டல்களில் உணவு உட்கொள்ளும் பலர் உடல் உபாதையால் பாதிக்கின்றனர்.இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது;உணவு பாதுகாப்புத் துறையின், பதிவு மற்றும் உரிமம் பெற்ற பின்னரே, ஓட்டல் நடத்த வேண்டும். இதுகுறித்து, அவ்வப்போது, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே, விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, சுகாதாரம் பேண அறிவுறுத்தி வருகிறோம்.ஆனால், இச்சங்கத்தில், சிறிய ஓட்டல், சிற்றுண்டிக் கடைகள் இணையாததால், அவர்களை ஒருங்கிணைக்க முடிவதில்லை.உணவு தயாரிப்பில் குறை இருப்பது தெரிந்தால், ‘94440 42322’ என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது வீடியோ பதிவு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

உணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு:திருப்பூரில் கலப்பட சமையல் எண்ணெய் விவகாரம்

18,June, 2018 Comments off

திருப்பூர் மாவட்டத்தில், 6,000 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பாமாயில் கலந்த, கலப்பட சமையல் எண்ணெய், பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்பட எண்ணெய் பயன்பாட்டால், மக்களிடையே ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. பாமாயில் கலந்த எண்ணெய்யை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கலாம். ஆனால், கடலை எண்ணெய் என்று பெயரிட்டு விற்கக்கூடாது.
திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நிலக்கடலை படத்துடன் தயாரித்த பாக்கெட்டில், பாமாயிலை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கின்றனர். எண்ணெய் பாக்கெட்டுகளிலும், அட்டை பெட்டிகளிலும், வேறு பெயரில் உரிமத்தை பதிவு செய்துவிட்டு, பாமாயில் கலந்த கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, நுகர்வோர் அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில், இதுதொடர்பான புகார் எழுந்தது. அன்றே, திருப்பூரில், கலப்பட எண்ணெய் தயாரித்த நிறுவனத்தில், 1,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாள், அவிநாசியில், 4,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கலப்பட எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறியப்பட்ட பிறகு, உணவு பாதுகாப்புத்துறை உஷாராகியுள்ளது. மக்களின் பாதுகாப்பு நலன்கருதி, புகார் அடிப்படையில் மட்டும் ஆய்வு நடத்தாமல், தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.மாவட்டம் முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பழனிசாமி கூறுகையில்,”உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார் வருகிறது. புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, இரண்டே நாட்களில், 6,000 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும், இதேபோல் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால், உரிமத்தை ரத்து செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,”என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

போலி சமையல் ஆலை

17,June, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/06/afe4b-15_06_2018_270_032.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

தயிர் சேமியாவில் இரும்பு ஸ்குரு

2,June, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/06/c652b-02_06_2018_263_005.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

பேக்கரிகளில் ஆய்வு

23,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/6c78d-3.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

செயற்கை முறையில் பழம்கள் விற்பனை

12,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Tiruppur