Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு

10,November, 2014

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் இயங்கி வருவதாக வந்த புகார்களின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலூர் ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் கந்தசாமி, குறிஞ்சிப்பாடி குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இறைச்சியின் கழிவுகளை கடை அருகிலேயே குவித்து வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, குறைகளை 15 நாளில் நிவர்த்தி செய்ய அறிவுருத்தினர். தவறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS