Home > Ariyalur, DISTRICT-NEWS > ஜெயங்கொண்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் அழிப்பு

ஜெயங்கொண்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் அழிப்பு

7,September, 2014

ஜெயங்கொண்டம், செப்.7–

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட திட்டமிட்ட நுன்னறிவு குற்ற தடுப்பு பிரிவு எஸ்.ஐ. சிவகாமி, தலைமையில் எஸ்.ஐ. ராஜா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த மாதம் 5–ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் உள்ள ஒரு கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் நவேந்திரன், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி குப்பை மேட்டில் குழிதோண்டி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை குழியில் கொட்டி அதில் பிணாயில் ஊற்றி அழித்தனர்.

Categories: Ariyalur, DISTRICT-NEWS