Home > NEWS > பான்மசாலா அழிப்பு

பான்மசாலா அழிப்பு

5,November, 2014

ஆர்.எஸ்.மங்கலம்: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்படி, வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கர்ணன் பஸ் ஸ்டாண்ட், புல்லமடை ரோடு, டி.டி மெயின் ரோடு பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் கேன்கள், பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Categories: NEWS