Home > Cuddalore, DISTRICT-NEWS > பலகாரங்களை சுகாதாரமாக தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

பலகாரங்களை சுகாதாரமாக தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

19,October, 2014

கடலூர் : ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராமப்பகுதி அனைத்திலும் தீபாவளியையொட்டி இனிப்பு மற்றும் காரவகை பலகாரங்கள் தயார் செய்து வருகின்றனர். பலகாரங்கள் தயார் செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பலகாரங்கள் செய்யுமிடம், சேமித்து வைக்குமிடம் விற்பனை செய்யுமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக செயற்கை சாயப்பொருட்கள், சுவையூட்டிகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தரமான மாவு மற்றும் தரமான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்க வேண்டும். பலகாரங்கள் ஈ மொய்க்காமலும், தெரு புழுதி படாமலும் மூடி வைக்க வேண்டும். இனிப்பு வகைகளை பட்டர் பேப்பரில் வைக்க வேண்டும்.இறைச்சி கடை நடத்துவோர் ஆரோக்கியமான பிராணிகளையும், கோழிகளையும் கொண்டு கறி வியாபாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS