Home > DISTRICT-NEWS, Salem > உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு

19,October, 2014

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தீபாவளி இனிப்புகள் தயார் செய்யப்படும் இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுலவலர் மருத்துவர் டி.அனுராதா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

ஆத்தூரில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக இனிப்புகள் மண்டபங்களில் வைத்து தயார் செய்யப்படுகின்றன. இந்த இனிப்பு வகைகள் சுத்தமாக தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தீபாவளி இனிப்பு வகைகள் சுத்தமான எண்ணெய், நெய், மாவு வகைகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறதா,சோடா உப்பு உள்ளிட்ட அதிக சுவை ஊட்டக்கூடிய ரசாயனம் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இனிப்பு வகைகளை சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் என்.சுந்தர்ராஜன், ஐ.புஷ்பராஜன், இ.கோவிந்தராஜன், எம்.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Salem