Home > DISTRICT-NEWS, Salem > இரசாயனம் கலந்து விற்பனை; ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லம் பறிமுதல்

இரசாயனம் கலந்து விற்பனை; ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லம் பறிமுதல்

14,September, 2014

 

சேலம் மாவட்டத்தில் கரும்பு அதிகமாக உற்பத்தியாகும், ஓமலூர், தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, வட்டக்காடு, கருப்பூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி, டேனிஷ் பேட்டை, உள்ளிட்ட இடங்களில், சிறிய அளவிலான 100-க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்தப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மண்டிக்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், செவ்வாய்பேட்டை பகுதி வெல்ல வியாபார கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட, அதிக அளவில் இரசாயனம் கலந்துள்ளதாகவும், கரும்புச் சாறில் தயாரிக்கவேண்டிய வெல்லத்தில் அஸ்கா சக்கரை கலந்து வெல்லம் தயாரித்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, சில வெல்ல உருண்டைகளை பரிசோதனைக்கு எடுத்து சென்ற அதிகாரிகள் இரசாயணம்- அஸ்கா சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்க தடை விதித்தனர். இதனால் கடந்த 2 வாரமாக வெல்லம் உற்பத்தியாளர்கள், தங்களது வெல்ல உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், ஓமலூர் பகுதியிலிருந்து இரசாயனம் கலந்த சுமார் 6 டன் வெல்லம் லாரியில் கொண்டு வந்து செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமான குடோனில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாகவும், இரசாயனம் கலந்த வெல்லம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் ஓமலூர் பகுதி வெல்ல உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவிடம் புகார் செய்தனர்.

அதன்படி நேற்று மதியம் செவ்வாய்பேட்டை பகுதியில் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் ரூ.4 இலட்சம் மதிப்புள்ள இரசாயனம் கலந்த வெல்லம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாக்குபையில் இருந்த வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, வியாபாரிகள் சிலர் லாபநோக்கத்தோடு செயல்பட்டு இரசாயனம் கலந்த வெல்லத்தை மறைமுகமாக கொள்முதல் செய்வதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் சர்க்கரை பாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. வெல்லத்திற்கு கரும்புச் சாறு மூலப்பொருட்களாக இருந்தாலும், அதிலுள்ள அழுக்கு எடுப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சப்போலேட், ஹைட்ரோசன், சோடா உப்பு போன்ற இரசாயனம் சேர்ப்பதால், இது உண்ணும் மனிதர்களுக்கு உணவு குழாயில் வீக்கம், கல்லீரல் வீக்கம், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு தரமான வெல்லத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வெல்ல உற்பத்தியாளர்களிடம் கூறியுள்ளோம்.

கரும்புச்சாறு மூலம் தான் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் லாபம் அதிகமாக கிடைப்பதால் சர்க்கரை 80% கரும்புச்சாறு 20% கலந்து வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. பார்பதற்கு அழகாவும், சுவையாகவும் இருப்பதால் மக்களும் விரும்பி வாங்குகின்றனர்.

சர்க்கரை கலப்பதையும், இரசாயனம் கலப்பதையும் வெல்ல உற்பத்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலந்த வெல்லத்தை கொள்முதல் செய்யக்கூடாது என்று ஏற்கனவே வியாபாரிகளுக்கு அதையும் மீறி இரசாயனம் கலந்த வெல்லத்தை சில உற்பத்தியாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்குவதாக வந்த தகவலையடுத்து குடோனில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லம் இரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். தேவைப்பட்டால் வியாபாரியின்

Categories: DISTRICT-NEWS, Salem
  1. 14,September, 2014 at 7:20 pm

    சபாஷ் !

  1. No trackbacks yet.
Comments are closed.