Home > DISTRICT-NEWS, Thiruvallur > திருப்போரூர் சோதனை நடத்த கோரிக்கை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்கள் தரமானதா? சோதனை நடத்த கோரிக்கை

திருப்போரூர் சோதனை நடத்த கோரிக்கை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்கள் தரமானதா? சோதனை நடத்த கோரிக்கை

2,December, 2014
 

திருப்போரூர், டிச.2:

திருப்போரூர் மீன் மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்கள் தரமானதா, ஐஸ் மீனா என அதிகாரிகள் சோதனை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்போரூரில் 100 ஆண்டுக்கு மேலாக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம், சூளேரிகாடு, பட்டிபுலம், சாலவான்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை இங்கு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நீண்டகாலமாக கட்டுப்பாடுடன் தரமான மீன்களை விற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மீனவ பெண்கள் மீன்களை விற்று வந்தனர்.
ஒரு காலத்தில் ஐஸ்ஸில் வைத்த மீன்களை கொண்டு வந்து இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்தால் அவர்களை மீனவ பஞ்சாயத்து சபையினர் கண்டித்து அபரா தம் விதிப்பார்கள். காலப்போக்கில் இந்த கட்டுப் பாடு தளர்த்தப்பட்டு ஐஸ்சில் வைத்த மீன்கள் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டாக சென்னையில் இருந்து லோடு ஆட்டோக்களில் மீன்கள் கொண்டு வரப்பட்டு மார்க்கெட் வளாகத்தில் ஐஸ் பெட்டிகளில் அடுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சில நேரத்தில் 10 நாட்கள் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களை வாங்கி செல்லும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். கட்டுமரம் மற்றும் சிறு பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் அன்றைய தினமே விற்கப்படுகிறது. ஆனால் சென்னை போன்ற பகுதிகளில் விசை படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் 15 நாட்கள் வரை ஐஸ் பெட்டியில் வைத்து விற்கப்படுவதால் மீன்களின் சுவை மாறிவிடுகிறது.
திருப்போரூர் மீன் மார்க்கெட்டில் விற்கப் படும் மீன்கள் புதியதா? தரமானதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur
  1. 4,December, 2014 at 2:56 pm

    Food Safety & Fisheries Dept should sort out these issues.

  1. No trackbacks yet.
Comments are closed.