Home > NEWS > உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய கோரி 18–ந்தேதி வணிகர் பேரமைப்பு பேரணி

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய கோரி 18–ந்தேதி வணிகர் பேரமைப்பு பேரணி

28,November, 2014

சென்னை, நவ 28–

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்வது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது, ஜி.எஸ்.டி. சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 18–ந்தேதி டெல்லியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து மாபெரும் பேரணி நடத்த உள்ளனர்.

இந்த பேரணியில் திரளாக பங்கேற்பது குறித்து ஆலோசிக்க சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தியாகராயநகர் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.மோகன் வரவேற்று பேசினார்.

மண்டல தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாவட்ட தலைவர்கள் ஜோதி லிங்கம், மாரித்தங்கம், என்.டி. மோகன், ஜெயபால், ஆதிகுருசாமி, எம்.அமல்ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் டெல்லி பேரணி குறித்து தேசிய தலைவர் பி.சி. பார் டியா, கன்வீனர் மகேந்தி ரஷா பேசினர். வணிகர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் மற்றும் அகிலா ஸ்ரீனிவாசன், பேசினார்கள்.

கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர்கள் ஜோசப், வி.பி.மணி, மாநில துணை தலைவர்கள் ஆவடி அய்யார் பவன் அய்யாத்துரை, ஆலந்தூர் கணேசன், ஐ.பால்ஆசீர், அடையார் பாஸ்கர் அயனாவரம் சாமுவேல், இம்தியாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு நன்றி கூறினார்.

Categories: NEWS