தள்ளுவண்டியில் தரமற்ற உணவு: அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

27,March, 2017 Leave a comment

ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில், பிளாஸ்டிக் கவர் மூலம் இட்லி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அத்துடன் தள்ளுவண்டியில் கூழ் விற்பனை செய்யும் நபர்கள், சுத்தமில்லாத தண்ணீரில் கூழ் கலக்கி விற்கின்றனர். இப்படி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயார் செய்யப்படுவதால், அதை சாப்பிடும் மக்களுக்கு நோய் பரவி வருகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories: NEWS

கலப்படத்துக்கு எதிராகப் போராடும் அனுபமா

27,March, 2017 Leave a comment

நாம் உண்ணும் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை. பாதுகாப்பான உணவை மக்களுக்கு அளிப்பதைத் தன்னுடைய கடமையாகச் செய்துவருகிறார் கேரள மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனுபமா.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் நான்காம் இடத்தைப் பிடித்தவர். இவர் பதவியேற்ற 15 மாதங்களுக்குள் சுமார் 6,000 கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிந்துள்ளார். 750 நபர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளார். இப்போது கேரளாவில் அனுபமாவின் பெயரைக் கேட்டாலே உணவுக் கலப்படம் செய்வோர் தலைதெறிக்க ஓடுகின்றனர். தான் ஆணையராக இருந்தாலும் களத்துக்குச் செல்லத் தயங்குவதில்லை அனுபமா.

கேரளாவில் பல்வேறு சந்தைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். ஆய்வில் காய்கறிகள், பழங்களில் கிட்டத்தட்ட 300 சதவீதத்துக்குப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம். இவை மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தை உண்டாக்குபவை.

இந்த விஷயம்தான் கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிவதில் இன்னும் முனைப்புடன் அனுபமாவைச் செயல்படவைத்தது. மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது நன்மதிப்பையும் உருவாக்கியது.

வீட்டிலேயே தோட்டம் அமைக்கலாம் என்ற இவரது யோசனை, விழிப்புணர்வுப் பிரசாரமாகக் கேரளாவில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் பலனாகக் கேரள மக்கள் தற்போது தங்களது வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர். கேரள இதற்கு அரசு ஊக்கத் தொகை வழங்கிவருகிறது. கேரளாவுக்கு 70% காய்கறிகள் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. வீடுகளிலேயே தோட்டம் அமைத்துவருவதால் வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வரும் காய்கறி இறக்குமதியின் அளவு சற்றுக் குறைந்துள்ளது.

“மக்களுக்கு ஆரோக் கியமாக உணவளிப்பது இன்றைய தேவை. என்னுடைய வெற்றிக்குப் பொதுமக்கள்தான் காரணம். அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் பல விஷயங்களை என்னால் செயல்படுத்தியிருக்க முடியாது” என்கிறார் அனுபமா

Categories: NEWS

DINAKARAN NEWS

27,March, 2017 Leave a comment
 

Categories: DISTRICT-NEWS, Salem

The Tamilnadu Foodgrains Merchants Association Limited.

24,March, 2017 Leave a comment

J.P.Nadda 24.03.201724.03.2017 Nadda memo 1 Eng24.03.2017 Nadda memo 2 Eng

Categories: NEWS

திருவாடானை பகுதியில் காலாவதி குளிர்பானங்கள் பொதுமக்கள் புகார்

24,March, 2017 Leave a comment

திருவாடானை: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், சில கடைகளில் காலாவதி குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு நிர்ணய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால், குடிநீர் ஆகியவற்றின் தரத்தை உறுதிபடுத்த உணவு பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. காலாவதியான உணவுபொருட்களை விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.திருவாடானை பகுதியில் கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக குளிர்பான கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட் அதிகளவில் விற்பனையாகிறது. ஆனால் சில கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், தண்ணீர் பாக்கெட்டுகள் காலாவதியானதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காலாவதியான உணவுப்பொருட்களை உட்கொள்ளும்போது, இயற்கை உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் தரமானதாக விற்பனை செய்யவேண்டும் என்றும் காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்வோர் மீது மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

24,March, 2017 Leave a comment
 

மதுரை: மதுரையில்  கார்பைட் கல் வைத்து  பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு  பாதுகாப்புத் துறை அலுவலாகள் பறிமுதல் செய்தனர். சீசன் துவங்கியதையடுத்து, மதுரையில் மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள பழக்கடை குடோனில், கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் சில குடோன்களில் மாம்பழங்கள் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.  அதிகாரிகள் கூறுகையில், ‘‘கார்பைட் கல் வைத்து பழங்களை பழுக்க வைத்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சீசன் முடியும் வரை இந்த சோதனை தொடரும்’’ என்று தெரிவித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Madurai

தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தவறினால் நடவடிக்கை: ஆட்சியர்

24,March, 2017 Leave a comment

சென்னை, மார்ச் 24: சென்னையில் தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் படி பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள் சட்ட விதிகளை கடைபிடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் படி குற்றவியல் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories: Chennai, DISTRICT-NEWS

சுகாதாரமற்ற உணவகத்துக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

24,March, 2017 Leave a comment

உடுமலை: உடுமலையில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு, ஒழுங்குமுறை விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. உணவகங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் படியே உணவு தயாரிக்க வேண்டும். அதன்படி, தேவையான உறிஞ்சு சக்தியுடன் புகை போக்கி அமைக்கப்பட்டால், சமையலறை முழுவதும் புகை பரவி சுகாதார சீர்கேடு மற்றும் துாய்மையற்ற நிலை காணப்படக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான விதிகள் பின்பற்ற வேண்டும். ஆனால், சில உணவகங்களில் இது போன்ற விதிகள், சரிவர பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், உணவுபாதுகாப்பு அலுவலர்கள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடுமலையில் செயல்படும் பல்வேறு உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பழநி ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில், துாய்மையற்ற மற்றும் சுகாதாமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டறியப்பட்டது.அதன்பேரில், உணவக உரிமையாளருக்கு, ஒழுங்குமுறை விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், ‘உணவகங்கள், பேக்கரில், டீ கடைகள் என, அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகள் பின்பற்ற வேண்டும்.விதிகளை பின்பற்ற போதிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கப்படுகிறது. ஆகையால், இனி வரும் நாட்களில், நோட் டீஸ் அளிக்கப்பட்டு சட்டப்பிரிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Categories: NEWS

சுகாதாரமற்ற உணவகத்துக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

24,March, 2017 Leave a comment

உடுமலை: உடுமலையில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு, ஒழுங்குமுறை விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. உணவகங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் படியே உணவு தயாரிக்க வேண்டும். அதன்படி, தேவையான உறிஞ்சு சக்தியுடன் புகை போக்கி அமைக்கப்பட்டால், சமையலறை முழுவதும் புகை பரவி சுகாதார சீர்கேடு மற்றும் துாய்மையற்ற நிலை காணப்படக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான விதிகள் பின்பற்ற வேண்டும். ஆனால், சில உணவகங்களில் இது போன்ற விதிகள், சரிவர பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், உணவுபாதுகாப்பு அலுவலர்கள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடுமலையில் செயல்படும் பல்வேறு உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பழநி ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில், துாய்மையற்ற மற்றும் சுகாதாமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டறியப்பட்டது.அதன்பேரில், உணவக உரிமையாளருக்கு, ஒழுங்குமுறை விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், ‘உணவகங்கள், பேக்கரில், டீ கடைகள் என, அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகள் பின்பற்ற வேண்டும்.விதிகளை பின்பற்ற போதிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கப்படுகிறது. ஆகையால், இனி வரும் நாட்களில், நோட் டீஸ் அளிக்கப்பட்டு சட்டப்பிரிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS