Home > DISTRICT-NEWS, Tirunelveli > சுகாதார துறையினர் தூக்கம் கலையுமா? ஆலங்குளம் கடையில் வாங்கிய பக்கோடாவில் பல்லி

சுகாதார துறையினர் தூக்கம் கலையுமா? ஆலங்குளம் கடையில் வாங்கிய பக்கோடாவில் பல்லி

18,December, 2014
 

ஆலங்குளம் டிச. 17:

நெல்லை & தென்காசி மெயின் ரோட்டில் ஆலங்குளம் முக்கிய வியாபார ஸ்தலமாக திகழ்கிறது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களும் வசதியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் ஸ்வீட் கடைகள் உள்ளன.

அதே நேரத்தில், பெரும்பாலான கடைகளின் உணவு மற்றும் பண்டங்கள் தயாரிக்கும் சமையல் அறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. கடந்த வாரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வழங்கப்பட்ட புரோட்டா சால்னாவில் தவளை கிடந்துள்ளது. பெரிய பிரச்னைக்கு பிறகு வாடிக்கையாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் தனது குழந்தைகளுக்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். வீட்டில் குழந்தைகள் பொட்டலத்தை திறந்தபோது, அதில் கருகிய நிலையில் ஒரு பல்லி கிடந் ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கதிரவன் கூறுகையில், வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது குழந்தைகளுக்கு ஏதாவது பண்டங்கள் வாங்கி செல்வேன். கார்த் திகை மாதம் என்பதால் முட்டை கூட சாப்பிடாத குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்வதற்காக பக்கோடா வாங்கி சென்றேன். பொட்டலத்தை திறந்து பார்த்தபோது இறந்த நிலையில் கருகி கருவேப்பிலை போன்று ஒரு பல்லி கிடந்தது. முதலிலேயே பார்த்தால் எனது குழந்தைகளுக்கு எந்த பிரச்னையும் இன்றி தப்பித்து இது குறித்து, சுகாதார துறைக்கு எனது நண்பர் மூலம் புகார் செய்துள் ளேன் என்றார்.

சுகாதார துறையின ரும் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் ஸ்வீட் கடைகளின் சமையலறைகளை பார்வையிட்டு, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli