Archive

Archive for the ‘HEALTH TIPS’ Category

உணவு பொருட்களில் உட்புகுந்த கலப்படம்

14,June, 2020 Comments off

கலப்படத்தை தடுக்க ‘உணவு கலப்படத்தடை சட்டம்’ 1954ல் ஏற்படுத்தப்பட்டது, கலப்படம் செய்த உணவு வகைகள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உற்பத்தி செய்வது, விற்பது, தடை பொருட்களை உணவில் சேர்ப்பது போன்றவைகள் மீது இச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இச்சட்டம் நீக்கப்பட்டு ஆகஸ்ட், 2011 முதல் “உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம் 2006’ அமலுக்கு வந்து, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பற்ற உணவு என்ற நிலையில், இச்சட்டத்தின் கீழ் அபராதம், சிறைத்தண்டனை என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பொதுமக்களிடமிருந்து கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பெறும் வகையில், ‘94440 42322’ என்ற வாட்சப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சப் எண்ணிற்கு, இந்த கொரோனா காலத்தில் அதிகளவில் உணவு, குடிநீர் சார்ந்தே அதிக புகார்கள் வந்தன. வாட்சப் புகார் வசதி 2017 மே 17ல் துவக்கப்பட்டது. கடந்த மே 30 வரையிலும் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 471 புகார்கள் வந்துள்ளன. இதில் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாகவும், கெட்டுப்போன பழைய இறைச்சி, மீன் விற்பனை, கெட்டுப்போன குடிநீர் விநியோகம் என பலதரப்பட்ட புகார்கள் வந்தன. மாவட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம். இதன்பேரில் ஆய்வு செய்து, மாதிரிகளை ஆய்வக பரிசோதனை செய்து, நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு சில்லரை விற்பனை விலையை கடந்து அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறையினரே நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். கலப்படத்தை முழுமையாக தடுப்பதில் பொதுமக்களின் விழிப்புணர்வுதான் முக்கியம்’’ என்றார்.

ஊரடங்கின்போது பாக்கெட் எண்ணெய்களை தவிர்த்து, செக்கு எண்ணெய்களை பயன்படுத்தும் ஆர்வம் மக்களுக்கு அதிகரித்தது. முன்பு எல்லாம் மாடுகள் பூட்டி செக்குகளில் நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள் ஆட்டி எடுக்கப்பட்டன. பிறகு, இவை இயந்திரச் செக்குகளாகின. எள்ளுடன் கருப்பட்டி அல்லது பனைவெல்லம் சேர்த்து ஆட்டினர். பின்னாளில், வணிக வருவாய்க்காக கருப்பட்டிக்குப் பதில் ‘மொலாசியஸ்’ என்ற சர்க்கரை ஆலைக்கழிவைக் கொட்டி ஆட்டி, நல்லெண்ணெய் எடுத்தனர். இதிலும் கொடுமையாக, எள் இல்லாமலேயே இன்று நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரிக் கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் ‘நல்லெண்ணெய்’ வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது. இந்த போலி எண்ணெயை, நல்லெண்ணெய் பெயரில் மூன்று மடங்கு விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். சிலர் ‘தீப உபயோகத்திற்கு’ எனும் பொருள்பட ‘லைட்டிங் பர்ப்பஸ்’ என சிறு எழுத்தில் அச்சிட்டுக் காட்டியும் ஏமாற்றி, உணவுக்கான எண்ணெய்யாகவே விற்று விடுகின்றனர்.

பருத்த தேங்காய்களை உடைத்து, காயவிட்டு செக்கில் இட்டு ஆட்டி எடுத்தே எண்ணெய் பெறலாம். ஆனால், தேங்காய் இல்லாமலே ‘மினரல் ஆயிலில்’ தயாரித்த, தேங்காய் எண்ணெய் விற்பனையும் நம்மூர்களில் இருப்பது அதிர்ச்சிகரமானது. பொதுவாக கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தே பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் பெறப்படுகின்றன. இதில் ஒன்றாகக் கிடைப்பதே ‘மினரல் ஆயில்’. ‘லிக்யூட் பேரபின்’ என்பர்.
நிறம், வாசனையற்ற, அடர்த்திமிகு இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான ‘எசன்ஸ்’ கலந்தால் தேங்காய் எண்ணெய் ரெடியாகி விடுகிறது. ‘மனசாட்சிக்கு சிறிது பயந்த’ சிலர், சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், மினரல் ஆயிலையும் பெருமளவு கலந்தும் விற்கின்றனர். இந்த தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். இதுதவிர, ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும் கூட இந்த ‘மினரல் ஆயில்’ அரக்கன் இருக்கிறான்.

பச்சிளங்குழந்தைகளுக்கான முழு உணவே பால் தான். எளிதில் உறிஞ்சும் கால்சியம் கொண்டதால் குழந்தைகளுடன், முதியவர்களுக்கும் பால் தான் முக்கிய உணவு. கால்சியம், தாது, புரதம், ரைபோபினேவின் எனும் பி2, வைட்டமின் ஏ, பாஸ்பரம், தயாமின் என எண்ணற்ற சத்துகளிருப்பதால், நோயாளிகளுக்கான திடத்தையும் பால் தருகிறது. மதுரை கீழமாசி வீதி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார்ச், மக்காச்சோள மாவு என எழுதப்பட்ட 65 மூட்டைகள் சிக்கின. இவற்றைப் பிரித்து சோதனையிட்டதில் நாக்கில் வைத்தால் எரிச்சலூட்டிய இது ஒருவித ரசாயனப் பவுடராக அது இருந்தது. பால், ஐஸ்கிரீம், பிஸ்கெட்டில் இதனைப் பயன்படுத்துவதும், 10 லிட்டர் தண்ணீரில் இந்த ரசாயனப் பவுடரை ஒரு கிலோ கலந்தால், ‘பால் தன்மை’ வந்ததும் அதிர்ச்சி தந்தது. இந்த கெமிக்கல் பால் தென்மாவட்டங்களில் அதிகளவில் விற்பனையானதும் தெரிந்தது. உயிர் பறிக்கும் ஆபத்து கொண்ட இந்த ரசாயனப் பாலை பால்மானி கருவியால் கூட செயற்கையானது எனக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் அதிர்ச்சித் தகவல். அவ்வப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், எனினும் தொடர் கண்காணிப்பின்றி போய் விட்டது. இந்த கொரோனா காலத்தில் இவ்வகை ‘பால் புழக்கமும்’ தென்மாவட்டங்களில் அதிகரித்திருக்கிறது.

மதுரை: கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை கெடுபிடியாக (எப்போது என்கிறீர்களா) கடைபிடித்தபோது, அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பட்ட சிரமம் கொஞ்சமா, நஞ்சமா? அந்த நேரத்தில் ஊரடங்கை பயன்படுத்தி கலப்பட பொருட்களை சிலர் களமிறக்கி கொள்ளை லாபம் பார்த்திருக்கின்றனர். உடல்நலனை காக்கும் உணவுப்பொருட்கள் என நம்பி வாங்கியது கலப்படம் என தெரிந்து மக்கள் ஆங்காங்கே கொதித்தெழுந்ததையும் காண முடிந்தது. இனியாவது, கலப்பட விஷயத்தில் அரசு போதிய அக்கறை காட்ட வேண்டுமென கோரிக்கையும் வலுத்துள்ளது. மக்களின் வாழ்வியலை ரொம்பவே கொரோனா ஊரடங்கு காலம் புரட்டிப்போட்டு விட்டது. வணிகமும், தொழிலும், வேலையுமின்றி வருவாய் இழப்பில் மக்களின் பொருளாதாரம் ரொம்பவே சரிந்து போய் விட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டும் வருவாய் வாய்ப்புகளை சரிகட்ட முடியாமல் அத்தனை பேருமே திண்டாடி வருகின்றனர். இவ்வகையில், ஒரு சிலர் லாபம் கருதி பொருட்களில் கலப்படம் செய்து, பணம் பார்த்ததுதான் வேதனையானது.

அரிசியில் துவங்கி…
உணவுப்பொருட்களில் கலப்படம் நேற்று, இன்று வந்ததல்ல… பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. ஊரடங்கு நேரத்தில் அனைவரும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ஒரு சில வியாபாரிகள், தாங்கள் ஸ்டாக் வைத்திருந்த அரிசியோடு தரமற்ற அரிசி, சிறுகற்கள், மண், நெல், தவிடு என கலந்து கட்டி விற்பனை செய்துள்ளனர். அதுமட்டுமல்ல… துவரம் பருப்பில் கேசரி வகை, ரேஷனில் தரும் தரம் குறைந்த பருப்பை சேர்ந்து நயம் துவரை விலைக்கு விற்றுள்ளனர். உளுந்தம்பருப்பிலும் களிமண் உருண்டைகள், சிறு கற்களைக் கலந்து தந்துள்ளனர். இதனால் பலர் கொரோனா காலத்தில் வயிற்று உபாதை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகினர். பொதுவாக, இவ்வாறு தரமற்ற பொருட்களை சாப்பிடும்போது புற்றுநோய், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மஞ்சள் தூளா, மங்கல் தூளா…?
ஊரடங்கின்போது மக்கள் மஞ்சள் தூள்களையே அதிகம் வாங்கினர். அதுமட்டுமன்றி குழம்பு மிளகாய் பொடி, மல்லிப்பொடி போன்றவற்றை அதிகம் ஸ்டாக் வைத்தனர். துவக்கத்தில் பிராண்டட் தூள்களை வழங்கி வந்த கடைகள், பின்னர் மிளகாய் தூளில் செங்கல்பொடி, மல்லித்தூளில் மரத்தூள், குதிரை சாணம், மஞ்சள் தூளில் காரிய குரோமேட் மற்றும் மெட்டானில் எல்லோ ரசாயனம் கலந்து பெயரிடப்படாத பாக்கெட்களில் அடைத்து விற்று வந்துள்ளனர். இதுபோன்ற நாம் அதிகம் பயன்படுத்தும் தூள் வகைகளில் கலப்படம் செய்யும்போது, நுரையீரல், மார்பு, தொண்டை, கண், எலும்பு மற்றும் கல்லீரல் கட்டி, குழந்தைகள் ஊனமுறுதல் உள்ளிட்ட நோய் பிரச்னைகள் உருவாகின்றன.

நெய்யா… பொய்யா…?
தூள் வகைகள் மட்டுமா? உடல் திறனை வலுப்படுத்த நெய், வெண்ணெய் என வாங்கிக் குவித்த பொருட்களிலும் கலப்படம் புகுந்து விளையாடியது. நெய்யில் வனஸ்பதி, மிருகக்கொழுப்பு, வெண்ணெயில் மைதா, மணிலா மாவுகள் கலந்து விற்பனையானது. இது இருதய அடைப்பை, முகம் வீக்கத்தை, வயிற்றுக்கோளாறை ஏற்படுத்துகிறது. தேனில் சர்க்கரை, வெல்லப்பாகு, மிளகில் பப்பாளி விதை கலந்தும் உடல்நலனை ஒரு வழி ஆக்கி விடுகின்றனர். பொதுவான காலத்து இந்த கலப்படங்களையும் மிஞ்சி, இந்த கொரோனா நேரத்தில் ‘லாபத்தை மட்டுமே’ நோக்கமாகக் கொண்டு, கலப்படத்தின் வீரியம் மேலும் அதிகரித்துள்ளது. அரசின் அக்மார்க் முத்திரை பெற்ற பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டபோதும், அந்த முத்திரையுடன் விற்கும் பொருட்களுமே ‘சந்தேகம் தரும்’ பொருட்களாகவே இருந்து வருகின்றன.

இறைச்சி.. ‘இரை…’ச்சீ…
கொரோனா காலத்தில் சிக்கனை சாப்பிட பலர் அஞ்சிய நேரத்தில், ஆட்டிறைச்சியின் விலை அசுரத்தனமாக உயர்ந்தது. கிலோ ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. இதனால் லாபநோக்கில், சில கடைகளில் மாட்டிறைச்சியை, ஆட்டிறைச்சியாக ‘அடையாளம் காட்டி’ அதிக லாபத்திற்கு விற்கப்பட்டது. இதனால் கறி வேகாமலும், வழக்கமான சுவை இல்லாததால், பலர் ஆட்டுக்கறி உண்பதையே குறைத்துக் கொண்டனர். பண்ணைகளில் இறக்கும் கோழிகளும் ‘ப்ரீசரில்’ வைக்கப்பட்டு, விற்பனைக்கென கடைத்தெருக்களுக்கு வந்து விடுகின்றன.

தடைக்குள் தடை…
கொரோனா காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலமும் வந்தது. ஒரு சில கடலோர பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர். இதனால் சாதாரண மீன் விலையை கூட கிலோ ரூ.300 – ரூ.500 வரைக்கும் எகிற வைத்து விட்டனர். இது ஒருபுறமிருக்க, மீன்கள் பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க, ‘சடலங்களுக்கு’ பயன்படுத்தப்படும் ‘பார்மலின்’ ரசாயனம் தடவி விற்கப்பட்ட அவலமும் மதுரையில்தான் நடந்தது.

பிளாஸ்டிக் அரக்கன்…
தொழில்நுட்பத்தின் உச்சமாக இக்காலத்தில் ‘பிளாஸ்டிக் உணவுகள்’ வருகையும் பெரும் அச்சத்தைத் தந்துள்ளது. மண்ணுக்குள் கிடந்தாலும், மக்கிப்போக முடியாத இந்த பிளாஸ்டிக்குகளை உண்டால், உணவுக்குழாய் துவங்கி, செரிமான உறுப்புகள் வரையிலும் அத்தனை இயக்கத்தையும் கெடுத்து, உண்டவரின் உயிர் எடுத்து விடும் கொடூரத்தை நிகழ்த்தி விடுகிறது. பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரசி, பிளாஸ்டிக் சர்க்கரை வரையிலும் தமிழகத்துடன், தென்மாநிலங்களிலும் ஊடுருவி இருக்கிறது. இதனால் வயிற்று வலியில் துவங்கி, செரிமான கோளாறில் பயணித்து, வாந்தி மயக்கம் ஏற்பட்டு, இதனை தொடர்ந்து உண்டால், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு வரையிலும் கொண்டுபோய் உயிர் பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். கொரோனா தடுப்பு ஊரடங்கை பயன்படுத்தி கலப்பட பொருட்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, கலப்பட பொருட்களை விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமென மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories: HEALTH TIPS

`ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்…

20,January, 2015 Comments off
இன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது ‘ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். ‘பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன’ என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை!

உங்கள் உணவில் எத்தனை கெமிக்கல்கள்?!

”காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போதுகூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக் கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள், உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய விந்தை!” என்று நொந்து போய் சொல்லும், சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, விரிவாகவே பேசினார்.

”சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வுகூட இங்கு பலருக்கும் இல்லை. ‘ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது’ என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்… 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் தரவல்லது என்பதை அறிவீர்களா?

காலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயல்பு. கெடவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஓர் உணவுப் பொருளை, நாள் கணக்கில்… மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக்க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்? அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் (preservative) மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்தானே!

உணவுப்பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்து வதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்தபிரச்னையை விளைவிக்கக்கூடும். ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்கவைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சேர்க்கிறார்கள். ரெடிமேட் உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சரும நோய்கள், உடல் பருமன், நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் தரவல்லது இந்த ரெடிமேட் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்… அலர்ஜி, வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வீட்டில் தயாராகும் உணவுகளைவிட, ரெடிமேட் உணவுகள் வழங்கும் ஊட்டச் சத்துகள் குறைவு. அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும். எனவே, ஒருவர் தொடர்ந்து ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.

உணவு அரசியல்!

ரெடிமேட் உணவுகள், ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன. தேவை லாபம். அதைப் பெற, மணம், வண்ணம், கெட்டுப்போகாமல் நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் அம்மாவோ, பாட்டியோ இல்லையே!

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ‘பேக்’ செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது. இதில் உங்களுடைய பணமும் சேரத்தான் போகிறதா?!” என்று கேட்டு முடித்தார், ஊட்டச்சத்து நிபுணர் பவானி.

கெமிக்கல் விருந்து!

மக்களிடையே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த ‘கான்சர்ட்’ எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் சந்தானராஜன். அவர் பேசும்போது, ”ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன பல நிறுவனங்கள். மேலும், பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல. அப்படியான பிளாஸ்டிக் மெட்டீரியலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் ‘கெமிக்கல் விருந்து’ என்று குறிப்பிடுவோம்.

சாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் நிறைய. எங்கள் ‘கான்சர்ட்’ அமைப்பும், இன்னும் பல நுகர்வோர் அமைப்புகளும் ‘உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிரத்யேக முத்திரை ஒதுக்குங்கள்’ என்று பல முறை அரசிடம் வலியுறுத்தி ஓய்ந்துவிட்டோம்!

வண்ணமும், குறியீடும்!

பொதுவாக, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இயற்கை வண்ணம் (natural),மற்றொன்று செயற்கை வண்ணம் (synthetic).கறிவேப்பிலையில் உள்ள பச்சை நிறம், கேரட்டில் உள்ள ஆரஞ்சு நிறம் போன்றவை இயற்கை வண்ணங்கள். செயற்கை நிறங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 நிறங்களைத் தவிர மற்ற நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக தடைசெய்யப்பட்டுள்ள வண்ணங்களை ரெடிமேட் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

விளம்பரங்களை நம்ப வேண்டாம்!

விளம்பரங்களில், ‘இதில் இந்தச் சத்து உள்ளது’, ‘ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்’, ‘ரெண்டே நிமிஷத்தில் சமையல் ரெடி’ என்றெல்லாம் கூவுபவர்கள், தங்களுக்கு தரப்பட்ட தொகைக்காக கேமரா முன் பேசியவர்களே! எனவே, விளம்பர யுக்திகளுக்கும், விளம்பரங்களில் தோன்றுபவர்களின் வார்த்தைகளுக்கும் ஏமாறாதீர்கள்.

கொதிக்காத ரசம், முக்கால் பதம் வெந்த கத்திரிக்காய், மசித்த கருணைக்கிழங்கு என்று ஒவ்வொரு உணவையும் பதம் பார்த்துச் சமைத்தவர்கள் நம் பாட்டிகளும், அம்மாக்களும். சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு ரெடி டு ஈட்’ உணவுகளை வாங்கிச் சாப்பிடும்போது, அதன் விலைக்கு தோல் அலர்ஜியில் இருந்து புற்றுநோய் வரை நமக்கு இலவசமாகத் தரப்படுகிறது என்பதை நொடிப்பொழுது மனதில் நிறுத்துங்கள்!” அக்கறையுடன் அழுத்தமாகச் சொன்னார், சந்தானராஜன்!

சமைப்போம்!

”வேண்டவே வேண்டாம்!”

ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தன் பெயர் தவிர்த்துப் பேசினார்.

”நான் கண்கூடாகப் பார்க்கும் அனுபவத்தில், ரெடிமேட் உணவுகளை விஷம்னுதான் சொல்வேன். 99% ரெடிமேட் உணவு நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. யார் குறைந்த விலைக்கு உணவைக் கொடுத்து, அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறாங்கனு அந்த நிறுவனங்களுக்கு இடையில நடக்குற போட்டியில, உணவுப் பொருள்ல கலக்கப்படும் கெமிக்கல்ஸ், அதோட தரம் பத்தி எல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல. ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள்ல வேலை செய்யும் பணியாட்களில் இருந்து, உரிமையாளர்கள் வரை அந்த உணவுகளை யாரும் சாப்பிட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அதில் அட்டூழியம் நடக்குது. மனசாட்சி உறுத்தலோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். வேற வேலை தேடிட்டு இருக்கேன். முடிந்தவரை யாரும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடாதீங்க!” என்றார் வருத்தத்தோடு.

கிராமங்களிலும் ரெடிமேட்!

இந்தியாவில் ரெடிமேட் உணவைப் பயன்படுத்து கிறவர்களில் 78% பேர் நகரங்களைச் சேர்ந்தவர்கள், 22% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 21% பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38% பேர், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 28% பேர், மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 36% பேர் ரெடிமேட் உணவைப் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இது 40% 60% அதிகரிக்கும் என்பது கணிப்பு.

மிளகாய்த்தூளையும் விட்டுவைக்கவில்லை!

‘கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில்

மிளகாய்த்தூள்குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘மிளகாய்த்தூள் விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இதனால் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மேலும், மிளகாய்த்தூளில் இயற்கை வண்ணம் மற்றும் காரத்தன்மை நீடிக்க 2% தாவர எண்ணெய் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிகமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்ப்பதுடன், அதனை லேபிளில் சரிவர தெரியப்படுத்துவது கிடையாது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயப் பொருளே!’ என்கிறது அந்த ஆய்வு.

மொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள். மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.

குழந்தைகளைக் கண்காணியுங்கள்!

‘ரெடி டு ஈட்’ உணவு சாப்பிட்ட நாளைத் தொடர்ந்த நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். கூடவே, தொடர்ந்து ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணியுங்கள். ஒன்று, அது அதிக துறுதுறு என்று மாறும். அல்லது மந்தமாக மாறும். குழந்தைகளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கும், அவர்கள் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!

Categories: HEALTH TIPS

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

4,December, 2014 Comments off
தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.
ஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிச் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான நித்யானந்த் ஜெயராமன்
நல்ல பிளாஸ்டிக்?
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.
பிரஷ் முதல் பால் வரை!
நம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான விமல்ராஜ்.
“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் நாராயணன்.
‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். .

பார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற...
அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
ஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.

பிளாஸ்டிக்கில் கவனம்
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free), தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய பிராண்ட் தயாரிப்பாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர் கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்?
சதீஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
‘ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக 1015 ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம். சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது. ”

கண்ணாடியிலும் கவனம்
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில் பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில் காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.
பு.விவேக் ஆனந்த்

பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறத
1 Polyethylene terephtalate (PETE or PET) – தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) – பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
4 Low density polyethylene (LDPE) – மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene – தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam – மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் – 2, 4, 5
குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது – 1
மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் – 3, 6, 7

Thanks –vikatan

Categories: HEALTH TIPS

உணவு யுத்தம்!-23

16,July, 2014 Comments off

 

கடவுளும் காபி கடைகளும்

திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர் தனது புதிய திரைப்படம் குறித்து விவாதிப்பதற்காக என்னைச் சந்திக்க விரும்பினார். எங்கே சந்திக்கலாம் எனக் கேட்டேன். ‘காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள், அங்கேதான் முழுப்படத்தின் திரைக்கதையும் எழுதினேன்’ என்றார். காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் பண்பாட்டு மாற்றத்தின் நவீன அடையாளங்கள். அவர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் காபி ஷாப்புக்குப் போயிருந்தபோது மேற்கத்திய இசையும் இலவச இணைய வசதியுள்ள மேஜை ஒன்றில் அவர் தனியே அமர்ந்திருந்தார்.

Read more…

Categories: HEALTH TIPS

முட்டைக்குள் என்ன இருக்கு?

14,July, 2014 Comments off

last page new.indd

Categories: HEALTH TIPS

உணவு யுத்தம்!-20

7,July, 2014 Comments off

 

பொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும் காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப் பெற்றுவிடலாம்.

இப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக, விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.

Read more…

Categories: HEALTH TIPS

நாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா?

3,July, 2014 Comments off

பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.

குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?

Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.

Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.

Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.

Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.

Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

போலி சுத்திகரிப்பு

தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.

கோடையில் இது சீசன் தொழில்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.

இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002′ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.

தீர்வுகள் என்ன?

250 – 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.

கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.

பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்

பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.

எண் 1 – பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 – ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 – பாலிவினைல் குளோரைடு, 4 – லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 – பாலி புரோபைலினால், 6 – பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 – ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

Categories: HEALTH TIPS

உணவு யுத்தம்!-14

14,June, 2014 Comments off

விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்!

ஒரு நாளைக்கு 20 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக தனது 73 வயதிலும் வீடு வீடாக கூடை தூக்கிக்கொண்டு போய் கீரை விற்கும் பாட்டியை நான் அறிவேன். முதுமையில் யாருக்கும் சுமையாக வீட்டில் இருக்கக் கூடாது, படிக்க விரும்பும் பேரன் பேத்திகளுக்கு ஃபீஸ் கட்டுவேன் என்ற இரண்டு காரணங்களை அந்தப் பாட்டி எப்போதும் சொல்வார். அவரைப்போன்ற நூறு நூறு உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை முடிவு கொண்டுவரக் கூடிய அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிக்கக் கூடாது.

இந்தியாவில் பல்வேறு வகையான சில்லறை வணிகங்களில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி. இவர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு சில்லறை வர்த்தகம் நடந்து வருகிறது. அந்நிய நேரடி மூலதனத்தால் இவர்களின் விற்பனை மோசமாகப் பாதிக்கப்படும்.

Read more…

Categories: HEALTH TIPS

உணவு யுத்தம்!-13

12,June, 2014 Comments off

ருசியில்லாத காய்கறிகள்!

காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.

ரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.

Read more…

Categories: HEALTH TIPS