Home > DISTRICT-NEWS, Kancheepuram > தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை

தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை

22,June, 2017

காஞ்சிபுரம்: தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்கள் விற்றவர்கள் மீது, 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைக்க, ‘உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006’ அமலில் உள்ளது. எனவே, உணவு வியாபாரிகள், விற்பனை, கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உணவு எண்ணெய், பேக்கரி, இனிப்பு, பனை வெல்லம், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பலகாரங்கள், இனிப்பு, மிட்டாய், முறுக்கு, சிப்ஸ் விற்பனையாளர்கள்; பால் குளிரூட்டும் நிலையங்கள், உணவு சேமிப்பு கிடங்குகள் நடத்துபவர்கள் என, அனைவரும் உரிமம் அல்லது பதிவு பெற வேண்டும்.இதே போல, தெருக்களில் உணவு விற்பனை செய்பவர்கள், பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள், பள்ளி, கல்லுாரி கேன்டீன்கள், இறைச்சி கடைகள் என அனைத்து வித உணவு விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் பெற வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான உணவு வியாபாரிகள் உள்ளனர். கடந்த ஆண்டு, 1,970 உரிமமும், 3,934 பதிவு சான்றிதழும் உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.கலப்பட உணவு பொருட்கள், தரக்குறைவான மற்றும் தவறான குறையீடு உள்ள உணவு பொருட்களை விற்பனை செய்ததாக, 44 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரமற்ற உணவு பொருட்கள் குறித்து, 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.