Home > NEWS > உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விழுப்புரம் நகரில் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விழுப்புரம் நகரில் திடீர் ஆய்வு

26,September, 2014

விழுப்புரம்: விழுப்புரத்தில் பான் மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் <உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேஷ், முருகன், கதிரவன், ஜெயராஜ், தர்மர் உள்ளிட்டோர் கடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மே<லும், 20 கிலோ எடையுள்ள கலப்பட டீ தூள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: NEWS