Home > DISTRICT-NEWS, Villupuram > போலியாக தயாரித்து விற்பனை நெய் குடோனுக்கு அதிகாரிகள் சீல்

போலியாக தயாரித்து விற்பனை நெய் குடோனுக்கு அதிகாரிகள் சீல்

29,November, 2014
 

விழுப்புரம், நவ. 29:

விழுப்புரத்தில் உள்ள மளிகைக்கடைகளில் மக்கள் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் அதிகளவு கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. கலப்படத்தில் வரும் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் மக்களும், அதனையே வாங்கிச்செல்கின்றனர். ஆனால் அது கலப்படம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 5க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெய் களில் கலப்படம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஈரோடு முகவரியிட்டு, கிருஷ்ணா நெய் என்று லேபிள்கள் ஒட்டப் பட்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஈரோட்டில் அப்படியொரு நிறுவனம் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. கடை உரிமையாளர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் விழுப்புரம் கேகே ரோட்டை சேர்ந்த ஒருவர் தான் இந்த நெய்யை தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அந்த நெய்குடோனுக்கு சென்று பார்த்த போது பாமாயில், வனஸ்பதி ஆயில் மூலம் நெய் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயில்கள் மூலம் நெய் தயாரித்து மக்களை இதுநாள் வரையில் ஏமாற்றிவந்துள்ளனர்.

இதனை உட்கொள்வ தன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படாவிட்டாலும் நெய் என்று கூறி மக்களை ஏமாறவைத்துள்ளனர். தொடர்ந்து நெய் குடோ னுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் கடைகளிலிருந்து 50 லிட்டர் கலப்பட்ட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் போலியாக தயாரிக்கப்பட்ட 2 மூட்டை பாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் உணவு பொருட்களை ஆய்வு செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram