Home > Cuddalore, DISTRICT-NEWS > கீரப்பாளையம், புவனகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

கீரப்பாளையம், புவனகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

25,October, 2014

25102014_epsuu3

புவனகிரி, அக்.25-

கீரப்பாளையம், புவனகிரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலாவதியான உணவு பொருட்கள்

கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் கீரப்பாளையம் கடை வீதியில் உள்ள கடைகளில் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தயாரிப்பு தேதி இல்லாத மற்றும் காலாவதி தேதி முடிந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

டாஸ்மாக் கடையில் ஆய்வு

பின்னர் புவனகிரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மதுபானங்களில் கலப்படம் உள்ளதா? அரசு நிர்ணயித்த விலைக்கு விற்கப்படுகிறதா? அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று மதுபிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆனால் மதுபிரியர்கள் எதுவும் கூறவில்லை.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
  1. 26,October, 2014 at 9:21 am

    மது பானத்தில் கலப்படம் உள்ளதா என்பதை மாதிரி ஆய்வின் போது தான் தெரிய வரும். உயிர் இழந்தவர்கள் எதனால் என்பதை ஊர்ஜிதம் செய்யவும் உதவும். உண்மை வெளி வருமா ?

  1. No trackbacks yet.
Comments are closed.