Archive

Archive for the ‘Thanjavur’ Category

பேராவூரணியில் இன்று பால் பரிசோதனை முகாம்

7,October, 2017 Comments off

பேராவூரணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை (அக். 7) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச பால் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர்,  தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோர்  அறிவுறுத்தலின்படி இந்த முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் பால் தரமானதா? அல்லது கலப்படமானதா? என முகாமில் கருவி மூலம் பரிசோதனை செய்து,  முடிவை அன்றைய நாளிலேயே பெற்று கொள்ளலாம்.
முகாமிற்கு 300 மி.லி. அளவிலான பாலை கொண்டு வரவேண்டும். முகாமில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

புகையிலை பொருட்கள் பறிமுதல்

31,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் ஆய்வு

20,July, 2017 Comments off

3

Categories: DISTRICT-NEWS, Thanjavur

கும்பகோணத்தில் தனியார் உணவகத்தில் 750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

9,July, 2017 Comments off

கும்பகோணத்தில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ ரேசன் அரிசியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஹோட்டல்கள், சிறு உணவு விடுதிகளில் காலாவதியான பொருள்கள் உபயோகப்படுத்தபட்டு வருகிறதா, தரமான பொருள்களை கொண்டு உணவு சமைக்கப்படுகிறதா என தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் உணவு ஆய்வாளர்கள் மகேஷ், சந்திரமோகன் உள்ளிட்ட குழுவினர் அனைத்து உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பல ஹோட்டலில் காலாவதியான பிஸ்கட், சாக்லேட், குளிர்பானம் என சுமார் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதே போல் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம், 60 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சோதனை செய்த போது, அங்கு அனுமதியின்றி 750 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு, ரேசன் அரசியை பறிமுதல் செய்து, சார்ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவனிடம், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி 750 கிலோ ஒப்படைக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த உணவக உரிமையாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

தஞ்சையில் பிளாஸ்டிக் அரிசி புகார் உணவு பாதுகாப்பு துறையினர் அரிசி கடைகளில் அதிரடி ஆய்வு

9,June, 2017 Comments off

தஞ்சை: பிளாஸ்டிக் அரிசி புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று தஞ்சையில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக கண்டறியப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அரிசி கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தஞ்சையில் உள்ள அரிசி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், வடிவேல், பாண்டி, உமாகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தினர். இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளிலும் அரிசி ஆலைகளிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் மீது உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் 04362&276511 என்ற போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

கும்பகோணத்தில் தீடீர் ஆய்வு

5,April, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

தஞ்சையில் போலி முட்டைகள் விற்பனையா? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

20,December, 2016 Comments off

தஞ்சாவூர்,
தஞ்சையில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
போலி முட்டைகள்
போலி முட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், மகேஷ், கவுதமன், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், கார்த்திக், வடிவேல், பாண்டி, உமாகேசன், செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள முட்டை விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகளில் ஆய்வு
தஞ்சை கீழவாசல், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட முட்டை விற்பனை நிலையங்களில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் யாரேனும் போலியான முட்டைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

டாஸ்மாக் பார்களில் காலாவதியான குளிர்பானங்கள் திண்பண்டங்கள் கைப்பற்றி அழிப்பு

1,December, 2016 Comments off
 
Categories: DISTRICT-NEWS, Thanjavur