Home > DISTRICT-NEWS, Namakkal > உணவு மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும்

உணவு மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும்

28,November, 2014

மூன்று வேளையும் தவறாமல் 500 கிராம் வீதம் உணவு மாதிரி எடுத்து வைக்க பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் வட்டாரங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரி உணவு விடுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில், அலுவலர்கள் ஆர்.பாலு, பி.முத்துசாமி, டி.மாதேஸ்வரன் ஆகியோர் விடுதிகளில் உள்ள சமையலறை, உணவுப் பொருள் சேமிப்பு அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

சமையலர்கள் தலைக் கவசம், ஏப்ரான், கையுறைகளை அணிந்து உணவைத் தயாரிக்கவும், உணவு பரிமாறவும் வேண்டும். மூன்று வேளையும் தவறாமல் 500 கிராம் வீதம் உணவு மாதிரி எடுத்து வைக்க வேண்டும்.

உணவு தயாரித்த பின்னர், காப்பாளரோ அல்லது மேலாளரோ சாப்பிட்டுப் பார்த்து அதனைப் பதிவேட்டில் பதிவு செய்தபின் அரை மணி நேரம் கழித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சேமிப்பு அறையில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருள்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் சேகரித்து உணவுப் பகுப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

உணவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal
  1. 28,November, 2014 at 11:11 am

    பாதுகாப்பான உணவிற்கு – விடுதிகளின் சுற்றுப்புறம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். GMP, GHP கடைபிடிக்க வேண்டும்.பூச்சி தடுப்பு நடவடிக்கை வேண்டும் .மூன்றும் இருக்கிறதா என ஆய்வும் வேண்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.