Home > NEWS > மெரினா கடற்கரையில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை

10,September, 2014

சென்னை, செப்.10-
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையை சேர்ந்த 49 மலேரியா பணியாளர்கள், 11 சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 7 குழுக்களாக பிரிந்து, 3 துப்புரவு அலுவலர்கள் கண்காணிப்பில், மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கூடுதல் மாநகர் நல அலுவலர் மேற்பார்வையில் மெரினா கடற்கரையில் உள்ள சுமார் 620 கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் பயன்படுத்துவதற்கு தரமற்ற 130 லிட்டர் எண்ணெய், 780 தண்ணீர் பாக்கெட்டுகள், காலாவதியான 42 லிட்டர் குளிர்பானங்கள், 75 கிலோ மீன்கள், 20 கிலோ சிப்ஸ், 12 கிலோ காய்கறிகள், 280 கிலோ காலாவதியான உணவு பண்டங்கள், 3 கிலோ புகையிலை மற்றும் குட்கா, 15 கிலோ மிளகாய் பொடி, 4 கிலோ கலர் பொடி, 10 கிலோ பிளாஸ்டிக் பைகள், 68 தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இதே போன்று மெரினா கடற்கரை புல்வெளிகளில் 72 இடங்களில் எலி ஒழிப்பு மருந்து வைக்கப்பட்டது. அதில் இறந்து கிடந்த 27 எலிகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் தரமற்ற, தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

Categories: NEWS