Archive

Archive for the ‘Tiruppur’ Category

அதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்

7,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/ef617-3.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

இறந்த கோழி இறைச்சி விற்பனை அதிகரிப்பு

4,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Tiruppur

புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

1,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Tiruppur

கலப்படம் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்

22,March, 2018 Comments off

உடுமலை : நுகர்வோர், உணவுப்பொருட்களின் தரத்தை கண்டறிந்து வாங்க வேண்டுமென, விழிப்புணர்வு முகாமில், அறிவுறுத்தப்பட்டது.உடுமலை நகர், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளியில், உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறியும் விழிப்புணர்வு முகாம், உணவு பாதுகாப்பு துறையால், நடத்தப்பட்டது.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ், உணவுப்பொருட்கள் கலப்படம் குறித்து விளக்கினர். குறிப்பாக, பால், தேன், தேயிலைத் தூள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பின், அதனை கண்டறிவது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், உணவுப் பொருட்களை நுகரும்போது, அதில், உணவு பாதுகாப்புத் துறை உரிமம், தயாரிப்பு தேதி, தரம் குறித்து ஆராய்ந்து வாங்க வேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும், பிளாஸ்டிக் புட்டிகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.அதேபோல, உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், செயற்கை நிறமூட்டிகளையும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

விதிமுறை மீறிய இறைச்சி கடைகளால் பாதிப்பு

22,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/a344e-21_03_2018_258_027.jpg

Categories: DISTRICT-NEWS, Tiruppur

உணவு பாதுகாப்பு உரிமம் வழங்க முகாம்

3,March, 2018 Comments off

திருப்பூரை தொடர்ந்து, ஊத்துக்குளி தாலுகா வியாபாரிகளுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கும் முகாம், இன்று குன்னத்தூரில் நடக்கிறது.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சிறப்பு முகாம் நடத்தி, பாதுகாப்பு பதிவு மற்றும் உரிமம் கோரி விண்ணப்பம் பெறப்பட்டன. தற்போது, தகுதியான நபர்களை கண்டறிந்து, சிறப்பு முகாம் நடத்தி உரிமம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, திருப்பூரில் நடந்த முகாம்களில், 807 பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூரை தொடர்ந்து, ஊத்துக்குளி தாலுகாவில், உரிமம் மற்றும் பதிவு சான்று கோரி விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. குன்னத்தூரிலுள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த முகாமில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். புதிதாகவும் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என, உணவு பாதுகாப்புத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

உணவு பொருட்களில் கலப்படமா? "வாட்ஸ் ஆப்’பில் புகார் செய்யலாம்

22,February, 2018 Comments off

திருப்பூர் : உணவுப்பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து புகார் செய்யும் "வாட்ஸ்ஆப்’ எண் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை, அனைத்து கடைகளிலும் வைக்க, உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை பணிகளை கண்காணிக்கவும், செயல்படுத்தவும், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில், சுகாதார பணிகள் துணை இயக்குனர், துணை பதிவாளர் (பால்வளம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ள வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த, வழிகாட்டுதல் குழு கூட்டத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அமலாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.அதன் விவரம்:இறந்த கோழிகளை விற்பனை செய்யும் பண்ணையாளர்கள், அதை வாங்கி இறைச்சியாக பயன்படுத்தும் சில்லறை வியாபாரிகள், தள்ளுவண்டி உணவு தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடான பொருட்களை, பாலிதீன் பைகளில் பார்சல் செய்வதும், உணவு பொருட்களை செ#தித்தாளில் பார்சல் செய்வதையும் தடுக்க வேண்டும்.உணவகங்களின் பணியாளர்கள் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். போலி டீ தூள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருள் விற்பனை நடக்கும் இடங்களில், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும். விற்பனையாளர்கள், பொருள் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ரசீதுகளை வைக்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், அரசு திட்டங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் என, அனைவரும், வரும், 28க்குள் உரிமம் பெற வேண்டும். பொதுசேவை மையங்களை அணுகி, உணவு பாதுகாப்புத்துறை பதிவு மற்றும் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து நுகர்வோர் புகார் செய்ய ஏதுவாக, 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்’ எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களிலும், "வாட்ஸ் ஆப்’ எண்களில் புகார் செய்வது குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

திருப்பூர் அருகே ரேஷன் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

15,February, 2018 Comments off

திருப்பூர் மாவட்டம் சூசையாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் அரிசி பிளாஸ்டிக் அரிசி என புகார் வந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

கடையில் தரமற்ற உணவு பொருள்

16,January, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Tiruppur