Home > DISTRICT-NEWS, Salem > ஜவ்வரிசி ஏலம் எடுக்க வியாபாரிகள் மறுப்பு ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி

ஜவ்வரிசி ஏலம் எடுக்க வியாபாரிகள் மறுப்பு ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி

5,November, 2014

சேலம், : சேலத்தில் ஜவ்வரிசி பிரச்னையில் ஓரிரு நாட்களில் தீர்வு ஏற் படும் என நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி கூறி னார்.
சேலம் குரங்குச்சாவடி யில் சேகோசர்வ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பதிவு செய்து கொண்டுள்ள வியாபாரி கள், ஏல அடிப்படையில் ஜவ்வரிசியை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கெடுபிடி செய்வதாக கூறி, கடந்த 7 தினங்களாக, சேகோசர்வ்வில் நடை பெறும் ஏலத்தை வியாபாரி கள் புறக்கணித்து வருகின்ற னர். இதனால்
ரூ20
கோடி மதிப்புள்ள ஜவ்வரிசி தேக் கம் அடைந்துள்ளது.
பிரச்னையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர, சேகோ சர்வ் சேர்மன்அருள் முருகன், பாதுகாப்பு குழு தலைவர் தமிழ்மணி உள் ளிட்ட அதிகாரிகள் சென்னை சென்றுள்ளனர். அங்கு ஊரக தொழிற்துறை அமைச்சர் மோகனை சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிறு மற் றும் குறு தொழிற்துறை செயலாளர், சுகாதார துறை செயலாளர், உணவு பாதுகாப்பு துறை ஆணை யர் உள்ளிட்டோரை சந்தித்து, சேலத்தில் நிலவி வரும் நிலை குறித்து தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் மோகன், பிரச் னையை சுமூகமாக முடி வுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
மேலும் வட மாநிலங்களில் சேகோ சர்வ் சார்பில், குடோன் அமைத்து, நேரடி முகவர்களை நியமித்து, ஜவ்வரிசி விற்பனை செய் யும் திட்டத்தையும் அதிகாரிகள் முன் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்று ஜவ்வரிசி விற் பனை நடைபெற்றது என் பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில், ஜவ்வரிசியில் வரி ஏய்ப்பு செய்வதன் மூலம், அரசுக்கு மாதம் ஒன்றுக்கு
ரூ100
கோடி இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வணிக வரித் துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தொப்பூர் மற்றும் அத்திப்பள்ளி சோதனை சாவ டியில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Salem