Home > NEWS > உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

5,November, 2014

ஊட்டி, : உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் ஊட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி., கேமராக்கள் பொருத்த வேண்டும். நுகர்வோர் மன்ற கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். நிதி ஆதாரம் இல்லை எனவும், பொறுப்பு அதிகாரிகள் இல்லை எனக் கூறி மக்கள் மன்றங்கள் தப்பித்துக் கொள்ளும் போக்கு பொதுமக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பால் விலையை உயர்த்தியுள்ளது. இதனால், சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஊட்டி நகரில் பல்வேறு சாலை சந்திப்புகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் எந்நேரமும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் தாறு மாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது போன்ற காரணங்களால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாமஸ் சர்ச் சாலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.  அதிகாரிகள் எக்காரணத்தை கொண்டும் காலம் தாழ்த்தக் கூடாது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், செயலாளர் காந்தராஜ், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories: NEWS
  1. 5,November, 2014 at 11:26 am

    சந்தேகமா ????

  1. No trackbacks yet.
Comments are closed.