Archive

Archive for the ‘FSO-ACTIVITIES’ Category

திருப்பூர் மார்க்கெட் பகுதியில்5 டன் மாம்பழம் பறிமுதல்

2,May, 2015 Comments off

திருப்பூர் : “கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்பட்ட ஐந்து டன் மாம்பழங்களை, திருப்பூரில் உள்ள குடோன்களில் இருந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மார்க்கெட்டுக்கு மாம்பழம் மற்றும் பலாப்பழங்களின் வரத்து, தற்போது அதிகரித்துள்ளது. இங்குள்ள குடோன்களில் மா, வாழை, பலா உள்ளிட்ட பழங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. சில குடோன்களில், “கார்பைட்’ கற்கள் வைத்து, மாங்காய் பழுக்க வைக்கப்படுவதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்றது.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், முருகேசன் ஆகியோர், திருப்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பழக்குடோன்களில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், இரு குடோன்களில் “கார்பைட்’ கற்கள் வைத்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவ்வகையில், ஐந்து டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், “கார்பைட் கற்கள் மற்றும் புகையை பயன்படுத்தி மாங்காய், வாழைக்காய் உள்ளிட்டவற்றை, செயற்கை முறையில் பழுக்க வைப்பது, தண்டனைக்குரியது. அவ்வாறு பழுக்க வைக்கப்படும் மாழ்பழங்கள், வைப்புத்திறன் குறைந்து காணப்படும். அதை சாப்பிட்டால், வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். சில நேரங்களில், புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது,’ என்றனர்.

பாதுகாப்பான உணவு … பகற்கனவா? ஏ.ட்டி.அன்பழகன், உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களின் கட்டுரை

19,February, 2014 Comments off

123

Categories: FSO-ACTIVITIES

தீவாளிக்கு…ஸ்வீட்ஸ் வாங்கப்போறிங்களா ……

4,November, 2012 Comments off

Categories: FSO-ACTIVITIES, NEW POST, NEWS

உணவுக் கலப்படத்தை அறிவோம்! (பகுதி1)

26,September, 2012 Comments off

காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

18,September, 2012 Comments off

Categories: FSO-ACTIVITIES, NEWS

கலப்பட டீத்துள் பறிமுதல்- பத்திரிகை செய்தி

5,September, 2012 1 comment

Categories: FSO-ACTIVITIES

மயிலாடுதுறை பகுதிகளில் 10 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்

8,July, 2012 Comments off

மயிலாடுதுறை பகுதிகளில் 10 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறைப் பகுதிகளில் போலி டீத்தூள் பாக்கெட்டுக்கள் விற்பனையில் உள்ளதாகவும், அவை  டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகை கலெக்டர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் ஆலோசனையின்பேரில் மயிலாடுதுறை உணவுப்பாதுகாப்பு அலுவலர் சேகர், குத்தாலம் உணவுப்பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் குத்தாலம் தாலுகாவில் 30 டீக்கடை மற்றும் மளிகை கடைகளிலும், மயிலாடுதுறையில் முருகமங்கலம், மாப்படுகை, பொன்னூர் போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கடைகளிலும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்திய 10 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுக்களை கைப்பற்றி அழித்தனர். கடைகாரர்களிடம் இனிமேல் இதுபோன்ற டீத்தூள் வாங்குவதையோ உபயோகிப்பதையோ தவிர்க்க ஆலோசனை கூறினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர் மற்றும் பிரவின்ரகு ஆகியோர் கூறுகையில், ‘பொதுமக்கள் தாங்கள் அருந்தும் டீ தரமானதா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் டீத்தூளை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் கொட்டினால், அதிலிருந்து சாயம் இறங்கினால், அது கலப்பட டீத்தூள் என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
எனவே மளிகைக்கடைகள், பொதுமக்கள் தரமான பாதுகாப்பான டீத்தூளை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கலப்பட டீத்தூள் பற்றிய புகார்கள் இருப்பின் மாவட்ட நியமன அலுவலர் 9444023090, மயிலாடுதுறை உணவு பாதுகாப்பு அலுவலர் 9443985754, குத்தாலம் உணவுப்பாதுகாப்பு அலுவலர் 9487641649 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

Categories: FSO-ACTIVITIES

கலப்பட நெய் தயாரித்தவருக்கு ஜெயில்-பத்திரிகை செய்திகள்

21,June, 2012 Comments off

Categories: FSO-ACTIVITIES

திருமருகல் உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களின் விழிப்புணர்வு கூட்டங்கள்-பத்திரிகை செய்திகள்

19,June, 2012 1 comment

Categories: FSO-ACTIVITIES