Home > DISTRICT-NEWS, Namakkal > வாத்து, கோழி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

வாத்து, கோழி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

30,November, 2014

வாத்து, கோழி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

பரமத்திவேலூர், நவ. 30–

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வாத்து, கோழி மற்றும் இறைச்சி கடைகளை மாவட்ட கலெக்டர் தட்சணாமூர்த்தியின் உத்தரவுபடியும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் அறிவுரைப்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைக்காய்ச்சல் பறவுவது பற்றி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி வாத்து, கோழி போன்ற பறவைகளை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கக் கூடாது எனவும் தேவைக்கேற்ப இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் கோழி மற்றும் வாத்துக்களை உள்ளூரிலேயே வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சிவசண்முகம், சிவநேசன் ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.

குளிர்சாதனபெட்டிகளில் இறைச்சிகளை நீண்ட நேரம் வைத்து பயன்படுத்தக்கூடாது எனவும், அவர்கள் அறிவுறுத்தினர்.

நோய்வாய்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான வாத்து, கோழி மற்றும் பறவை இனங்களை சமைத்து சாப்பிடக்கூடாது எனவும் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

மேலும் வாத்து, கோழி மற்றும் இறைச்சி கடைகளை திடீர் ஆய்வு செய்து எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Namakkal