Home > Cuddalore, DISTRICT-NEWS > பண்ருட்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

பண்ருட்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

2,March, 2015

நெல்லிக்குப்பம்,

பண்ருட்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

பண்ருட்டி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தார். அதில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று பாட்டில்களை பார்த்தார். மேலும் அருகில் இருந்த பாருக்குள் சென்ற டாக்டர் ராஜா, அங்கு சுகாதாரமற்ற நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்தவர்களிடம், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய அளவில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்களையும், வடிகால் வாய்க்காலில் கிடந்த பொருட்களையும் உடனே அகற்ற அவர் உத்தரவிட்டார்.

சுகாதார உணவு

இதையடுத்து பண்ருட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினார். அப்போது கடையின் உரிமையாளரிடம், சுகாதாரமான முறையில் உணவு சமைத்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது அண்ணாகிராம வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி உடன் இருந்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS