Home > NEWS > காலாவதியான உணவுப் பொருட்களை விற்றால் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

காலாவதியான உணவுப் பொருட்களை விற்றால் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

26,September, 2014

இலுப்பூர், : இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடை களில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் சுலைமான் சேட் எச்சரித்துள்ளார்.
இலுப்பூர் பேரூராட்சிப் பகுதியில் 40 மைக்கிரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலுப்பூர் காய்கறி மார்க்கெட், கடை வீதி, இறைச்சி கடை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சிப் பணியாளர்கள் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவமுருகன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், இலுப்பூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அரும்புராஜ் மற்றும் பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 15 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைககளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டு பேரூராட்சி கணக்கில் செலுத்தப்பட்டது.
இவ்வாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கடை களில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் சுலைமான் சேட் எச்சரித்துள்ளார்.

Categories: NEWS