Home > NEWS > பன்னாட்டு கம்பெனிக்கு தடை விதிக்கக்கோரி வணிகர் சங்க பேரவை போராட்டம் நடத்தும் செயல்வீரர்கள் கருத்தரங்கில் தகவல்

பன்னாட்டு கம்பெனிக்கு தடை விதிக்கக்கோரி வணிகர் சங்க பேரவை போராட்டம் நடத்தும் செயல்வீரர்கள் கருத்தரங்கில் தகவல்

10,September, 2014

தஞ்சை : பன்னாட்டு கம்பெனிகளு க்கு தடை விதிக்கக்கோரி வணிகர் சங்க பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று செயல்வீரர்கள் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க செயல்வீரர்கள் கருத்தரங்கம் மேம் பாலம் வணிகர் மகாலில் நடந்தது.மாவட்ட தலை வர் கணேசன் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர்கள் ராமானுஜம், புண்ணியமூர்த்தி, அவைத்தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். குடந்தை சேகர், ஆடுதுறை சண்முகம், திருச்சிற்றம்பலம் சேதுராமன், ராஜகிரி அண்ணாதுரை, திருவை யாறு திலகர், ஆத்மநாதன், ரமேஷ், எல்ஐசி மனோகரன், கருப்பையா, மாநகர தலை வர் வாசுதேவன், செயலா ளர் ராஜா, பொருளாளர் கந்தமுருகன், மாநில துணை தலைவர் கருணாகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ராஜா கருத்துரையாற்றினர். புதிய நிர்வாகிகளை மாநில செயலாளர் தேவராஜ் நியமித்தார். மாநில தலைவர் வெள்ளையன் சிறப்புரையாற்றினார்.
பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கொடுமைகளை கருத்தில் கொண்டு இந்திய நாட்டின் சில்லரை வணிகர்கள், குடிசை தொழில் புரிவோர் மற்றும் சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் சீர்கெட்டு தற்கொலை முயற்சிகளுக்கு தள்ளப்படக்கூடிய அவல நிலையை தவிர்க்க சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியை ஏற்படுத்தி பூமிக்குள் இருக்கும் கனிம வளங்களை ஓஎன்ஜிசி, மீத்தேன் என சதி திட்டங்களின் வாயி லாக கொள்ளை லாபத்தை சுரண்ட பார்க்கும் பகாசுர பன்னாட்டு கம்பெனிகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.மீத்தேன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், காவிரி நீர் மேலாண்மை வாரியம் பங்கீட்டுக்குழு அமைக்க வேண்டும். இதனால் ஏற்படும் அவலங்களை சுட்டிகாட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை போராட்டம் நடத்துவது.
தஞ்சை நகரின் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மன்னர் காலத்து அகழி களை தூர்வாரி தூய்மைப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்கி நகரை அழகுப்படுத்த முயற்சி எடுத்து வரும் கலெக்டருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

Categories: NEWS