காவேரிப்பட்டணத்தில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 7 இறைச்சி கடைகள் அகற்றம்

24,July, 2014 Leave a comment

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் உத் தரவின் பேரில் மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர் கலை வாணி தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துளசிராமன், சுவாமிநாதன், குணசேகர், சேகர் மற்றும் ராஜசேகர் ஆகியோர் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் கள். அப்போது சுகாதாரமற்ற முறையிலும், உணவு பாது காப்பு சட்டத்துக்கு புறம்பாக வும் செயல்பட்டதாக கண் டறியப்பட்ட 7 இறைச்சிக்கடை கள் அகற்றப்பட்டன. மேலும் 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறை யில் தயாரிக்கப்பட்ட குளிர் பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று அதி காரிகள் தெரிவித்தனர். இது போன்ற சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

கும்பகோணத்தில் ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

24,July, 2014 Leave a comment

T

கும்பகோணம் பகுதியில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்களை அதி காரிகள் பறிமுதல் செய் தனர்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
கும்பகோணம் நகரில் இறக்குமதி உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதி காரிகளுக்கு புகார்கள் சென் றன. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுப் பையன் உத்த ரவின்பேரிலும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தியின் ஆலோசனையின்பேரிலும் மாவட்டம் முழுவதும் கண் காணிப்பு செய்ய அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் மகேஷ், விஜயகுமார், கார்த்திக், வடிவேல் ஆகியோர் கும்பகோணம் நகரத் திற்குட் பட்ட ராமசாமி கோவில் சன்னதி பகுதியிலிருந்து மூர்த்தி செட்டித் தெருவரை உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது இறக்குமதி உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்த¤ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். அதை வைத்திருந்த வியாபாரிகளை மீண்டும் இதேபோல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தனர். இந்த சம்பவம் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

நுகர்வோர்களுக்கான உரிமைகள், கடமைகளை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்

24,July, 2014 Leave a comment

நுகர்வோர்களுக்கான உரிமைகள், கடமைகளை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் கூறினார்.

ஈரோடு மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், செவ்வாய்க்கிழமை கலைமகள் கல்வி நிலையத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது, இதில், அவர் பேசியதாவது:

காலுக்கு அணியும் காலணியை குளிர்ச்சாதன வசதி செய்யப்பட்ட கடைகளில் வாங்குகிறோம். ஆனால் நமக்குத் தேவையான உணவைத் தெருவோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோம். பகிர்தலும், நுகர்தலும் சமமில்லாமல் உள்ளது.

இந்தியாவில் ஒரு டாலர் கூட சம்பாதிக்காத இந்தியர்கள் 60 கோடி பேர் உள்ளனர். ஆனால் செல்போன் வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 93 கோடி. பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, குறைகளைக் கேட்கும் உரிமை நமக்குள்ளது.

இன்றைய இளைஞர்கள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து தெரிந்து வைத்து, அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.

பள்ளிகள் அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கான முதல் பரிசு கரட்டடிப்பாளையம் ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளிக்கும், 2-ஆம் பரிசு இந்து கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளிக்கும், 3-ஆம் பரிசு ஈரோடு மரகதம் அண்ணாமலை உயர்நிலைப்பள்ளிக்கும் வழங்கப்பட்டது.

கல்லூரிகள் அளவில் முதல்பரிசு கோபி கலைக் கல்லூரிக்கும், 2-ஆம் பரிசு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரிக்கும், 3-ஆம் பரிசு நஞ்சனாபுரம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வ.சிவகுமார், வருவாய்க் கோட்டாட்சியர் வை.குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் செ.வன்னியர்செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் கோ.கருணாநிதி, மாவட்டத் தொழிலாளர் நல ஆய்வாளர் மு.தாகீர்அலி, ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையச் செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், கலைமகள் கல்வி நிலையத் தாளாளர் எஸ்.மங்களவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories: DISTRICT-NEWS, Erode

திருவண்ணாமலை ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

24,July, 2014 Leave a comment

திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து 10 கிலோ தரமற்ற இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

திருவண்ணாமலை அசைவ ஹோட்டல்களில் தரமற்ற அசைவ உணவுகளை விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அதிகாரி கைலேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் உள்ள ஹோட்டலில் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

ஹோட்டலில் இருந்த குளிர் சாதனப் பெட்டியில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்டவைகள் தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இங்கிருந்து சுமார் 5 கிலோ கொண்ட சிக்கன், மட்டன், மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் காந்திநகர் பகுதியில் உள்ள அசைவ ஹோட்டலிலும் நடத்திய ஆய்வில் தரமற்ற சுமார் 5 கிலோ கொண்ட இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை நகரில் தரமற்ற இறைச்சி, மீன் பயன்படுத்திய அசைவ ஹோட்டல்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் முதல் கட்டமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

24,July, 2014 Leave a comment

இருக்கன்குடி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் தலைமையில், நாராயணன், ராஜேந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் அதிகமாக வாங்கும் சீனி மிட்டாய், சேவு போன்ற உணவுப் பொருள்களை நன்கு மூடி வைக்கவும் மற்றும் ஈக்கள் மொய்க்காதவாறு கண்ணாடி தாள் கொண்டு மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகளை அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் உணவகங்களில் தினசரி விற்பனையாகும் அளவுக்கு மட்டுமே உணவுகளை தயார் செய்ய வேண்டும். குறிப்பாக பூரி போன்றவைகளை மொத்தமாக தயார் செய்து வைக்கக் கூடாது எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெயில் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படும் குளிர் பானங்களை அதிகமாக இருப்பு வைத்துக் கொள்ளாமல், அதில் குறிப்பிட்டுள்ள பயன்பாட்டு தேதியை பார்த்து அவ்வப்போது தேவைக்கு மட்டுமே வாங்கி விற்பனை செய்திடவும் கடை உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மாசலா மற்றும் குட்கா போன்ற பொருள்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கலப்பட டீத்தூளைப் பயன்படுத்தி டீ விற்பனை செய்யக் கூடாது என்றும், கலப்பட டீத்தூளை எவ்வாறு கண்டுபிடிப்பது எனவும் டீக்கடை உரிமையாளர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமான அலுவலர் டாக்டர். கவிக்குமார் கூறுகையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வகைகளை வழங்கிட வியாபாரிகளை, அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

காலாவதி குளிர்பானங்கள் பறிமுதல்

24,July, 2014 Leave a comment

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து, நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் காலாவதியான, உணவு பொருட்கள், குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகநாதன் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட ஆறு பேர் கொண்ட குழு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பழக்கடைகளில் கார்பைட் கல் கொண்டு பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். இதை தவிர, காலாவதியான குளிர்பானங்கள், உடனடி பழரசம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பேக்கரி, ஸ்வீட் கடை, டீ கடை, இவற்றில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன தின்பண்டங்கள், போலி டீ துாள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை போதை வஸ்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகநாதன் கூறுகையில், ”பேருந்து நிலையத்தில் பகுதிவாசிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள் விற்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தோம். இதை கவனிக்காமல் குடிப்போருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும். இது போல் அடிக்கடி சோதனை நடக்கும்,” என்றார்.

கடலூரில் பரபரப்பு தவளை கிடந்த குளிர்பானத்தை குடித்த மாணவனுக்கு வாந்தி-மயக்கம் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

23,July, 2014 Leave a comment

2372014_cty22372014_cty3

கடலூர், ஜூலை.23-

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தவளை கிடந்த குளிர்பானத்தை குடித்த மாணவனுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டதை அடுத்து விற்பனை செய்த கடை மற்றும் உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாணவன்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் தச்சு தொழிலாளி. இவரது மகன் சூரியா(வயது 12). 7-ம் வகுப்பு மாணவன்.

நேற்று மாலையில் சூரியா போடிச்செட்டி தெருவில் உள்ள கோபிக்கண்ணன் என்பவரின் பெட்டிக் கடையில் பன்னீர்சோடா ஒன்றை வாங்கி குடித்தான். சில நிமிடத்தில் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அப்போது குளிர்பான பாட்டிலை பார்த்தபோது அதன் உள்ளே சிறிய தவளை ஒன்று செத்து மிதந்தது தெரியவந்தது.

இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் சூரியாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

அதிகாரிகள் சோதனை

குளிர்பான பாட்டிலில் தவளை கிடந்த தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் அதிகாரிகள் நந்தகுமார், சுப்பிரமணியன், நல்லத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தவளை கிடந்த குளிர்பான பாட்டிலை பார்த்தனர்.

பின்னர் அது பற்றி கடை உரிமையாளர் கோபிகண்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையிடம் இருந்து குளிர்பான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த இதர குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர். இதில் காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆய்வு அறிக்கை அடிப்படையில்

பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தவளை கிடந்த குளிர்பானத்தை குடித்த மாணவனுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த கடையை சோதனை செய்ய வந்தோம்.

பின்னர் தவளை கிடந்த அந்த குளிர்பான பாட்டிலை கைப்பற்றி இருக்கிறோம். அதன் மாதிரியை சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்போம். அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடைக்கு சீல் வைத்தோம். அதைத் தொடர்ந்து குளிர்பானத்தை உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலையை ஆய்வு செய்தோம். தொழிற்சாலை வளாகத்தினுள் ஏராளமான தவளைகள் துள்ளி ஓடியதை பார்த்தோம். சுகாதாரமற்ற நிலையில் குளிர்பானம் தயார் செய்த தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குளிர்பான பாட்டிலுக்குள் தவளை கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியதால் அக்கம் பக்கத்தினர் கடையின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

கடலூர்: தவளை கிடந்த சோடா குடித்த மாணவனுக்கு வாந்தி–மயக்கம்

23,July, 2014 Leave a comment

கடலூர்: தவளை கிடந்த சோடா குடித்த மாணவனுக்கு வாந்தி–மயக்கம்

கடலூர், ஜூலை.23–

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் சூரியா (வயது 12). 7–ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலையில் போடிச்செட்டி தெருவில் உள்ள கோபிக்கண்ணன் என்பவரின் பெட்டிக் கடையில் பன்னீர்சோடா வாங்கி குடித்தான். சில நிமிடத்தில் அவனுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. அந்த பாட்டிலை பார்த்தபோது அதன் உள்ளே சிறிய தவளை ஒன்று செத்து மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்து சூரியாவை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாட்டிலில் தவளை கிடந்த தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கடை உரிமையாளர் கோபிகண்ணனிடம் விசாரணை நடத்தியபோது நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து குளிர்பான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து கடையில் இருந்த குளிர்பான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். குளிர்பானத்தை உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலையையும் ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற குளிர்பானம் தயார் செய்த தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்தார்கள்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

பன்னீர்சோடாவில் "தவளை’: பெட்டிக் கடைக்கு "சீல்’

23,July, 2014 Leave a comment

கடலூர்: கடலூரில், தவளை இறந்து கிடந்த பன்னீர்சோடாவை குடித்த பள்ளி சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீனுவாசன் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் சூர்யா (11) அதே பகுதியில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். நேற்று, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சூர்யா, மாலை 6:30 மணிக்கு, போடி செட்டித் தெருவில் உள்ள, பெட்டிக் கடையில் பன்னீர்சோடா வாங்கி குடித்துக் கொண்டே வீட்டிற்கு நடந்து சென்றான். சிறிது தூரம் சென்றதும் பாட்டில் மேலே ஒட்டப்பட்ட லேபிளை பிரித்து பார்த்தபோது, பாட்டில் உள்ளே சிறிய தவளை இறந்து மிதப்பது தெரிந்ததும் சிறுவன் அதிர்ச்சியடைந்தான். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து, மயக்கம் ஏற்பட்டது. வீட்டிற்கு சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதும், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூர்யாவை, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, நகர உணவு பாதுகாப்பு அதிகாரி நந்தகுமார் ஆகியோர், சிறுவன் பன்னீர்சோடா வாங்கிய கடைக்குச் சென்று ஆய்வு செய்து<, கடைக்கு "சீல்’ வைத்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
Follow

Get every new post delivered to your Inbox.

Join 562 other followers