Home > DISTRICT-NEWS, Tirunelveli > சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

12,September, 2014
 

சங்கரன்கோவில், செப். 12:
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து, காலாவதியான பொருட் கள் மற்றும் தடை செய்யப் பட்ட பொருட்களை கண்டு பிடித்து அவற்றை அழித்து வருகின்றனர்.
சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணா கரன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகாராஜன், சந்திரசேகரன், கருப்பசாமி, முத்துகுமார சாமி, மோகன்குமார், சண்முகசுந்தரம், ரமேஷ், மகேஸ்வரன், சட்டநாதன், அப்துல்காதர் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். அவர்கள் சங்கரன் கோவில் அண்ணா பேரூந்து நிலையத்தின் உட்பகுதியில் இருந்த கடை கள், பழ வியாபாரம் செய் யும் இடங்களில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த காலா வதியான உயர்ரக குளிர் பானங்கள், சாப்பிடுவதற்கு பயன்படுத்த முடியாத ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள், மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், போதை ஏற்படுத்தும் புகை யிலை போன்ற பொருட் களையும், கெட்டுப் போன பல வண்ண கலரில் இருந்த அப்பளம்பூ பாக்கெட்டு களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இப்பகுதியில் இருந்த ஹோட்டல்களில் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட முந்தரி தோடுகளை இனி பயன் படுத்தக் கூடாது. மீறி பயன் படுத்தினால் உணவு பாது காப்பு சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படுவ துடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்ற அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சங்கரன் கோவில் நகரில் நேற்று பறி முதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மாட்டுத் தாவணியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு சென்று தீயிட்டு அழித்து, பொருட்களை அழித்தனர். சங்கரன் கோவில் பகுதியில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்த பொருட் களின் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் வரையில் இருக்கும்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli