Archive

Archive for the ‘Virudhunagar’ Category

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வதைசெய்ய வேண்டும் மாவட்ட கலெக்டர் தகவல்

15,February, 2017 Comments off

விருதுநகர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தொடர்பான வழிக்காட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதில் உணவு பாதுகாப்புத் தரநிர்ணயச் சட்டம்–2006 விதிமுறைகள், உணவு பொருட்கள் கலப்படம் பற்றியும் அதனால் விளையும் நன்ம் தீமைகள் பற்றியும், உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்–2006–ன்படி உணவுப்பொருள்கள் விற்பனை, தயாரிப்பு, சத்துணவுக்கூடங்கள், குடியுரிமைப்பொருள் அங்காடிகள், பள்ளி,கல்லூரிகள் உரிமம் டுஉநளெநஃபதிவு சுநபளைவசயவழை, பெறவேண்டும் என்றும், அனைத்து நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் ஆடு, மாடு வதைச் செய்வது அங்கீகரிக்கப்பட்ட வதைச் செய்யுமிடங்களில் மட்டுமே வதைச்செய்யவேண்டும். நல்ல தரமான உணவுகளை கையாள வேண்டும். பாலிதீன் பைகளை தவிர்க்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சாலோடீசன், துணைஇயக்குநர் சுகாதாரப் பணிகள்,அனைத்து நகராட்சி ஆணையாளர்கள்,பஞ்சாயத்து உதவி இயக்குநர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், நுகர்வோர் பாதுகாப்பு தலைவர், ஹோட்டல் சங்க உரிமையாளரின் தலைவர், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்கள்.

சுகாதாரம் கேள்விகுறி?

10,January, 2017 Comments off

கோவில்பட்டி அருகே இயங்கி வந்த போலி எண்ணெய் ஆலைக்கு சீல்

6,January, 2017 Comments off

Onetamil News

கோவில்பட்டி பகுதியில் கலப்பட சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  தங்கவிக்னேஷ்     தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரிச்சாமி, முருகேசன், பொன்ராஜ், டைட்டஸ் பெர்னான்டோ,சிவபாலன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தியதில் சாலைப்புதூர் அருகே போலி எண்ணெய் ஆலை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அசுரு என்பவர் சாலைப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை கலப்படமாக தயாரித்து மிக குறைந்த விலையில் கோவில்பட்டி பகுதியில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த ஆலையில் இருந்த எண்ணெய்களின் தரம் குறித்து அறிய சோதனைக்கு அனுப்பினர். மேலும் அந்த ஆலைக்கு சீலும் வைத்தனர். ஆலையை நடத்தி வந்த அசுரு இல்லாத காரணத்தினால், அந்த ஆலையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்த திருச்சூரைச் சேர்ந்த சானித் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுத்து நிறுத்துங்க

24,November, 2016 Comments off

விதிகளை அறிவுறுத்தி நோட்டீஸ்

23,October, 2016 Comments off

IMG-20161023-WA0016

அருப்புக்கோட்டையில் அதிகாரிகள் அதிரடி இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்களில் திடீர் சோதனை

7,October, 2016 Comments off

கோவில்பட்டி குடோனில் பதுக்கப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

30,September, 2016 Comments off
 

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

24,August, 2016 Comments off

விருதுநகர்: விருதுநகர் பழையபஸ் ஸ்டாண்ட் பகுதியில் உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் காலாவதி, சுகாதாரமற்ற 50 ஆயிரம் ரூபாய் பொருட்கள் அழிக்கப்பட்டன.

உணவு பாதுகாப்பு அதிகாரி சாலோ டீ சான் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சுகாதார இன்ஸ்பெக்டர்கள் நேற்று விருதுநகர் பழையபஸ் ஸ்டாண்ட், புல்லலக்கோட்டை ரோடு, புளுகாணுாரணி ரோடு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். தேதி குறிப்பிடாத, காலாவதி குளிர்பானம், பிஸ்கட், தகுதியற்ற குடிநீர் பாட்டில்கள், திறந்தவெளியில் விற்கப்பட்ட உணவுபொருள் அகற்றப்பட்டன. ஓட்டல்களில் ஏற்கனவே தயாரித்து பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த சிக்கன், மட்டன், புரோட்டா மாவு அழிக்கப்பட்டன.

சுகாதாரமற்ற உணவுபொருள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

சாலோ டீ சான் கூறுகையில், “காலாவதி பொருள், சுகாதாரமற்ற நிலையில் உணவுபொருள் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த வகை பொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன,” என்றார்.

வீடு தேடி வருது அசுத்த வாட்டர்

11,August, 2016 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2016/08/37a91-11_08_2016_258_016.jpg