Home > NEWS > உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

17,October, 2014

மணமேல்குடி, :   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணமேல்குடி தாலுகா பகுதிகளில் உள்ள பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும் இனிப்புகள் மற்றும் கார வகைகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வாளர் வேல்முருகன், உதவியாளர் அபுல்ஹாசன் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது இனிப்புகள் மீது அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட மற்றும் சந்தேகப்படியான 10 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய் யப்பட்டு குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டன.
இவ்வாறு வண்ணம் பூசப்பட்ட இனிப்புகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக வண்ணம் பூசப்பட்ட உணவை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்தனர்.

Categories: NEWS