Home > DISTRICT-NEWS, The Nilgiris > உதகை அருகே 50 கோழிகள் திடீர் பலி: பறவைக் காய்ச்சலா என மக்கள் அச்சம்

உதகை அருகே 50 கோழிகள் திடீர் பலி: பறவைக் காய்ச்சலா என மக்கள் அச்சம்

30,November, 2014

பாக்னா பகுதியில் இறந்த கோழியை ஆய்வு செய்கிறார் கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் மனோகரன், உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர்

பாக்னா பகுதியில் இறந்த கோழியை ஆய்வு செய்கிறார் கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் மனோகரன், உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர்

உதகை அருகே 50 கோழிகள் திடீரென உயிரிழந்தன. இதனால் அவை பறவை காய்ச்சலால் இறந்திருக்கக்கூடும் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் நாடுகாணி, பந்தலூர் வழியாகச் செல்லும் சேரம்பாடி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு ஆகிய முக்கிய சாலைகளில் சுகா தாரத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளா வில் இருந்து நீலகிரிக்குள் நுழை யும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

கோழிகள் பலி

இதனிடையே நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாக்னா, மோர்கடவு ஆகிய பகுதி களில் வளர்ப்புக் கோழிகள் கடந்த இரு தினங்களாக திடீர் திடீரென இறந்து வருகின்றன. பாக்னா பகுதி

யில் இரு இடங்களில் 15 கோழி களும், மோர்கடவு பகுதியில் சுமார் 35 கோழிகளும் இறந்துள்ளன. இதனால், மக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் மனோகரன் தலைமையில் ஒரு குழுவினர் இறந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர். ஆட்சியர் பொ.சங்கர், அப் பகுதிகளை ஆய்வு செய்தார். இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

பாக்னா, மோர்கடவு பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறந்துள்ளன. அவற்றுக்கு பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஏதாவது நுண்ணுயிர் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் இறந்த கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் டாம்ப்ளூ மாத்திரைகள் வழங்க அறிவுறுத்தபட்டுள்ளது. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றார்.

உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி தலைமையில் உதகை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சிச் கடைகளில் ஆய்வு செய்தனார்.

ரவி கூறும்போது, ‘கேரளாவின் தென் பகுதியில் பறவைக் காய்ச்சல் பீதி இல்லை. இப் பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் கோழிகள் செல்கின்றன. நீலகிரி மாவட்டம் தென் கேரளாவை ஒட்டியுள்ளதால் பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்பில்லை. மாவட்டம் முழுவதும் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.